>>>வாட்சன்...

 
வாட்சன்... கிரகாம் பெல் பேசும் திறனற்ற பிள்ளைகளுக்கு பேச வைக்கும் பயிற்சிகளை தொடர்ந்து வழங்கியபொழுது அவருக்கு உதவியாளராகச் சேர்ந்தார்.அவர் பணம் பெற்றுக்கொள்ளாத அப்ரெண்டிஸ் ஆக கிரகாம் பெல்லுக்கு தேவையான பாகங்கள் தயாரிக்கும் மெசின் கடையில் வேலைப்பார்த்தார். அங்கே இரண்டு வருடங்கள் வேலைபார்த்த பின் கிரகாம் பெல்லிடம் வேலைக்கு சேர்ந்தார்.

பெல்லின் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு முக்கியமான காரணமாக இவர் இருந்தார். இருவரும் இணைந்து முதல் தொலைபேசியை இரவுபகலாக உழைத்து உருவாக்கினார்கள். பாஸ்டனில் மேல் தளம் மாறும் கீழ்த்தளத்துக்கு இடையே ஒயரின் மூலம் இணைப்பு கொடுத்திருந்தார்கள். வாட்சன் கீழ்த்தளத்தில் இருந்தார். கிரகாம்பெல் மேலிருந்து பேசினார். அப்பொழுது ஒரு பக்கம் கேட்க மட்டுமே முடியும். "மிஸ்டர் வாட்சன்! இங்கே வாருங்கள்..." எனக் குரல் கேட்க உற்சாகமாக மேலே ஓடினார் -அது தான் முதன்முதலில் தொலைபேசியில் ஒலித்த வார்த்தை - அங்கே மேலே போன பொழுது பெல்லின் உடம்பில் அருகிலிருந்த அமிலம் பட்டிருந்தது. "நான் உங்களின் குரலைக்கேட்டேன்!"என சொன்னதும்தான் தாமதம். அமில எரிச்சல் எல்லாம் பறந்து போக இவரை கட்டியணைத்து கொண்டார் பெல்.

அவர் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொலைபேசிகளை பெல்லுடன் இணைந்து தயாரித்தார். வருங்காலத்தில் மக்கள் மென்டல் டெலிபதி மூலம் பேசிக்கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றார். அமெரிக்கா கண்டத்தை தாண்டி கேம்ப்ரிட்ஜிலும் முதல் தொலைபேசி காலை எடுத்தவர் இவரே!

* இன்று : ஜன.18 - கிரகாம் பெல் தொலைபேசியை கண்டுபிடிக்க முக்கிய காரணமான அவரின் உதவியாளர் வாட்சன் மறைவு தினம்.