>>>2013ல் ‌வேலைவாய்ப்பு உயரும்... சம்பள விகிதம் கு‌றைய வாய்ப்பு

2013ம் ஆண்டில் ‌நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்தாலும் பணியாளர்களின் சம்பள தொகை 11.2 சதவீதமாக இருக்கும் என சமீபத்தில் நடத்தப்பட்ட தொழில்துறை வேலைவாய்ப்பு சார்ந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. வேலைவாய்ப்பு அதிகரித்தாலும் சம்பள தொகை சராசரியாக 11.2 சதவீதம் வரையே உயரும் என எதிர்பார்ப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நடப்பு ஆண்டு சதவீதமான 12 சதவீதத்தை விட குறைவான உயர்வே எனவும் ஆய்வை நடத்திய ஹே குழுமம் தெரிவித்துள்ளது. ஹே குழுமம் நடத்திய ஆய்வில் 2013ல் சம்பள தொகையும் வேலைவாய்ப்பும் உயரும் என கண்டரியப்பட்டுள்ளது.
எழுத்தர் மற்றும் செய்திறன் பணிகள் சராசரி அளவான 11.2 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து 11.5 சதவீதம் வரை வேலைவாய்ப்பை பெற்று தர வாய்ப்பு உள்ளது. இதே போன்று ‌மேலாண்மை துறை சார்ந்த பணி வாய்ப்பும் 10.9 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுத்துறை இழப்பீட்டு அறிக்கையின்படி, தொழில்துறை சரக்குகள், அதிகம் விற்பனையாகும் நுகர் பொருட்கள், சில்லறை மற்றும் சேவை, கட்டுமானம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 410 நிறுவனங்களில் 418,414 பணிவாய்ப்புக்கள் அதிகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹே குழும அறிக்கையின் அடிப்படையில் இன்ஜினியரிங் சார்ந்த பணிகளில் புதிதாக வேலைக்கு சேரும் பட்டதாரிகளுக்கு துவக்க சம்பளம் ரூ.18,500 முதல் 25,000 வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே அதிகபட்ச ஆரம்ப கால சம்பளம் ஆகும்.
இன்ஜினியரிங்கை தொடர்ந்து முன்னணி பைனான்ஸ், அக்கவுன்ட்ஸ், ஐடி அல்லது தொலைதொடர்பு துறை நிறுவனங்களில் பணிபுரிவோரின் சம்பள தொகை உள்ளது. நிர்வாகம், சேவை, மருத்துவம், சுற்றுசூழல் துறை ஆகியன குறைந்த சம்பள தொகை கொண்டதாக உள்ளது.
சுமார் 80 சதவீதம் நிறுவனங்களில் சந்தை நிலவரம், துறை சார்ந்த வளர்ச்சி, அவற்றின் இழப்பீடு வரம்பு ஆகியவற்றின் அடிப்படையில் அந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பொதுவாக எண்ணெய் மற்றும் எரிவாயு, ரசாயனம், நுகர்பொருள் உற்பத்தி ஆகிய நிறுவனங்கள் சம்பளம் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் துறைகளில் முக்கிய இடத்தை வகிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட் மற்றும் ஐடி துறை நிறுவனங்கள் கடந்த ஆண்டு போதிய அளவு ஊக்கத்தொகையோ வேலைவாய்ப்பையோ ஏற்படுத்தி தரவில்லை