சித்த மருத்துவக் கல்லூரிகளில், ஒருங்கிணைந்த மருந்தாளுனர், நர்சிங்
தெரபிஸ்ட் பட்டயப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, இம்மாதம், 12ம் தேதி
நடக்கிறது. இதில் பங்கேற்க, அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாத
விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில், ஒருங்கிணைந்த மருந்தாளுனர் மற்றும் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இம்மாதம், 12ம் தேதி, சென்னை, அரும்பாக்கம், அரசு சித்த மருத்துவமனை வளாகத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்க, அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள், www.tnhealth.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். கல்வி கட்டணம் உள்ளிட்ட விவரங்களையும், இந்த இணையதளத்தில் பெறலாம். தமிழக அரசின் செய்திக்குறிப்பில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.