>>>பேச்சுக் கலையில் வல்லவர் ஆக வேண்டுமா?

ஒரு தகவலை அனுப்புதல் என்பது, எண்ணங்களைப் பரிமாறுதல், மனோநிலை, தகவல், சிந்தனைகள், வார்த்தை அல்லது வார்த்தை வடிவத்தில் அல்லாத தகவல் தொடர்பு ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கும்.
பார்வையாளரை அறியுங்கள்
* உங்களின் பேச்சை கேட்கவிருக்கும் பார்வையாளர் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.
* திறன்வாய்ந்த பார்வையாளர்கள் எண்ணிக்கைப் பற்றிய ஒரு தோராயமான தகவலைப் பெறவும்.
* உங்களின் பேசு பொருள் குறித்து, பார்வையாளர்கள் கேள்வியெழுப்பி விடாமல் இருத்தல் முக்கியம்.
* பேச்சினூடே, பொருத்தமான நகைச்சுவையை இடம்பெற செய்தால், பார்வையாளர்களின் கவனத்தை கவர்வது எளிதாக இருக்கும்.
* பார்வையாளர்களின் நடவடிக்கையின் மூலமாக, நீங்கள் எந்த விதத்திலும், தொந்தரவு அடைந்துவிடக்கூடாது.
* பார்வையாளர்கள், தங்களின் சந்தேகங்களைக் கேட்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்க வேண்டும்.
கண்களின் வழியாக பேசுதல்
நீங்கள் பேசுகையில், உங்களது பார்வையாளர்களின் கண்களைப் பார்த்து பேசுவது மிகவும் சிறந்தது. ஏனெனில், இதன்மூலம் அவர்கள் உங்களை ஆர்வமுடன் கவனிக்கத் தொடங்குவர்.
சைகைகள்
உரையாற்றும்போது, கையசைவு மற்றும் தேவையான முக பாவனைகளை வழங்க வேண்டும். அப்போதுதான், உரை சிறப்படையும்.
உடல் மொழி
வார்த்தை ஒரு விஷயத்தை விளக்குவதை விட, உடல்மொழியானது சில சமயங்களில், நன்றாக விளக்கிவிடும். பொருத்தமற்ற உடல் மொழியானது, உங்களின் உரையையே சிதறடித்துவிடும். எனவே, சரியான உடல் மொழியை வெளிப்படுத்த பழகிக் கொள்ளுங்கள்.
உங்களின் பண்பு
பொறுமை, கண்ணியம், நேர்மறை எண்ணம், ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை போன்ற பண்புகள் உங்களின் உரையாடலில் இருப்பது மிகவும் அவசியம். அப்போதுதான், உங்களின் நன்மதிப்பு அதிகரிக்கும்.
சரியான வார்த்தைப் பிரயோகம்
சரியான அர்த்தம் விளங்காத வார்த்தைகளைப் பிரயோகிப்பதை தவிர்க்க வேண்டும். நன்கு பரிச்சயமான வார்த்தைகளை உபயோகப்படுத்துவதன் மூலமே, உங்களின் கருத்து, எளிமையாகவும், வலுவாகவும் உரியவர்களை சென்றடையும்.
சிறப்பான உச்சரிப்பு
வார்த்தைகளை சரியான முறையில் உச்சரிப்பது ஒரு தனிக்கலை. எங்கே அழுத்தம் கொடுக்க வேண்டும், எங்கே மிதமாக உச்சரிக்க வேண்டும் என்பதை முறையாக செய்தால், கேட்போர் கவரப்படுவர்.
வேகம்
கேட்பவர்கள், சரியாக புரியும்படியான வேகத்தில் பேசுவது அவசியம். எங்கே, வேகத்தை லேசாக அதிகரிக்க வேண்டும் மற்றும் எங்கே, வேகத்தை லேசாக குறைக்க வேண்டும் என்பதை தெளிவாக அறிந்துகொண்டால், வெற்றி உங்களுக்கே.
சத்தம்
உரையாற்றும்போது, எந்தளவு சத்தத்தில் பேசினால் சரியாக இருக்கும் என்பதை அறிந்திருத்தலும் முக்கியம். பேச்சுக் கலையில், தேவையான அளவு சத்தம் என்பது ஒரு முக்கியமான அம்சம்.
மேற்கூறிய காரணிகளை நீங்கள் தெளிவாக கற்றுத் தேர்ந்துவிட்டால், பேச்சுக் கலையில் நீங்கள் ஒரு வல்லவராக ஜொலிப்பீர்கள்.