பெரியார் பல்கலையில், ஐந்தாண்டுகளுக்கும் மேலாக தேர்ச்சி
பெறாத நிலுவைத் தாள்களை வைத்திருக்கும் மாணவ, மாணவியருக்கு, மீண்டும் பழைய
பாடத்திட்டத்திலேயே தேர்வெழுத, தற்போது வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது.
பெரியார் பல்கலை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: பெரியார் பல்கலை இணைவு
பெற்ற கல்லூரி களில், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு படித்து,
வெளிச்சென்ற மாணவர்கள், தேர்ச்சி பெறாத நிலுவைத் தாள்களை, ஐந்தாண்டுகள்
படிப்புக் காலத்துக்குள் முடிக்க வேண்டியது வழக்கம். இவ்வாறு, படிப்பு
ஆண்டு, ஐந்தாண்டுகள் நிறைவடைந்த நிலையில் உள்ளவர்களுக்கும், அதற்கு முந்தைய
ஆண்டில் பயின்று தேர்ச்சி பெறாத நிலுவைத் தாள் வைத்திருக்கும்
மாணவர்களுக்கும், தற்போது இறுதியாகப் படித்த பாடத்திட்டத்திலேயே தேர்வெழுத
வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், டிச.,
14ம் தேதிக்குள், பெரியார் பல்கலைக்கு வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை
தாங்கள் பயின்ற கல்லூரியிலேயே பெற்று, பூர்த்தி செய்து, முதல்வர் வாயிலாக
அனுப்ப வேண்டும். இதற்கான கால அட்டவணை மற்றும் தேர்வு மைய விவரம் பின்னர்
தெரிவிக்கப்படும்.