மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்க மலைகளில் "டிரக்கிங்'
பயிற்சியளிக்க விளையாட்டுத்துறை முடிவுசெய்துள்ளது. தமிழகத்தில் விளையாட்டு
துறை சார்ந்த பள்ளிகள், விடுதிகள் உள்ளன. இங்கு ஏழாம் வகுப்பு முதல் பிளஸ்
2 வரை மாணவர்கள் தங்கி இலவசமாக படித்துவருகின்றனர். நடப்பு கல்வியாண்டில்,
ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் உடல்,
மனத்திறன் குறித்த ஆய்வு செய்ய விளையாட்டு துறை முடிவு செய்துள்ளது.
இதன்படி மாணவர்களுக்கு ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய மலைவாசஸ்தலங்களில்
மலையேற்ற பயிற்சியளிக்கப்படவுள்ளது. இதன் மூலம் விளையாட்டு வீரர்களின்
மனநிலையை அறிந்து, அதற்கேற்றபடி பயிற்சியளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, விளையாட்டு விடுதி மாணவர்களை குழுக்களாக அழைத்து சென்று
"டிரக்கிங்' பயிற்சி தர விளையாட்டு துறை ஏற்பாடுகளை செய்துவருகிறது.