கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோடு பல்கலைக்கழகமானது, தன்னிடம்
பட்டப்படிப்பு படிக்கும் தனியார் மாணவர்களின் தேர்வுத் தாள்களைத்
திருத்தும் பணிக்கு, வெறும் பட்டப்படிப்பு படித்தவர்களை அமர்த்த
முடிவுசெய்துள்ளது.
தகுதிவாய்ந்த பேராசிரியர்கள், 1 தேர்வுத் தாளுக்கு ரூ.10 மட்டுமே
தரப்படும் இந்த திருத்துதல் பணியை செய்ய பெரும்பாலும் முன்வருவதில்லை.
எனவே, தனியார் மாணவர்கள் எழுதிய தேர்வுத்தாள்கள் மாதக் கணக்கில் தேங்கி,
அம்மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
எனவே, இந்த சிக்கலைப் போக்க, முதுநிலைப் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம்
55% மற்றும் அதற்கு மேலே எடுத்த பட்டதாரிகளைக் கொண்டு, அந்த மாணவர்களின்
விடைத்தாள்களை திருத்தும் முடிவை கோழிக்கோடு பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.
இவ்வாறு தெரிவுசெய்யப்படும் பட்டதாரிகள், கடந்த 5 ஆண்டுகளுக்குள்
தங்களின் முதுநிலைப் படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண்டும் என்ற
நிபந்தனையும் உண்டு. இந்த பட்டதாரிகள்தான், தனியார் மாணவர்களின் இளநிலை
மற்றும் முதுநிலை விடைத்தாள்களை திருத்துவார்கள்.
கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் இந்த முடிவை பல மாணவர் அமைப்புகள்
எதிர்த்துள்ளன. மேலும், பல கல்வியாளர்களும் இந்த முடிவு குறித்து அதிர்ச்சி
தெரிவித்துள்ளனர்.