இன்றைய செய்திகள் தொகுப்பு... 19.02.2021 (வெள்ளி)...

 


🌹ஒரு எல்லை வரைக்கும் தான் நாம் வளைந்து போக முடியும்.

அதற்கு மேல் வளைந்து போனால் ஒன்று அடிமையாக வேண்டும் இல்லையென்றால் உடைந்து தான் போக வேண்டும்.!

🌹🌹உலகத்திலேயே ரொம்ப விலை உயர்ந்த விஷயம் நம்பிக்கை.

அதை அடைய வருஷங்கள் ஆகலாம்.

ஆனால் அது உடைய சில நொடிகள் போதும்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📕📘 நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர், தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு 

👉27.02.21 AM middle HM promotion.

👉27.02.21 PM Primary HM promotion. 

👉28.02.21 BT promotion

📕📘இடமாறுதல் கலந்தாய்வு நடத்திடாமல்

பதவி உயர்வு

கலந்தாய்வு நடைபெறுவது கண்டனத்திற்குரியதாகும்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர்

முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் வலியுறுத்தல்

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு பின்னரே பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தும் வழக்கமான நடைமுறைக்கு மாறாக, பதவி உயர்வு கலந்தாய்வு மட்டும் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது.

மாறுதல் கலந்தாய்வுக்கு பின்னர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். கல்வித் துறை உயர் அதிகாரிகள் இதனை உடனே சரி செய்து கடந்த கால நடைமுறையே பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்துகிறது.

📕📘JEE நுழைவுத் தேர்வு - இந்து தமிழ் திசை நாளிதழ் சார்பில் - ரூ.9400 மதிப்புள்ள 54மணி நேர ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன - பதிவு செய்ய கடைசி நாள்: 25-02-2021

📕📘அரசு உதவிபெறும் வள்ளல் பாரி மேல்நிலைப்பள்ளி - முதுகலை ஆசிரியர் பணியிடம் - நேர்முகத் தேர்வு நாள்: 23-02-2021..

📕📘முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தேர்ந்தோர் பட்டியல் (தமிழ்,ஆங்கிலம், கணக்கு) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு.

📕📘அரசு உதவி பெறும் டி.கே.ஜி. மேல்நிலைப்பள்ளி - முதுகலை ஆசிரியர் பணியிடம் - நேர்முகத் தேர்வு நாள்: 23-02-2021.

📕📘Revised Maths PG Panel: 2007-08ம் ஆண்டு வரை தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பதற்கு பதிலாக 2003-04ம் ஆண்டு வரை தேர்வு செய்யப்பட்டவர்கள் என்று திருத்தம் - DSE PROCEEDING வெளியீடு.

📕📘தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அறிவிப்புகளை வெளியிடுக: தமிழக அரசுக்கு கோரிக்கை

📕📘முதுகலை வணிகவியல் ஆசிரியர் இரண்டாம் கட்ட பதவி உயர்வு கலந்தாய்வு – 20.02.2021 அன்று சென்னையில் நடைபெறுகிறது – பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.                                                                      

 📕📘பிளஸ்-2 பொதுத்தேர்வு- அந்தந்த பள்ளிகளிலேயே நடந்த திட்டம்- பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

📕📘தருமபுரி மாவட்டத்தில் புதிய வேளாண் கல்லூரி:  தமிழக அரசு அரசாணை வெளியீடு

📕📘+2 பொதுத்தேர்வில் ஒரு அறைக்கு 25 மாணவர்கள் இருக்கும்வகையில் ஏற்பாடு செய்ய அறிவுரை செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களை நிரந்தர பணியில் அமர்த்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

📕📘அரசாணை எண் 30-மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மைய அலுவலகம் வாயிலாக அனுப்பப்படும் பரிந்துரை பட்டியல்கள் பட்டியலில் செல்லுபடி காலத்தை உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.

📕📘ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக, பள்ளிகளை முழுமையாக திறந்து, இரண்டு மாதங்கள் பாடங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்.

📕📘17.02.2021 நிலவரப்படி நிரப்பத் தகுந்த பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

📕📘26 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் விரைவில் பதவி உயர்வு மூலம் நிரப்பும் பொருட்டு சார்ந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் விபரங்களை சரிபார்த்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

📕📘பிளஸ் 2 தேர்வு அட்டவணை வெளியீடு; ‘சிலபஸ்’ முடிக்க பள்ளிகளுக்கு உத்தரவு

📕📘அரசு மாணவர் விடுதிகளில் முறைகேடுகளை தவிர்க்க பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்த முடிவு: சிசிடிவி கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் திட்டம்.

📕📘அரசுப்பள்ளி, மாணவ, மாணவியருக்கு, முதன்முறையாக, அரசின் விலையில்லா, ஷூ மற்றும் சாக்ஸ் வினியோகிக்கப்படவுள்ளது.

📕📘மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், PF தொகையில் மாற்றம் – புதிய ஊதிய கொள்கை விரைவில் அமல் 

📕📘பிளஸ் 2 தேர்வு அட்டவணையில் எந்த குழப்பமும் இல்லை. 

 சி.பி.எஸ்.இ பள்ளிகள் தேர்வு அட்டவணை வெளியிட்ட பிறகு தமிழக பள்ளி கல்வித்துறை தேர்வு நடத்துவதில் தாமதப்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்து அறிவித்துள்ளோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

📕📘துபாய் வரும் பயணிகளுக்கான PCR விதிமுறைகளில் மாற்றம்.ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு.

📕📘30 ஆயிரம் ரூபாயில் மின்சார இருசக்கர வாகனம் உருவாக்கிய சென்னை ஐஐடி மாணவர்கள்.

📕📘இனி உங்க மொபைலில் இருந்து எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம்..!*

கோடக் மஹிந்திரா வங்கி அறிவிப்பு

📕📘முதல்வர் கூடவே இருக்கும் ஓபிஎஸ் அவருக்கு எதிரான செயல்களை செய்து வருகிறார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

துணை முதலவர் ஓபிஎஸ் 10 ஆண்டுகளாக தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என உத்தமபாளையத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் திமுக கூட்டத்தில் பங்கேற்று குறைகளை கூறும் மக்களுக்கு அதிமுக உதவி செய்கிறது என அவர் கூறியுள்ளார்.

📕📘பிப்.22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நாராயணசாமிக்கு ஆளுநர் உத்தரவு.

சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்யவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உத்தரவு.

📕📘புதுச்சேரியில் காங்கிரஸ் அரசை சிதைக்கவே தமிழிசை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

நாராயணசாமியை செயல்படவிடாமல் தடுக்க கிரண்பேடியை அனுப்பியதைப் போல் தற்போது தமிழிசை அனுப்பப்பட்டுள்ளதாக கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் கிரண்பேடியை பதவிநீக்கம் செய்ய என்ன காரணம் மதுரையில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்

📕📘அ.ம.மு.க. தனித்து போட்டியிடும் என்று எந்த இடத்திலும் அறிவிக்கவில்லை என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

பாஜக கூட்டணியில் அ.ம.மு.க. பங்கேற்பது குறித்து பாஜக மத்திய தலைமைதான் முடிவு செய்யும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்

📕📘ஐபிஎல் தொடரில் பங்கேற்று இந்திய அணியில் இடம்பிடித்து சாதனை படைத்து வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு புகழாரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சாதித்த நடராஜனை பாராட்டி ஐபிஎல் நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் பேசி யுள்ளார்.

📕📘இந்தியாவின் ராஜாவாக தன்னை நினைத்துக் கொள்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசை பிரதமர் நரேந்திர மோடி செயல்படவிடாமல் தடுக்கிறார். துணை நிலை ஆளுநர் மூலம் மக்கள் தேந்தெடுத்த அரசை மதிக்க மாட்டோம் என பிரதமர் மோடி சொல்கிறார் எனவும் கூறினார்.

📕📘பத்திரிக்கைகளில் அரசை விமர்சித்து எழுதுவதற்கு செய்தியாளர்கள் அஞ்சுகின்றனர் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தமிழ் பேசக்கூடாது என்கிறார்கள். மத்திய அரசை விமர்சித்தால் தேச விரோதி, தீவிரவாதி என்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி என்ன நினைக்கிறாரோ அதையே இந்திய மக்கள் அனைவரும் நினைக்க வேண்டும் என கருதுகிறார். எனவும் கூறினார்.

📕📘சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் வரும் 25 தேதி முதல் துவங்குமென தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவிப்பு.

📕📘கனடாவுக்கு 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு ஒப்புதல்.

கனடா பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா தடுப்பூசிகளை வழங்க உள்ளது.

📕📘இறக்குமதியை சார்ந்து இருப்பதை குறைந்துக்கொள்ள வேண்டும் என பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

📕📘தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற  பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இரண்டு இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

📕📘பிளஸ் டூ தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏப்ரல் இறுதிக்குள் சட்டப்பேரவை தேர்தல் நடத்த வாய்ப்பு

📕📘அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்தியப்பிரத சாகு நேற்று ஆலோசனை.

📕📘ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹112 குறைந்து, ₹35,040 ஆனது; கிராமுக்கு ₹14 குறைந்து ₹4,380க்கு விற்பனை.

📕📘திருக்கோயில் தொலைக்காட்சி துவங்குவதற்கு இந்து சமய அறநிலையதுறையின் பொதுநல நிதியைக் கொண்டு பயன்படுத்த தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

📕📘திருச்சியில் வரும் மார்ச் 14ல் திமுக 11வது மாநில மாநாடு.

தேனியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

📕📘புதுச்சேரி அரசியல் குழப்பங்களுக்கு நாராயணசாமி தான் காரணம் 

- எல்.முருகன்

📕📘வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தபால் வாக்கு அளிக்கக் கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

📕📘கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் வருமான விவரங்களை 10 மாதத்தில் இணையத்தில் வெளியிட வேண்டும் 

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

📕📘மீண்டும் மார்ச் 1-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்

பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

📕📘நேற்று  நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை.ஆட்சியை மாற்றுவது பாஜகவுக்கு கை வந்த கலை - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி                                                                   

📕📘புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நேற்று பொறுப்பேற்றார் தமிழிசை சௌந்தரராஜன்; அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு பணியை தொடங்குவேன் என பேட்டி.

📕📘தொடர்ந்து 10வது நாளாக அதிகரித்துள்ள பெட்ரோல், டீசல் விலையை குறைக்க, மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் என அமைச்சர் ஜெயக்குமார் உறுதி.

📕📘அமமுக ஆட்சி அமைப்பதும், அதிமுகவை மீட்பதும்தான் முக்கிய குறிக்கோள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேச்சு.

📕📘ஐசிசியின் டெஸ்ட் தரவரிசையில் ஆல்-ரவுண்டா்கள் பிரிவில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926