இன்று 2020-ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்....!

 


இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நவம்பர் 30 திங்கட்கிழமை அன்று நிகழ உள்ளது.

2020-ஆம் ஆண்டின் நான்காவது மற்றும் இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இதுவாகும். பூமி, சந்திரன், சூரியன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது. சூரியனின் ஒளி சந்திரன் மீது படாமல், பூமி இடையில் வந்து மறைப்பதே சந்திர கிரகணம்.

நவம்பர் 30ஆம் தேதி நிகழப்போகும் சந்திர கிரகணம், புறநிழல் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

இந்தியாவில், இந்த நிகழ்வு மதியம் 1:04 மணி முதல் மாலை 5:22 மணி வரை நிகழும். மேலும் 3:13 மணி அளவில் சந்திர கிரகணம் உச்சத்தில் இருக்கும். இந்த சந்திர கிரகணத்தை கருவிகள் உதவியின்றி வெறும் கண்ணால் பார்க்க முடியாது, ஆனால் நிலவை சுற்றி வரும் லூனார்ரெக்கனைசன்ஸ் ஆர்பிட்டர் என்று அழைக்கப்படும் விண் சுற்றுக்கலத்திற்கு கிடைக்கும் சூரிய மின்னாற்றல் குறைவதைக் காண முடியுமாம்.