ஐகோர்ட் உத்தரவை அடுத்து, இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைப்படி,
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
முதலாம் ஆண்டு, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தேர்வு
மதிப்பீட்டு முறையில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்
கழகம், புதிய விதிமுறைகளை கொண்டு வந்தது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில்
தொடரப்பட்ட வழக்கில், மருத்துவ மாணவர்களுக்கு சாதகமாக, நேற்று தீர்ப்பு
வெளியானது. இதையடுத்து, இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைப்படி,
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளை,
மருத்துவப் பல்கலை நிர்வாகம், இணைய தளத்தில், நேற்று மாலை வெளியிட்டது.
இதில், எம்.பி.பி.எஸ்., மாணவர்களின் தேர்ச்சி விகிதம், 66.66 சதவீதத்தில்
இருந்து, 84.88 சதவீதமாக அதிகரித்துள்ளது என, பல்கலை வட்டாரங்கள்
தெரிவித்தன.