>>>பிப்ரவரி 06 [February 06]....
நிகழ்வுகள்
- 1658 - சுவீடன் மன்னன் பத்தாம் குஸ்டாவின் படைகள் உறைந்த கடலைத் தாண்டி டென்மார்க்கை அடைந்தனர்.
- 1819 - ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் என்பவரால் சிங்கப்பூர் அமைக்கப்பட்டது.
- 1840 - நியூசிலாந்தில் வைதாங்கி ஒப்பந்தம் பிரித்தானிய அரச பிரதிநிதியாலும், மவோரி தலைவர்களாலும் எட்டப்பட்டது.
- 1863 - சிலோன் பேட்ரியட் (The Ceylon Patriot) இதழ் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.
- 1938 - அவுஸ்திரேலியா, சிட்னியில் பொண்டாய் கடற்கரையில் எழுந்த கடல் அலைகள் 300 பேர்களைக் கொன்றது.
- 1951 - நியூ ஜேர்சியில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 85 பேர் கொல்லப்பட்டனர். 500 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
- 1952 - இரண்டாம் ஜோர்ஜின் இறப்பை அடுத்து இரண்டாம் எலிசபெத் ஐக்கிய இராச்சியம் உட்பட 7 நாடுகளுக்கு அரசியானார்.
- 1958 - ஜெர்மனி, மியூனிக்கில் இடம்பெற்ற விமான விபத்தில் மான்செஸ்டர் யுனைட்டட் உதைபந்தாட்ட அணியின் 8 பேர் கொல்லப்பட்டனர்.
- 1959 - டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஜாக் கில்பி integrated circuit க்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்.
- 1959 - கண்டம் விட்டுக் கண்டம் பாயும் முதலாவது டைட்டான் ஏவுகணை புளோரிடாவில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
- 1996 - அட்லாண்டிக் பெருங்கடலில் டொமினிக்கன் குடியரசுக் கரைகளில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 189 பேர் கொல்லப்பட்டனர்.
- 2000 - டார்ஜா ஹலோனென் பின்லாந்தின் முதல் பெண் அதிபரானார்.
- 2004 - மாஸ்கோவில் சுரங்க தொடருந்து நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
- 1465 - டெல் ஃபெர்ரோ, இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1526)
- 1892 - வில்லியம் மேர்ஃபி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1987)
- 1911 - ரோனால்டு ரேகன், ஐக்கிய அமெரிக்காவின் 40வது குடியரசுத் தலைவர் (இ. 2004)
- 1912 - இவா பிரான், இட்லரின் மனைவி (இ. 1945)
- 1945 - பாப் மார்லி, யமேக்கா பாடகர் (இ. 1981)
- 1983 - ஸ்ரீசாந்த், இந்திய கிரிக்கெட் வீரர்
இறப்புகள்
- 1827 - சியாமா சாஸ்திரிகள், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (பி. 1762)
- 1931 - மோதிலால் நேரு, இந்திய அரசியற் தலைவர் பி. 1861)
- 1952 - ஆறாம் ஜார்ஜ், இங்கிலாந்தின் மன்னன் (பி. 1895)
- 1985 - ஜேம்ஸ் சேஸ், ஆங்கில எழுத்தாளர் (பி. 1906)
- 1991 - சல்வடோர் லூரியா, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1912)
- 2002 - மாக்ஸ் புருட்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1914)