இன்றைய செய்திகள் தொகுப்பு... 23.11.2020 (திங்கள்)...

 🌹தப்பே செய்யாமல் ஒருவர் உங்களை தவறாக புரிந்து கொண்டால் அவர்களிடம் உங்களைப் பற்றி நியாயப்படுத்தாதீர்கள் ஏனென்றால் நீங்கள் கூறும் ஒவ்வொரு உண்மைக்கும் அவர்களே ஒரு கதையை உருவாக்குவார்கள்.!

🌹🌹அன்பு என்பது நெல் மாதிரி

போட்டாத்தான் முளைக்கும்.

வம்பு என்பது புல் மாதிரி எதுவும் போடாமலே முளைக்கும்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎀🎀TET தோ்விலிருந்து விலக்க வேண்டும்: தோ்ச்சி பெறாத 1,747 ஆசிரியா்கள் கோரிக்கை

🎀🎀மருத்துவப் படிப்புகள்: சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 91 இடங்கள் நிரம்பவில்லை - மருத்துவக் கல்வி இயக்ககம்

🎀🎀மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியை பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-  தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

🎀🎀இன்று முதல் சென்னை புறநகர் ரயில்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணிக்க அனுமதி

🎀🎀25 ஆம் தேதி முதல் ஆந்திராவுக்கு செல்ல இ பாஸ் தேவையில்லை- தமிழக அரசு அறிவிப்பு

🎀🎀நவம்பர் 25ம் தேதி முதல் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு அனுமதி

🎀🎀SCA உள் ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத பொறியியல் இடங்களுக்கு விருப்பமுள்ள SC மாணவர்கள் 24.11.2020 முதல் நடைபெறும் இணையதள கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் - TNEA செயலாளர்.

🎀🎀10-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக நடத்தப்படும்  தேசிய திறனாய்வுத் தேர்வு(NTSE) வரும் டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் : தேர்வு எழுத ஆர்வமுள்ள மாணவர்கள் இன்று முதல்  விண்ணப்பிக்கலாம்

🎀🎀ராமநாதபுரம் அருகே சேதமடைந்த நிலையில் இருந்த அரசு பள்ளியை, கொரோனோ காலத்திலும், தனியார் பள்ளிக்கு நிகராக புனரமைத்து கொடுத்த இளைஞருக்கு, ஊர்மக்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

🎀🎀கொரோனா தடுப்பூசியை ரூ.1,850 முதல் ரூ.2,750 வரை விற்க இருப்பதாக மாடர்னா நிறுவனம் அறிவிப்பு

🎀🎀தலைவர், பொருளாளர் விலகிய நிலையில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய வேண்டாம்  என தலைமை தேர்தல் ஆணையத்திற்கு விஜய்யின் தந்தை கடிதம்.

🎀🎀தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

நவம்பர் 25ம் தேதி தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழையும், ஒரு சில இடங்களில் அதீத கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

🎀🎀அதிமுக - பாஜக கூட்டணி தெரிந்த ஒன்றை மீண்டும் உறுதி செய்திருக்கிறார்கள் 

வரும் சட்டமன்ற தேர்தலின் போது பல கூட்டணிகள் உருவாகலாம், பல கூட்டணி உடையலாம் 

-கமல்ஹாசன் 

🎀🎀அங்கீகார நீட்டிப்பு பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்வி நிறுவனங்களில் உள்ள குறைகளை உடனடியாக சரிசெய்து கொள்ள வேண்டும்.

எந்நேரமும் ஆய்வுக்கு வருவோம்.

-  நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு AICTE (All India Council for Technical Education) சுற்றறிக்கை

🎀🎀ஆயுர்வேதா மருத்துவர்களை அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவிற்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு...

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சையில் ஈடுபடலாம் என்பது பொதுமக்களின் நலனுக்கு ஆபத்தானது 

-  தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம்

🎀🎀மயிலாடுதுறை குத்தாலத்தில் கைது செய்யப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 7 மணி நேரம் கழித்து நேற்று விடுவிக்கப்பட்டார். திட்டமிட்டபடி இன்றும் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெறும் என உதயநிதி ஸ்டாலின் மீண்டும் உறுதியளித்துள்ளார்.

🎀🎀தமிழகத்தில் 20 மாவட்டங்களில் செவ்வாய், புதன் கிழமைகளில் மிக கனமழை பெய்யும் என பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் சீற்றத்தால் குளைச்சல் முதல் தனுஷ்கோடி வரை 10அடி வரை அலைகள் எழும்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவார் புயல் கரையை கடக்கும் போது 24 மணி நேரத்துக்கு வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🎀🎀தமிழகத்தில் தமிழ் அழிந்து வருவது வேதனையான விஷயம் 

நீதிபதி கிருபாகரன்

🎀🎀தேர்தல் முறைகேடெல்லாம் கிடையாது.

டிரம்ப் மனுவை தள்ளுபடி செய்தது அமெரிக்க நீதிமன்றம்.

🎀🎀அரசு விழாவில் முதல்வர் பழனிசாமி அரசியல் பேசியதற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசுக்கும் அரசியலுக்கும் வித்தியாசம் இல்லாவிட்டால் சர்வாதிகாரம் தலைதூக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்

🎀🎀அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களை விசாரிக்கும் ஆணையத்திற்கு அலுவலகம் & கூடுதல் உறுப்பினர்களையும் ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு.

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள பொதிகை இல்லத்தை விசாரணை ஆணையத்தின் அலுவலகத்திற்கு ஒதுக்கீடு

🎀🎀அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் வரும் 25-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்கிறார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஆய்வு நடத்துகிறார்.                                                                             

 🎀🎀தமிழக மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று நாகையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

👉மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும், இலங்கை படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

🎀🎀சிறப்பாசிரியா் பணியிடங்கள்: தோ்வான 148 பட்டதாரிகளுக்கு பணி நியமன ஆணை வழங்குவதில் தாமதம்

🎀🎀இக்னோ’ படிப்புகளுக்கான கால வரையறையில் மாற்றம்: நடப்பு கல்வியாண்டு முதல் அமல்

🎀🎀பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு உயர் கல்வி வாய்ப்பை மறுக்கக் கூடாது: சென்னை ஐகோர்ட்

🎀🎀ஜனவரியில் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தகவல்

🎀🎀தமிழகத்தில் 2021 ஜனவரியில் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது - நாளிதழ் செய்தி 

🎀🎀கல்வி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை அனைவரின் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லுதல் குறித்த கல்வி தொலைக்காட்சி சிறப்பு அலுவலரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

🎀🎀தமிழ்நாடு மாநிலத்தில் ஏற்பளிக்கப்பட்ட தனியார் பள்ளிகளை ஒழுங்குமுறை படுத்துவதற்காக வகை செய்வதற்கானதொரு சட்டம்-அரசிதழ் வெளியீடு

🎀🎀தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் பணி நிபந்தனைகள் சட்டம் கூறுகளின் அமைப்புகள் சார்ந்து அரசிதழ் வெளியீடு 

🎀🎀சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை ஜனவரி 1 முதல் பிப்ரவரி 8ம் தேதி வர நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பு நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, முழுமையான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. 

🎀🎀யு.பி.எஸ்.சி., - ஐ.ஐ.டி., மற்றும் 'நீட்' உள்ளிட்ட போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும், எஸ்.சி  மற்றும் ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு, மத்திய அரசு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதில், 50 சதவீத மாணவர்கள், தாங்கள் விரும்பும் பயிற்சி மையங்களில் சேர்ந்து இலவசமாக படிக்கும் வாய்ப்பை உருவாக்கித் தர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது - நாளிதழ் செய்தி 

🎀🎀முதுகலை மருத்துவ படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்க்கும் மேல்முறையீடு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926