>>>இந்தியாவின் சலார் ஜங் அருங்காட்சியகம்



சலார் ஜங் அருங்காட்சியகம் இந்தியாவின் தென்மாநிலங்களில் ஒன்றான ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரான ஐதராபாத்தில் மூசி ஆற்றின் தென்கரையில் உள்ள தார் உல் சிஃபாவில் அமைந்துள்ளது. இது ஒரு கலைப் பொருட்களுக்கான அருங்காட்சியகம் ஆகும். இங்கே யானைத் தந்தம், சலவைக்கல் போன்றவற்றால் செய்யப்பட்ட பல விலைமதிப்பற்ற பொருட்கள் உள்ளன.
இது இந்தியாவின் மூன்றாவது பெரிய அருங்காட்சியகமும், ஒரு மனிதனால் சேகரிக்கப்பட்ட அரும்பொருட்களின் தொகுதிகளில் உலகிலேயே மிகப்பெரியதும் இதுவாகும். கிபி முதலாம் நூற்றாண்டிலிருந்து பல நாகரிகங்களையும் சேர்ந்த மதிப்பு மிக்க சேகரிப்புக்களைக் கொண்ட இந்த அருங்காட்சியகம் இந்தியா முழுவதும் பெயர் பெற்றது.

ஐதராபாத்தின் ஏழாவது நிசாமின் பிரதம அமைச்சரான மூன்றாம் நவாப் மிர் யூசுஃப் அலி கான் சலார் ஜங் (1889-1949) தனது வருமானத்தில் குறிப்பிடத் தக்க அளவைச் செலவு செய்ததுடன் 35 ஆண்டுகள் முயன்று இந்த அரும் பொருட்களைச் சேகரித்தார். அவரது முன்னோரது மாளிகையான திவான் தேவ்டியில் அவர் விட்டுச்சென்ற இந்தப் பொருட்களைப் பயன்படுத்தி முதலில் அந்த மாளிகையிலேயே ஒரு தனியார் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருந்தது.

இதனை 1951 ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேரு திறந்து வைத்தார். சலார் ஜங் சேகரித்த பொருட்களில், இப்போது இருப்பது பாதியளவே எனப் பலர் கருதுகிறார்கள். இவர் மணம் செய்து கொள்ளாது தனியே வாழ்ந்ததால் இப் பொருட்களின் பாதுகாப்புக்கு அவர் தனது அலுவலர்களையே நம்பியிருந்தார். ஆனால் அவர்கள் அவற்றில் பலவற்றை எடுத்துக் கொண்டு போய்விட்டதாகச் சொல்லப்படுகிறது.

மேலும் சில பொருட்கள், திவான் தேவ்டியில் இருந்து பொருட்களை இப்போதுள்ள கட்டிடத்துக்கு மாற்றும் போது தொலைந்தோ களவுபோயோ விட்டதாகத் தெரிகிறது. இந்த அருங்காட்சியகம் 1968 ஆம் ஆண்டில் இப்போதுள்ள இடத்துக்கு மாற்றப்பட்டது. இது 1961 ஆம் ஆண்டின் சலார் ஜங் அருங்காட்சியகச் சட்டத்தின் கீழ், ஆந்திரப் பிரதேசத்தின் ஆளுனரைப் பதவிவழித் தலைவராகக் கொண்ட நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை ஒன்றினால் நிர்வகிக்கப்படுகிறது.


இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள்
அசாம்
  • தொல்லியல் அருங்காட்சியகம், சிறீ சூரியபாகர்
அரியானா
  • தொல்லியல் அருங்காட்சியகம்,தானேசர்

ஆந்திரப் பிரதேசம்
  • சலார் ஜங் அருங்காட்சியகம், ஐதராபாத், ஆந்திரப் பிரதேசம்
  • தொல்லியல் அருங்காட்சியகம், சந்திரகிரி
  • தொல்லியல் அருங்காட்சியகம், அமராவதி
  • தொல்லியல் அருங்காட்சியகம், கொண்டாப்பூர்
  • தொல்லியல் அருங்காட்சியகம், நாகார்சுனகொண்டா

இமாசலப் பிரதேசம்
  • தொல்லியல் அருங்காட்சியகம், காங்ரா
இராசசுத்தான்
  • டீக் அருங்காட்சியகம்
  • தொல்லியல் அருங்காட்சியகம், கலிபாங்கன்

உத்தரப் பிரதேசம்
  • தாஜ் அருங்காட்சியகம், ஆக்ரா
  • 1857 நினைவு அருங்காட்சியகம், லக்னோ
  • தொல்லியல் அருங்காட்சியகம், சாரநாத்
உத்தராஞ்சல்
  • தொல்லியல் அருங்காட்சியகம், சகேசுவர்

ஒரிசா
  • ஒரிசா மாநில அருங்காட்சியகம்
  • தொல்லியல் அருங்காட்சியகம், கொனாரக்
  • தொல்லியல் அருங்காட்சியகம், ரத்தினகிரி

கர்நாடகா
  • விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் - பங்களூரு
  • தொல்லியல் அருங்காட்சியகம், ஐஃகோல்
  • தொல்லியல் அருங்காட்சியகம், பாதமி
  • தொல்லியல் அருங்காட்சியகம், கோல் கும்பாசுத் தொகுதி
  • தொல்லியல் அருங்காட்சியகம், ஹளபீடு
  • தொல்லியல் அருங்காட்சியகம், ஹம்பி
  • திப்பு சுல்தான் அருங்காட்சியகம், சிறீரங்கப்பட்டினம்

குசராத்
  • கலிக்கோ நெசவுப்பொருள் அருங்காட்சியகம் - அகமதாபாத்
  • தொல்லியல் அருங்காட்சியகம், லோத்தல்

கேரளா
  • மட்டஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம், கொச்சி

கோவா
  • தொல்லியல் அருங்காட்சியகம், பழைய கோவா
  • மெழுகு உலகம் - மெழுகு அருங்காட்சியகமும் ஓவியக்கூடமும், கோவா

தமிழ்நாடு
  • அரசு அருங்காட்சியகம், சென்னை
  • மெழுகு உலகம் - மெழுகு அருங்காட்சியகமும் ஓவியக்கூடமும், ஊட்டி
  • அரசு அருங்காட்சியகம், இராணி மங்கம்மாள் கொலு மண்டபம், திருச்சிராப்பள்ளி.
  • காந்தி அருங்காட்சியகம், மதுரை

தர்மசாலா
  • திபேத்திய ஆக்கங்களுக்கான நூலகமும் சுவடிக்கூடமும்

பஞ்சாப்
  • தொல்லியல் அருங்காட்சியகம், ரோப்பார்
  • அரசு அருங்காட்சியகமும் ஓவியக்கூடமும், சண்டிகார்

பீகார்
  • தொல்லியல் அருங்காட்சியகம், புத்தகாயா
  • நாளந்தா தொல்லியல் அருங்காட்சியகம்
  • தொல்லியல் அருங்காட்சியகம், வைசாலி
  • தொல்லியல் அருங்காட்சியகம், விக்ரம்சீலா

மகாராட்டிரம்
  • வேல்சு இளவரசர் அருங்காட்சியகம், மும்பாய்

மத்தியப் பிரதேசம்
  • தொல்லியல் அருங்காட்சியகம், சண்டேரி
  • தொல்லியல் அருங்காட்சியகம், குவாலியர்
  • தொல்லியல் அருங்காட்சியகம், காசுராகோ
  • தொல்லியல் அருங்காட்சியகம், சாஞ்சி

மேற்கு வங்காளம்
  • பிர்லா தொழில்துறை, தொழில்நுட்ப அருங்காட்சியகம் - கொல்கத்தா
  • இந்திய அருங்காட்சியகம் - கொல்கத்தா
  • ரபீந்திர பாரதி அருங்காட்சியகம் - கொல்கத்தா
  • கோச் பிகார் அரண்மனை அருங்காட்சியகம்
  • அசர்துவாரி அரண்மனை அருங்காட்சியகம், முர்சிதாபாத்
  • தொல்லியல் அருங்காட்சியகம், தம்லுக்

டில்லி
  • தேசிய காந்தி அருங்காட்சியகம்
  • தேசிய அருங்காட்சியகம்
  • தொல்லியல் அருங்காட்சியகம், புராண கிலா
  • தேசிய தொடர்வண்டி அருங்காட்சியகம்
  • நேரு அருங்காட்சியகமும் கோளகமும்
  • இந்திய போர் நினைவு அருங்காட்சியகம்
  • மும்தாசு மகால் அருங்காட்சியகம்
  • சங்கரின் அனைத்துலக பொம்மைகள் அருங்காட்சியகம்