கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>டி.இ.டி. தேர்வில் கூடுதல் மார்க் கிடைக்குமா? பார்வையற்றோர் பரிதவிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில், பார்வையற்றோருக்கு கூடுதல் நேரம் வழங்கப்படாத காரணத்தால், அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்க முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். இதனால், விடைத்தாள் மதிப்பீட்டில், தங்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குமாறு, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.) சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில், வினாக்கள் கடினமாக இருந்ததால், குறித்த நேரத்துக்குள் விடை அளிக்க முடியாமல் போனதாக, பலர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் இதுபோன்ற தேர்வு நடப்பது இதுவே முதல் முறை என்பதால், சாதாரண தேர்வுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் சலுகை நேரம் கூட, இந்தத் தேர்வில் வழங்கப் படவில்லை. பார்வையற்ற தேர்வர்கள், "ஸ்கிரைப்&' எனும் உதவியாளரின் உதவியுடன் தான், தேர்வு எழுதுகின்றனர். இதனால், சாதாரண தேர்வர்களை விட, பார்வையற்றோருக்கு கூடுதல் நேரம் தேவை.
இதுகுறித்து,கோவையைச் சேர்ந்த பார்வையற்ற உமா கூறியதாவது: பிற அரசு தேர்வுகளில் வழங்கப்படுவது போல், இந்தத் தேர்விலும் கூடுதல் நேரம் ஒதுக்கப்படும் என எதிர்பார்த்தோம். நேரமின்மையால், 117 கேள்விகளுக்கு மட்டுமே, என்னால் விடை அளிக்க முடிந்தது. இனி நடக்கும் தேர்வுகளிலாவது, பார்வையற்றோருக்கு கூடுதல் நேரம் ஒதுக்க, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நாடாளுமன்றத் தேர்தல் 2024 - வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் - Timewise Check List...

     நாடாளுமன்றத் தேர்தல் 2024 - வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் - Timewise Check List... >>> தரவிறக்கம்...