குரூப்-2 பணியிடங்களில், நிரம்பாமல் உள்ள, 664 காலி இடங்களை நிரப்ப,
இம்மாதம், 10, 12 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், இரண்டாம்
கட்ட கலந்தாய்வு நடக்கிறது. குரூப்-2 தேர்வில் அடங்கிய, 3,475
பதவிகளை நிரப்ப, அக்டோபர், 15 முதல், 20 வரை, பணி ஒதுக்கீடு உத்தரவு
வழங்கும் கலந்தாய்வு நடந்தது. இதில், 2,811 தேர்வர் மட்டுமே, வெவ்வேறு
பதவிகளுக்கு, பணி ஒதுக்கீடு உத்தரவுகளை பெற்றனர். மீதமுள்ள, 664 பதவிகளுக்கு, விண்ணப்பதாரர்கள் எவரும் விருப்பம்
தெரிவிக்கவில்லை. இதனால், அந்த காலி பணியிடங்களை நிரப்ப, இம்மாதம், 10,12
தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், மீண்டும் கலந்தாய்வு
நடக்கிறது. இதற்கு, 1,267 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர்
விவரங்கள் மற்றும் இவர்களுக்கான அழைப்பு கடிதங்கள், தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.இவர்களில், 664 பேர் மட்டுமே, காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவர். அழைக்கப்படும் அனைவருக்கும், வேலை கேட்கும் உரிமை
கிடையாது. இதில் பங்கேற்க தவறுபவர்கள், பதவி ஒதுக்கீட்டுக்கான முன்னுரிமையை
இழப்பர். மேலும், மேலும் ஒரு கலந்தாய்வு வாய்ப்பு வழங்கப்படாது. இவ்வாறு
தேர்வாணைய செயலர் அறிவித்துள்ளார்.