🍁🍁🍁 பணிநீக்கப்பட்டு / பணியிறக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணி அமர்த்தப்பட்டால் ஊதிய உயர்வு குறித்த நடைமுறைகள் மற்றும் அரசாணைகள்...


(அ) தகுதிகாண் பருவம் முடித்தவர் பணிநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணி அமர்த்தப்பட்டால், அவர் பணிநீக்கத்திற்கு முன்னர் பெற்று வந்த ஊதியமே பெறலாம். அத்துடன் முந்தைய பணிக்காலமும், ஊதிய உயர்வுக்குக் கணக்கிடப்படும் (G.O.Ms.No.400 P&AR, Dated 7.4.1988) 

இதனை சாதாரணமாக ஊதியம் நிர்ணயம் செய்யும் அலுவலரே வழங்கலாம் - (Govt Letter no.44316/86-4. P&AR, Dated 29.8.1986)

(ஆ) இடைப்பட்ட பணி நீக்கக் காலம் Condone செய்யப்பட வேண்டிய தேவையில்லை (Govt Letter No.44318/86-4, Finance Department, Dated 29.8.1986)

(இ) பணி இறக்கம் பெறுவதைத் தொடர்ந்து ஒருவர் விடுப்பில் செல்வதால் விடுப்பு முடிந்து மீண்டும் பதவி உயர்வு பெற்று அதே உயர் பதவியில் சேர்ந்தால் விடுப்புக் காலத்திற்கும் ஊதிய உயர்வு கிடைக்கும். அதாவது தள்ளிப் போகாது (Effective from 25.3.88) G.O.Ms.No.212, P&A.R., dated 25.3.88)