பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, அரையாண்டு பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது. பிற
வகுப்பு மாணவர்களைப் போல, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
மாணவர்களுக்கும், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள், மாவட்ட அளவில்
நடத்தப்பட்டு வந்தன. இதனால், அவர்கள், ஆண்டு பொதுத் தேர்வை எதிர்கொள்வதில்
சிரமம் ஏற்படுவதாக, அரசுக்கு தெரிய வந்தது. இதையடுத்து, காலாண்டு,
அரையாண்டு தேர்வுகளையும், ஆண்டு பொதுத் தேர்வை போல் நடத்த
உத்தரவிடப்பட்டது. இதன்படி, செப்டம்பரில், காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. இன்று முதல், அரையாண்டு பொது தேர்வுகள் துவங்குகின்றன. மாநில அளவிலான
இத்தேர்வில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஒரே
கேள்வித்தாள் மற்றும் தேர்வு அட்டவணை வழங்கப்படும். மற்ற வகுப்பு
மாணவர்களுக்கு, வழக்கம் போல், மாவட்ட அளவில் தேர்வு நடைபெறும் என,
பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.