ஆசிரியர்கள் மாற்று பணிகளில் ஈடுபடுவதை கண்காணிக்க, பள்ளி
மேலாண்மை குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கட்டாய கல்வி
சட்டத்தின் கீழ், பள்ளிகளில் பெற்றோர் 15, ஆசிரியர் 5 பேர் கொண்ட
மேலாண்மைக்குழு அமைக்கப்படுகிறது. இவர்களில் ஆறு பேர், பள்ளி நிர்வாகத்தை
கண்காணிக்க தேர்வு செய்யப்படுவார்கள். குழு தலைவராக பெற்றோர், செயலாளராக
தலைமை ஆசிரியர் இருப்பர். பள்ளி வளர்ச்சி, மாணவர்கள் வருகை, இடைநின்றல்
மாணவர்களை சேர்த்தல், கட்டட வசதி, ஆசிரியர் மாற்று பணி செய்வதை கண்காணிக்கும்
அதிகாரமும், இக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.