>>>சுற்றுச்சூழல் மன்றங்கள் 59 பள்ளிகளுக்கு நிதி

மதுரை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மன்றங்கள் துவங்க, 59 பள்ளிகளுக்கு ரூ.1.47 லட்சம் வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மரம் நடுதல், விழிப்புணர்வு கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்துவது, களப்பணிகளில் ஈடுபடுவதற்காக, பள்ளி கல்வி துறை சார்பில் ரூ.1.47 லட்சம் ஒதுக்கப்பட்டது. சி.இ.ஓ., அலுவலகத்தில் நடந்த விழாவில், 59 பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் தலா ரூ.2,500 க்கான காசோலைகளை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி வழங்கினார். . மாவட்டத்தில் இதுவரை 40 நடுநிலை பள்ளிகளில் இம்மன்றங்கள் உள்ளன. மேலும் 59 பள்ளிகளில் மன்றம் துவங்கப்படுகின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் 50 மாணவர்களை தேர்வு செய்து, அப்பள்ளியை சேர்ந்த ஒரு ஆசிரியர், மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவர்,'' என, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி தெரிவித்தார்.