🍁🍁🍁 வட்டாரக் கல்வி அலுவலரின் (முன்பு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்) பணிகள், பொறுப்புகள், கடமைகள்... தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண். 19601/ஐ4/2010, நாள்: 28.06.2010

 தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6

ந.க.எண். 19601 /ஐ4/2010 நாள் 28.06.2010

பொருள் - தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கவேண்டிய அறிவுரைகள் - சம்பந்தமாக

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஒன்றியத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் அரசு நகராட்சி மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியத்தை மாதந்தோறும் பெற்று வழங்கக்கூடிய அலுவலர் ஆவார். பஞ்சாயத்து யூனியன் / அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நியமன அலுவலர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஆவார். உதவி பெறும் பள்ளிகளைப் பொறுத்தவரை பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிப்பது, ஆசிரியர் பணி நியமனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது மற்றும் ஆசிரியர் மாறுதல்களுக்கு ஒப்புதல் அளிப்பது போன்ற அதிகாரங்கள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களைச் சார்ந்ததாகும். அதேபோல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் கீழ்கண்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன..