🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 11.10.2020 (ஞாயிற்றுக்கிழமை)...

 🌹நடக்கையில் செருப்புக்குள் சிக்கிய கல்லும், வாழ்க்கையில் விடாமல் துரத்தும் கவலையும் உறுத்திக் கொண்டே தான் இருக்கும்.

நீங்கள் உதறித் தள்ளும் வரை.!

🌹🌹வருமானம் இல்லாத வாழ்க்கையை விட தன்மானம் இல்லாத வாழ்க்கையே அவமானம்.!!

🌹🌹🌹தூக்கி எறியவும் முடியாமல், விலகிச் செல்லவும் முடியாமல், வெறுத்து ஒதுக்கவும் முடியாமல் நொடிக்கு நொடி நினைத்து வருந்தி  கொண்டிருக்கும் அளவுக்கு எல்லோருடைய வாழ்க்கையிலும் 

ஒரு உறவு இருந்து கொண்டுதான் இருக்கும்.

அவர்கள்தான் நம் ஆழ்மனதால் நேசிக்கப்பட்டவர்கள்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈பகுதிநேர பி.இ., பிடெக். படிப்பு: அக்.12-ல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு.

🌈🌈ஆசிரியர் நியமனத்துக்கு வயது வரம்பு 40 ஆகக் குறைக்கப்பட்டது அநீதி: உடனடியாக நீக்க வேண்டும்; அன்புமணி

🌈🌈பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் தொழில் முதலீட்டு கழகத்திற்கு மாற்றம்

👉பள்ளிக்கல்வித்துறை ஆணையராக வெங்கடேஷ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்

🌈🌈ஈட்டிய விடுப்பு சரண்டர் ரத்து தமிழக அரசின் கொள்கை முடிவு அரசு செயலாளர் பதில்

🌈🌈பொறியியல் மாணவர்கள் அக்.29 வரை கட்டணம் செலுத்தலாம்: அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு

🌈🌈புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் சிறப்பு அந்தஸ்து பெற ரூ.1,570 கோடி திரட்ட முடிவு : மத்திய அரசுக்கு துணைவேந்தர் கடிதம்.

🌈🌈ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் புதுச்சேரி ஜவஹர் நவோதயா பள்ளி மாணவர்கள் 26 பேர் தேர்ச்சி

🌈🌈ஆக்ஸ்போர்டு, யேல் பல்கலை. கிளைகள் இந்தியாவில் தொடங்க நடவடிக்கை

🌈🌈உபரியாக உள்ள ஆசிரியர்கள் விவரங்கள் தொடக்கக் கல்வித்துறை அறிவுறுத்தல்

🌈🌈அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவு: 2-வது சுற்று கலந்தாய்வு நடத்த அரசு திட்டம்.

🌈🌈பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: கடும் நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்.

🌈🌈 ஏமாற்றம்: சத்துணவு காலி பணியிட நேர்காணலுக்கு வந்தவர்கள் திடீரென ரத்தானதால் விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி

🌈🌈மொழி விவகாரங்களை எந்த மத்திய அரசாக இருந்தாலும் கவனமாகக் கையாள வேண்டும்.மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

👉''மொழி, உணர்வுடன் சம்பந்தப்பட்டது. மொழி விவகாரங்களை எந்த மத்திய அரசாக இருந்தாலும் கவனமாகக் கையாள வேண்டும். 1956-ல் மொழி அடிப்படையில்தான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. சாதி, மத அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப் படவில்லை. அந்த அளவு மொழி என்பது ஒவ்வொருக்கும் முக்கியமானது.

மொழி அடிப்படையில் எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது. அதற்கான வாய்ப்புகளை ஏன் ஏற்படுத்திக் கொடுக்கிறீர்கள்? மத்திய அரசில் இருக்கும் சில அதிகாரிகள் மொழி விவகாரங்களில் தொடர்ந்து தவறான முடிவு எடுக்கின்றனர். அவர்களிடம் அரசு கவனமாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இது தவிர்க்கப்பட வேண்டும்.

செம்மொழியாக அறிவித்துள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளைப் புறக்கணித்து அக்.6-ல் அறிவிப்பாணை வெளியிடப் பட்டதற்கு யார் பொறுப்பு? 

அந்த அதிகாரிகள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? 

அறிவிப்பாணையில் இடம் பெற்றுள்ள அரபு, பார்சி, பாலி மொழிகள் எந்த அடிப்படையில் இந்தியச் செம்மொழியாக அறிவிக்கப் பட்டுள்ளன? 

என்பதை நீதிமன்றத்துக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்''

👉நீதிபதிகள் திரு.என்.கிருபாகரன், திரு.பி.புகழேந்தி உத்தரவு.

🌈🌈அரசுப் பள்ளி ஆசிரியர் நியமனத்துக்கு வயது வரம்பு நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 1990ஆம் ஆண்டு வரை அரசுப் பள்ளி ஆசிரியர் நியமனத்துக்கு வயது வரம்பு இருந்த நிலையில், ஆசிரியர் அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று நீக்கப்பட்டது. இதனால் 50 வயதுக்கு பிறகு கூட தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்றனர்.

இந்நிலையில் ஆசிரியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

🌈🌈எடப்பாடி பழனிசாமியை அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் மட்டும் கூட்டணியில் இருங்கள்.

- அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி

🌈🌈தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு

👉டாஸ்மாக் மேலாண் இயக்குநராக மோகன் நியமனம்

👉வெங்கடேஷ் பள்ளிக் கல்வித்துறை ஆணையராக நியமனம்

👉குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநராக கிர்லோஷ் குமார் நியமனம்

👉பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் செயல் அலுவலராக கிராந்தி குமார் நியமனம்

🌈🌈முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதற்கு அரசின் முயற்சிகளே காரணம்; முதல்வர் பழனிசாமி பெருமிதம்.

🌈🌈விவசாயிகளை தீவிரவாதிகள் என திட்டியதாக புகார்; நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு.

🌈🌈டெல்லியில் காற்று மாசைக் குறைக்க மற்ற மாநிலங்கள் உதவி செய்யவில்லை என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

🌈🌈ஏப்ரல்-செப்டம்பரில் 3,951 கிலோ மீட்டருக்கு நெடுஞ்சாலை கட்டமைப்பு பணிகள் நிறைவேற்றம்-நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சகம்

🌈🌈ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என அப்பல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

🌈🌈டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் நேற்று அசென்ச்சர்  நிறுவனத்தை முந்தி, உலகின் மிக மதிப்புமிக்க ஐ.டி நிறுவனமாக மாறியது.

🌈🌈உலகின் பல பகுதிகளில் கடந்தாண்டு இறுதியிலேயே  கொரோனா பாதிப்பு இருந்ததாகவும், சீனா தான் முதல் நாடாக பாதிப்பை அறிவித்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

🌈🌈ரசாயன ஆயுதங்களால் செயற்பாட்டாளர்கள் கொலை-பாகிஸ்தான் மீது பலூசிஸ்தான் தேசியத் தலைவர் குற்றச்சாட்டு.

🌈🌈இந்தியா, அமெரிக்காவை தொடர்ந்து பாகிஸ்தானும், டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

🌈🌈பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு, உலகின் நம்பர் ஒன் வீரரான நோவோக் ஜோகோவிச் மற்றும் ரபேல் நடால் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

🌈🌈TET, CTET தேர்வில் தேர்ச்சி பெற்ற 8000 ஆசிரியர்கள் ராணுவ பப்ளிக் பள்ளி காலிபணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பு

🌈🌈நாளை 12ம் தேதி நீட் தேர்வுகள் முடிவுகள் வெளியிட வாய்ப்பு : மத்திய கல்வி அமைச்சர்

🌈🌈பப்ஜி கேமில் துப்பாக்கி வாங்க தந்தை ரூ.3 லட்சம் தராததால் 12-ம் வகுப்பு மாணவன் தற்கொலை - ஆந்திராவில் சோகம்.

🌈🌈2020-21 இக்கல்வியாண்டில் தங்கள் பள்ளியில் சேர்க்கை செய்யப்பட்ட 2 வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் யாரேனும் கடந்த ஆண்டு வரை வேறு மாநிலங்களில் பயின்றவர்களாக இருப்பின், அவர்களது விவரங்களை எமிஸ் தளத்தில் students admission வாயிலாக சார்ந்த வகுப்பிலேயே பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு பதிவுகளை உருவாகும்போது,

போலியான பதிவுகளை (duplicate emis entry) தடுக்கும் நோக்குடன்,  அம்மாணவரது விபரங்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (DC) அங்கீகரிக்கப்பட்ட பின்பே, சார்ந்த பள்ளியின் மாணவர்பெயர் பட்டியலில் (student list) சேர்க்கப்படும். எனவே தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு புதிய பதிவுகளை (new emis entry) உருவாக்கும் முன்பு, அம்மாணவருக்கு  ஏற்கனவே எமிஸ் தளத்தில் பதிவுகள் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

🌈🌈அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் தாம் இடம்பெறாததை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

👉கோபி அருகே கொடிவேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கர்நாடகம் மற்றும் மராட்டியத்தில் மூடப்பட்டுள்ள தமிழ்வழி பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் கட்டாய கல்வி உரிமை சட்டம் மூலமாக தனியார் பள்ளிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

🌈🌈ஐபிஎல் :  சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி

🌈🌈கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரைன் பந்துவீச்சு சந்தேகத்திற்குரிய முறையில்   உள்ளது என நடுவர்கள் புகார்.

இன்னொரு முறை புகார் செய்யப்பட்டால், இந்த வருட ஐபிஎல்லில் பந்து வீச தடை விதிக்க வாய்ப்பு என‌ தகவல்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926