"மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து, மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கும்
விலையில்லா, லேப் - டாப் வழங்கப்படும்' என, அரசு அறிவித்துள்ளது. தமிழக
அரசு அறிவித்த, விலையில்லா, லேப் - டாப், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு
வழங்கப்பட்டு வருகிறது. இதில், முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு
மாணவர்களுக்கு மட்டும், லேப் - டாப் வழங்கப்பட்டு வந்தது. மூன்றாம் ஆண்டு
மாணவர்களுக்கு வழங்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மூன்றாம் ஆண்டு
மாணவர்கள் விழா நடக்கும் போது ஆர்ப்பாட்டம், வகுப்புக்களை புறக்கணிப்பு
செய்து வந்தனர். சில தினங்களுக்கு முன், வாணியம்பாடி இஸ்லாமியா
கல்லூரியில், எம்.எல்.ஏ., சம்பத் குமாரை முற்றுகையிட்டனர். திருப்பத்தூரில்
சாலை மறியல் செய்தனர். கிருஷ்ணகிரியில் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை
புறக்கணித்து, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அரசு கல்லூரிகளில்
பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும்,
லேப் டாப் வழங்க தமிழக அரசு, 18ம் தேதி உத்தரவிட்டுள்ளது. உத்தரவின் நகல்
அனைத்து மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர்களுக்கு, பேக்ஸ் மூலம் நேற்று
அனுப்பி வைக்கப்பட்டது.