தமிழகத்தில் அனைத்து பள்ளிகள் விபரங்களை சேகரிக்க, பள்ளிக்கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது. தனியார், சுயநிதி, மெட்ரிக், கேந்திரிய வித்யாலயா,
சி.பி.எஸ்.இ., ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில், மாணவர்கள், ஆசிரியர்கள்,
கட்டடங்கள், கருவிகள், பள்ளி அமைவிடம் என, அடிப்படை விபரங்கள் சேகரிக்கப்பட
உள்ளன. முதல் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் கல்வி இயக்கம், உயர்,
மேல்நிலைப்பள்ளிகளில் அனைவருக்கும் இடை நிலை கல்வி இயக்கம் சார்பில்
சேகரிக்கப்பட உள்ளது. அடுத்த வாரத்தில் துவங்க உள்ள, இந்தபணிகளின் தகவல்கள்
அனைத்தும், ஒரு மாதத்திற்குள் கம்ப்யூட்டரில் பதிவு
செய்து,பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக தகவல்
தொகுப்பு திரட்டும் படிவமும் வழங்கப்பட்டுள்ளது.