அமேசான்.காம்
எனும் இணையத்தில் நடைபெறும் வர்த்தகத்தில் டாப் ஹீரோவாக இருக்கும்
நிறுவனத்தை உருவாக்கிய ஜெஃப்ரி பெசொஸ் பிறந்த தினம் ஜன.12.
அப்பா க்யூபாவில் இருந்து வந்த அகதி என்றாலும் அம்மாவின் அப்பா வழியில் ஏகப்பட்ட சொத்து இருந்தது. சின்ன வயதில் இருந்தே எதையாவது துறுதுறு என்று பண்ணிக்கொண்டிருக்கும் குணம் இவரிடம் இருந்தது.தொல்லைக்கொடுக்கும ் சுட்டிகளை பயமுறுத்த எலெக்ட்ரானிக் அலாரம் தயாரித்தார்.
தாத்தாவின் கேரேஜில் எப்பொழுது பார்த்தாலும் ஆய்வுகள் செய்து கொண்டும், எதையாவது உருவாக்கி கொண்டும் இருந்த இவர் ஆசைப்பட்டது ஒரு விண்வெளி வீரனாக ஆகவேண்டும் என்றே. ஆனால், வேறு விஷயங்கள் அவருக்காக காத்திருந்தன. கல்லூரி போனதும் இயற்பியலில் இருந்து அவர் காதல் கணினி பக்கம் திரும்பியது. கணினி மற்றும் மின்னணு அறிவியல் துறையில் பட்டம் பெற்று வெளியே வந்தார். மிகப்பெரிய நிறுவனங்களில் வேலைபார்த்து லட்சக்கணக்கில் சம்பாதித்தார்.
இளவயதில் மிகப்பெரிய நிதி நிறுவனம் ஒன்றின் துணைத் தலைவர் ஆனார். அதோடு நின்று இருக்கலாம்; வருடத்திற்கு 2300 சதவிகிதம் இணைய பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை உயர்கிறது என்பதை பார்த்தார். அந்நேரம் இணையத்தில் வர்த்தகம் செய்பவர்கள் சேவை வரி செலுத்த தேவையில்லை என அமெரிக்க சுப்ரீம் கோர்ட் சொல்ல வேலையை தூக்கி கிடாசிவிட்டு கிளம்பினார் மனிதர். இணையத்தில் புத்தகங்களை ஆர்டர் செய்தால் போதும், வீட்டுக்கே கொண்டுவந்து டெலிவரி என்பதுதான் கான்செப்ட். அதுவும் விலை குறைவாக தருவது தான் போனஸ்.
ஆரம்பிக்கிற பொழுது மிகக்குறைந்த எண்ணிக்கையில்தான் ஆட்கள் இருந்தார்கள். அமோக வரவேற்ப்பு உண்டானது; சில வாடிக்கையாளர்கள் ஏன் நீங்கள் எலெக்ட்ரானிக் சாதனங்கள் விற்க கூடாது என கேட்க அதையும் ஆரம்பித்தார். டிவிடிகளும் சேர்ந்துகொண்டன. புத்தகங்களை விட எலெக்ட்ரானிக் சாதனங்கள் சக்கை போடு போட்டன. இப்பொழுது ஷு, நகைகள் கூட ஆன்லைனில் விற்கிறது அமேசான். அதோடு நின்று விடவில்லை, சாதாரண மக்கள் பயணிக்கும் வகையில் விண்வெளி பயணத்திட்டத்தை ஆரம்பித்தார்.
அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? மூச்சை பிடித்துக்கொள்ளுங்கள்... 23 பில்லியன் டாலர்! எப்படி இது சாத்தியம் எனக் கேட்ட பொழுது, "பெரிதாக கனவுகள் எனக்கு; என் கனவுகளை துரத்திக்கொண்டே இருந்தேன்; இருப்பேன். மற்றவர்கள் புரிந்துகொள்ளாவிட்டலும் பரவாயில்லை. கனவுகளோடு ஓடி சாதிப்பது சுகமானது!"
அப்பா க்யூபாவில் இருந்து வந்த அகதி என்றாலும் அம்மாவின் அப்பா வழியில் ஏகப்பட்ட சொத்து இருந்தது. சின்ன வயதில் இருந்தே எதையாவது துறுதுறு என்று பண்ணிக்கொண்டிருக்கும் குணம் இவரிடம் இருந்தது.தொல்லைக்கொடுக்கும