🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 05.11.2020 (வியாழன்)...

🌹வார்த்தை என்பது ஏணிபோல 

பயன்படுத்துவதை பொறுத்து,

ஏற்றியும் விடும்

இறக்கியும் விடும்.!

🌹🌹வாழ்க்கையில் அடிபட்ட பின்பு தான் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உண்மையான முகத்தை புரிந்து கொள்ள முடிகிறது.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎀🎀பள்ளிகளே மூடியுள்ள நிலையில் வயது வந்தோர்க்கு கல்வி உடனடி தேவையா? கற்போம் எழுதுவோம் திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும். தமிழக அரசுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை.

🎀🎀பள்ளி திறப்பு பற்றி வரும் 9 ஆம் தேதியன்று கருத்துக்கேட்புக்கூட்டம் நடத்தப்படும். நேரில் வர இயலாய பெற்றோர்கள் கடிதம் மூலம் கருத்து தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு.

👉பெற்றோர்கள் கருத்து கேட்பு கூட்டத்தின் முடிவில் அடிப்படையிலேயே பள்ளிகள் திறக்கப்படும் -பள்ளிக் கல்வித்துறை

👉9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் அந்தந்த பள்ளிகளில் கருத்தை கூறலாம்.

🎀🎀ஆந்திராவில் நவ.2 முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சித்தூரில் 150 ஆசிரியர்கள், 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று. அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனா சோதனை செய்துகொள்ள சித்தூர் ஆட்சியர் பரத் குப்தா உத்தரவு.

🎀🎀பள்ளிக் கல்வி - அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கழிவறைகள் பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல் சார்பான அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம் - இணைப்பு: அரசாணைகள்: 151 & 166.

🎀🎀அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் நேற்று வழங்கினார்.

🎀🎀பள்ளிக் கல்வி - குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம் வெளியீடு

🎀🎀பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசு நிர்வாக ஆணை மூலம் விடுதலை செய்ய வேண்டும்.

விடுதலை தாமதிக்கப்படுமானால் மறுக்கப்பட்ட நீதியாகவே வரலாற்றில் பதிவாகும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தல்.

🎀🎀உலக நாடுகளைப் போலவே, அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை தமிழகத்தில் உள்ள ஒரு குக்கிராமம் ஒன்றும் ஆர்வத்துடன் உற்று நோக்கி வருகிறது. அதற்குக் காரணம் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ் தான். கமலா ஹாரிசின் மூதாதையர் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். 

இதனால் இந்த கிராம மக்கள் கமலா ஹாரிசின் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். கமலா ஹாரிசின்  வெற்றிக்காக சொந்த கிராமத்திலுள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்ட கிராம மக்கள், அவரின் வெற்றி குறித்த செய்தியை அறிவதற்காக தொடர்ந்து தொலைகாட்சியை ஆர்வமுடன் கவனித்து வருகின்றனர். இந்நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட ஜோ பைடன் முன்னிலையில் உள்ளதையறிந்து, கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

🎀🎀சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்துறை அமைச்சராக கே.பி.அன்பழகன் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு மறைவையடுத்து  கே.பி.அன்பழகனுக்கு வேளாண்துறை ஒதுக்கப்பட்ட நிலையில் அவர் பதவியேற்றுள்ளார்.

🎀🎀VPF கட்டணம் செலுத்தப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம் என தயாரிப்பாளர், இயக்குநர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். திரையரங்கு உரிமையாளர்களிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடரும் எனவும் கூறினார்.

🎀🎀தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநராக பாஸ்கர பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

🎀🎀என்னை விமர்சிப்பதை பற்றி நான் கவலைப்படவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

👉தில்லுமுல்லுப் பேர்வழிகளால் சில சுவரொட்டிகள் தமிழ்நாட்டின் தெருக்களில் ஒட்டப்படுகின்றன. மேலும் பெயரோ, முகவரியோ வெளியிட தெம்பும் திராணியுமற்ற நபர்கள் என்னை இகழ்ந்து போஸ்டர்களை ஒட்டுகின்றனர் என அவர் கூறியுள்ளார்.                                                                  🎀🎀டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று காலை 10.30 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. பண்டிகை காலம் நெருங்கும் நிலையிலும், கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையிலும் மத்திய அசை்சரவை கூட்டம் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

🎀🎀மதுரை : ஹெரிட்டேஜ் ஓட்டல் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரையில் 5, சென்னையில் 4 இடங்களில் ஹெரிட்டேஜ் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் ஐ.டி.ரெய்டு நடைபெற்று வருகிறது.

🎀🎀M.Ed சுயநிதி கல்லூரியில் படிக்க 15/11/2020 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது - TNTEU

🎀🎀தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் இருக்கும்?; குரூப்-1 தேர்வில் 20% ஒதுக்கீடு வழக்கில் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி.

🎀🎀தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் அனைத்து செமஸ்டர் தேர்வுகளையும் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை பொதுத்தேர்தல் 2021-ல் நடைபெறுவதால் உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

🎀🎀தமிழக ஆளுநர் டெல்லிக்கு திடீர் பயணம் 

3 நாள் பயணமாக டெல்லி செல்லும் அவர் பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

🎀🎀ஜனவரி 31ல் CTET தேர்வு

🎀🎀தொலைக்காட்சி களுக்கான டி ஆர் பி ரேட்டிங் மதிப்பிடும் நடைமுறைகளை மறு ஆய்வு செய்ய, மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், பிரசார் பாரதி தலைமை செயல் இயக்குனர் திரு சசி சேகர் வேம்பட்டி தலைமையில், நான்கு பேர் அடங்கிய குழு ஒன்றை அமைத்துள்ளது.

🎀🎀லடாக் எல்லைப் பிரச்சனையில் சுமுக தீர்வு காண்பதற்காக, இந்தியா சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையே எட்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது.

🎀🎀தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடைசெய்யக்கோரி வழக்கு; விளம்பரங்களில் நடித்த பிரபலங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ்.

🎀🎀சென்னையில் கட்டட தொழிலாளர்களின் பணியிடங்களுக்கே சென்று உணவு வழங்கும் நடமாடும் அம்மா உணவகத்தின் சேவையை முதலமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார்.

🎀🎀CPS -அலுவலகம் இடமாற்றம்:-            

👉பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்களுக்கு,CPS வழியே ஓய்வுகால பங்களிப்பு பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

👉CPS அலுவலகம் கிண்டி கோட்டூர்புரத்தில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில் செயல்பட்டு வந்தது. 

👉இன்று நவம்பர் 5- ஆம் தேதி முதல் CPS அலுவலகம் சென்னை சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனை (வெட்னரி ஹாஸ்பிடல்)  பஸ் நிலையம்  அருகில் ஒருங்கிணைந்த நிதி வளாகம் அலுவலகத்தில் செயல்பட உள்ளது. 

சைதாப்பேட்டை ஒருங்கிணைந்த நிதி புது கட்டடத்தில் ஐந்தாவது மாடியில்   சிபிஎஸ் அலுவலகம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

🎀🎀தமிழகத்தில் பல்வேறு DEO அலுவலகங்களில், IGNOU மூலம் B.ed பயின்றவர்களுக்கு , அயல் மாநில University என்று கூறி evaluation Certificate கேட்பது ஏற்புடையதல்ல. ஏனென்றால் அரசாணை (நிலை) எண் 160 நாள் 2.12.2004-ல் Evaluation தேவையில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

🎀🎀சென்னை அரசு மருத்துவமனைக்கு உலக தரச்சான்றிதழ்

🎀🎀மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம்: ஆன்லைன் குளறுபடியால் தவிப்பு

🎀🎀நாளை மறுநாள் முடிகிறது துணை இன்ஜினியரிங் கவுன்சிலிங் பதிவு

🎀🎀தமிழக ஆராய்ச்சியாளருக்கு சீனா ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு

🎀🎀ராணுவ கல்லூரியில் பயிற்சி பெறுவதற்கான'சீட்' எண்ணிக்கை அதிகரிப்பு

🎀🎀கருத்துக் கேட்பதற்குப் பதிலாக மருத்துவ ஆலோசனைப்படி பள்ளிகளைத் திறக்க வேண்டும்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்

🎀🎀தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு சலுகை தவறாக பயன்படுத்தப்படுகிறது : நீதிமன்றம் வேதனை

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926