"நீரிழிவு நோய் ஏற்பட, முக்கிய காரணம், உடல் உழைப்பு இல்லாததே' என, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். நவம்பர், 14ம் தேதி, நீரிழிவு நோய் நாளாக அனுசரிக்கப்படுகிறது. இதை
முன்னிட்டு, "அசோசேம்' அமைப்பின், டில்லி தலைவர் மற்றும் செயலர்,
டி.எஸ்.ராவத் கூறியதாவது:நொறுக்குத்தீனி தின்னும் பழக்கம் அதிகரிப்பு,
பேக்கேஜ் உணவுகள் அதிகம் பயன்படுத்தப்படுவது, உடல் உழைப்பு சரிவர இல்லாதது
போன்றவையே, நீரிழிவு நோய்க்கான முக்கிய காரணங்கள்.டில்லி, மும்பை, சென்னை,
கோல்கட்டா மற்றும் புனே போன்ற நகரங்களில், 500 குழந்தைகளிடம் நடத்திய
ஆய்வில், அவர்கள் யாருமே போதிய அளவு, உடற்பயிற்சி மேற்கொள்வதில்லை என்பது
தெரிய வந்தது. மேலும், அவர்களில் பெரும்பாலானோர், வீட்டை விட்டு வெளியே
சென்றே விளையாடுவதில்லை. இதனால், நீரிழிவு நோய் மட்டுமின்றி, உடல் எடை அதிகரிப்பு, மன அழுத்தம்,
ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.மைதாவால்
தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை உட்கொள்வது, கொழுப்பு சத்து மிகுந்த உணவுகளை
சாப்பிடுவது, வறுத்த, பொரித்த தின்பண்டங்கள் அதிகமாக சாப்பிடுவது
போன்றவையே நீரிழிவு நோய்க்கான காரணங்களில் முக்கியமான காரணமாக
கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.