''ஸ்காட்லாண்டின்
எடின்பர்க் நகரில் 1128-ம் ஆண்டில் நிறுவப்பட்ட பள்ளி, 'ராயல் ஹை ஸ்கூல்.’
இங்கே, தலைமை ஆசிரியராக இருந்த ஜேம்ஸ் பில்லன்ஸ் என்பவர்தான் முதல் முதலாக
கரும்பலகையை அறிமுகம் செய்தார். அதே 11-ம் நூற்றாண்டில் இந்தியர்களும்
கரும்பலகையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதன் பிறகே
உலகம் முழுவதும் இது பரவியது. 1800-ம் ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கப்
பள்ளிகளில் கரும்பலகைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அவர்கள் அதற்கு
சாக்போர்டு என்று பெயரிட்டார்கள். தொடக்க காலத்தில் 'சிலேட்’ எனப்படும்
கற்களில் இந்தக் கரும்பலகைகளைச் செய்தார்கள். இப்போது, கரும்பலகைகள் வேறு
வண்ணங்களில் ஆடைகள் அணிய ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக, பச்சை நிறத்தில்
பட்டையைக் கிளப்புகின்றன.''