தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயரத்தின காந்தி, முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் கொடுத்த மனு விபரம்: மாவட்டத்தில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும், அலுவலக பணியாளர்கள் விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுவதாக, பல்வேறு பள்ளிகளில் இருந்து எங்களது சங்கத்திற்கு புகார்கள் வந்துள்ளன. ஆனால், முதலமைச்சரின் குறைதீர்க்கும் மனுவிற்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும், இளநிலை உதவியாளர்கள் சனிக்கிழமைகளில் பணிக்கு செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளார். சில தலைமையாசிரியர்கள் சனிக்கிழமைகளில் பள்ளிக்கு வராத, இளநிலை உதவியாளர்களுக்கு தற்செயல் விடுப்பும் வழங்கி உள்ளனர். அதை ரத்து செய்ய வேண்டும். அரசு விடுமுறை நாட்களில் அவர்கள் பணிக்கு வர பணிக்கப்பட்டால், அவர்களுக்கு பிறிதொரு வேலை நாளில், விடுப்பு வழங்கலாம் என்ற உத்தரவின்படி, வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள், விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வர வேண்டும் என, கட்டாயப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.