ஒருவன்
தன் கழுதை மேல் சுமை ஏற்றிக் கொண்டிருக்கும் போது எதிரிகள் வருவதைப்
பார்த்தான், பயந்துபோய், “கழுதையே வா! நாமிருவரும் ஒடிப்போய்விடலாம்.
எதிரிகள் வருகிறார்கள் ” என்றான்.
கழுதை, “நான் வரவில்லை. நீ ஓடு!” என்றது.
”ஏன் என்றான் கழுதைக்கு சொந்தக்காரன்.?”
”எதிரிகளுக்கும் பொதி சுமக்கத்தானே போகிறேன். உன்னுடன் வந்தால் எனக்கு சுமை குறையப்போகிறதா ?” என்றது.
நீதி: அரசு மாறும்போது, ஏழை மக்களுக்கு நிகழும் ஒரே மாற்றம் எஜமானர்களின் பெயர் மட்டுமே