"இடைநிற்றல் போன்றவற்றை தடுத்து, பள்ளி கல்விக்கு 14 ஆயிரத்து 552 கோடி
ரூபாய் முதல்வர் ஒதுக்கி உள்ளார்" என அமைச்சர் பன்னீர்செல்வம்
தெரிவித்துள்ளார். ராஜபாளையம் விழாவில்
அவர் பேசியதாவது: மூன்றாவது முறையாக முதல்வர் ஜெயலலிதா நல்லாட்சி
நடத்துகிறார். கல்வி, வணிகம்
இருந்தால் தான் சமூக பொருளாதாரம் முன்னேறும். கல்விதுறையில் எண்ணற்ற சலுகைகளை முதல்வர் அறிவித்து வருகிறார். பள்ளி
கல்விக்கு 14 ஆயிரத்து 552 கோடி, உயர்கல்விக்கு 2800 கோடி ரூபாய் முதல்வர்
ஒதுக்கி உள்ளார். தமிழகத்தின் தொழில், திட்டம், தொலைநோக்கு பார்வையை மற்ற
மாநிலங்கள் பின்பற்றுகின்றன."
என பேசினார். பின்னர் அரசு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு கோப்பை வழங்கினார்.