இன்றைய செய்திகள் தொகுப்பு... 20.02.2021 (சனி)...

 


🌹உலகத்தில் உள்ள அனைவருமே ஒரே ரகம்தான்.

நம்மை ஒருவருக்கு பிடித்தால் மற்றவர்களிடம் நம்மை பற்றி நல்லது பேசுவார்கள்.

பிடிக்கவில்லை என்றால் நம்மை பற்றி கெட்டதை பேசுவார்கள்.!

🌹🌹பிறர் அவமானப்படுத்தும்போது தாழ்த்திப் பேசும்போதும் அமைதியாக கடந்து செல்பவனை விட மிகச் சிறந்த பலசாலி யாருமில்லை இவ்வுலகில்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈தமிழ்நாடு தொடக்கப்பள்ளி  ஆசிரியர் மன்றத்தின்  தொடர் முழுக்க ஆர்ப்பாட்டம்- CPS-ஐ இரத்து செய்து பழைய ஓய்வூதியம் அமுல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசிற்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற  வலியுறுத்தி இன்று (20.02.2021) சனிக்கிழமை திருச்சியில் மதியம் 2 மணிக்கு மாபெரும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்  நடைபெறவுள்ளது.

🌈🌈தொடக்க கல்வி: 2020-21 ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சி/ அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள்- பதவி உயர்வு கலந்தாய்வு- திருத்திய கலந்தாய்வு அட்டவணை.

👉ந.நி.ப.தலைமை ஆசிரியர் பதவி உயர்வு :27.02.2021

👉பட்டதாரி  ஆசிரியர் பதவி உயர்வு : 27.02.2021

👉தொ.ப.த.ஆ பதவி உயர்வு : 28.02.2021

🌈🌈உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த கூடாதென்று உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் தொடுத்த வழக்கில் தீர்ப்பு.

இன்று நடைபெறவிருந்த உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்விற்கு இடைக்காலத் தடை வழங்கப்பட்டுள்ளது.

🌈🌈01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் இயற்பியல் மற்றும்  வேதியியல் பாட முதுகலை ஆசிரியராகப் பதவி உயர்வு அளிக்க அளிக்க தகுதிவாய்ந்தோர்  பெயர்ப்பட்டியல் திருத்தம் செய்து இறுதிப் பட்டியல் வெளியீடு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

🌈🌈அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு வேலை நாட்களில் துறைத் தேர்வுகள் - பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாதிப்பு.

🌈🌈பிளஸ்-1 வகுப்புக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை திட்டம்.

🌈🌈கௌரவ விரிவுரையாளர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு இடைக்கால தடை

🌈🌈போதிய கால அவகாசமின்றி நடத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வை தள்ளிவைக்க வேண்டும்: கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை

🌈🌈தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

🌈🌈உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களில் 3 சதவீதம் வட்டார கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு.

🌈🌈தருமபுரி மாவட்ட வேளாண் கல்வி நிறுவனத்திற்கு ( DIPLOMA INSTITUTE ) உதவி பேராசிரியர்கள், பணியாளர்கள் நியமனம் - அரசாணை வெளியீடு.

🌈🌈பிளஸ் 2 தேர்வுக்கு போதிய அவகாசம் இல்லை ஆசிரியர்கள் கூடுதல் நேரம் பாடம் நடத்தவேண்டும்: அமைச்சர் பதில்

🌈🌈பிளஸ்-1 வகுப்புக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை திட்டம் . இந்தாண்டு  +11 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த வாய்ப்பில்லை என தகவல்

🌈🌈முதுகலை வணிகவியல் ஆசிரியர் இரண்டாம் கட்ட பதவி உயர்வு கலந்தாய்வு - இன்று 20.02.2021 அன்று சென்னையில் நடைபெறுகிறது - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

🌈🌈சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 

🌈🌈தமிழகத்‌தில்‌ ஒரே சமயத்தில்‌ பதவி உயர்வு கலந்தாய்வு, துறை தேர்வுகள்‌ நடக்கவுள்ளதால்‌, அரசுப்பள்ளி ஆசிரியர்கள்‌  செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

🌈🌈முதலில் போட்டி, பின் அதிமுகவை மீட்டெடுப்போம்

செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், ''அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து இந்தச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகுதான்  அதிமுகவை மீட்டெடுப்போம்'' என்றார்.

அமமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தை நடத்துகிறதா என்ற கேள்விக்கு, ''அமமுக-பாஜக கூட்டணி குறித்து யாரும் பேசவில்லை என்றார். மேலும் ''சுதாகரனுக்கு அபராதத் தொகை செலுத்தப் பணம் இல்லை'' என்றார்

🌈🌈தமிழக சட்டப்பேரவையில் வரும் 23ம் தேதி தலைவர்களின் படங்கள் திறப்பு விழா நடக்கிறது.

வ.உ.சி., ப.சுப்புராயன், ஓமத்தூரார் ராமசாமி ரெட்டியாரின் படங்கள் பேரவையில் திறக்கப்படுகின்றன. 3 தலைவர் படங்கள் திறக்கப்படுவதன் மூலம் பேரவையில் தலைவர்களின் படங்கள் எண்ணிக்கை 15 ஆக உயருகிறது. தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் மாலை 5:30 மணிக்கு படத்திறப்பு விழா நடக்கிறது.

🌈🌈திமுக ஆட்சிக்கு வந்ததும் சிறு, குறு தொழில் முனைவோருக்கான ஜி.எஸ்.டி.வரியை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தும் என அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். 

கோவை கொடீசியா மைதானத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பொதுமக்களிடம் பேசி குறைகளை கேட்டறிந்த ஸ்டாலின், அதனை மனுவாகவும் பெற்றுக் கொண்டார். அண்ணா, கலைஞர் மீது ஆணையாக கூட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் உறுதியளித்தார்.

🌈🌈டீசல் விலை உயர்வை அடுத்து பார்சல் லாரி வாடகை கட்டணம் இன்று முதல் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 63 ஆக இருந்தபோது வசூலித்த லாரி வாடகையே தற்போதும் வசூலிக்கப்படுகிறது. டீசல் விலைலிட்டர் ரூ.85 ஆக அதிகரித்துவிட்டதால் லாரி வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

🌈🌈உள்துறை அமைச்சர் அமித்ஷா பிப்ரவரி 22ல் நேரில் ஆஜராக கொல்கத்தா கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி குறித்து பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் அமைச்சர் அமித்ஷாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

🌈🌈ஜெயலலிதா நினைவு இல்லத்தில் பொதுமக்களை அனுமதிக்க விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவு

சென்னை: போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தில் பொதுமக்களை அனுமதிக்க விதித்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் பார்வைக்கு திறக்கக்கூடாது என்ற தனிநீதிபதி இடைக்கால உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்திருந்தது. தற்போது தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

போயஸ் இல்லத்தை கையகப்படுத்தியதை எதிர்த்து தீபா, தீபக் வழக்குகளை சேர்த்து விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

🌈🌈டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் கேப்டன் சதீஷ் ஷர்மா உடலை ராகுல் காந்தி சுமந்து சென்றார்.

இறுதிச்சடங்கில் காங்கிரஸ் கட்சியினருடன் சேர்ந்து சதீஷ் ஷர்மா உடலை  தோளில் வைத்து சுமந்து சென்றார்.                                                                                      

🌈🌈தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களின் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

8 வாரங்களில் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு

தற்காலிக பணியாளர்கள் தொடர்ந்த வழக்குகளில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

🌈🌈வரும் தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் 

திமுக  எம்.பி. கனிமொழி

🌈🌈அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை - வரும் 23ம் தேதிக்குள் நல்ல முடிவை எடுக்காவிட்டால், வேலைநிறுத்த போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என போக்‍குவரத்து ஊழியர்கள் எச்சரிக்‍கை

🌈🌈சீனாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 2020-ம் ஆண்டில் உள்நாட்டு சுற்றுலா 52.1% குறைவு. 

சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் சீனாவில் 61.1% வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

🌈🌈ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 குறைந்து சவரன் ₹34,720-க்கு விற்பனை.

கிராமுக்கு ₹40 குறைந்து ₹4,340- க்கு விற்பனை.

🌈🌈கொரோனா ஊரடங்கு மற்றும் குடியுரிமை சட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளும் ரத்து.

கூடங்குளம் போரோட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் சட்டதிட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டு  ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் - முதல்வர் கடையநல்லூரில் அறிவிப்பு.

🌈🌈Big boss நிகழ்ச்சியில் கமல்ஹாசன் முன்மொழிந்த புத்தகங்கள் அனைத்தும் இந்தாண்டு சென்னை புத்தககாட்சியில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

🌈🌈மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகளில் ஊழல் நடைபெற்றதை நிரூபித்தால் பொது வாழ்க்கையில் இருந்து விலக தயார்

- மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.

🌈🌈குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி

65 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள் பேருந்துகளில் பயணிப்பதை தவிர்க்க அறிவுறுத்தல்.

🌈🌈அண்ணா பல்கலைகழகத்தில் எம்.டெக் படிப்பில் மத்திய அரசின் 49.5% இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு.

🌈🌈கோவிஷீல்ட் பாதுகாப்பற்றது என அறிவிக்கக் கோரி வழக்கு.

ரூ.5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

🌈🌈தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி மத்திய துணை இராணுவப்படையினர் வரும் பிப்ரவரி 25ம் தேதி தமிழகம் வருகின்றனர்

🌈🌈ஓபிஎஸ் நிச்சயம் மனது கஷ்டத்துடனே இப்போது இருக்கிறார்

அவர் ராமர் அருகில் பரதனாக இருக்க வேண்டியவர்

இராவணன் அருகில் இப்போது இருக்கிறார்

- டிடிவி தினகரன்

🌈🌈புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி தலைமைச் செயலகம் முன் அரசு ஊழியர்கள் சாலை மறியல். 

மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

🌈🌈கோவையில் தடுப்பூசி பணிகள் நிறுத்தம்

இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததை தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

தடுப்பூசி போடப்பட்ட 7 ஆயிரம் குழந்தைகள் கண்காணிப்பு - சுகாதாரத்துறை

🌈🌈அரசு ஊழியர்கள் மின்சார வாகனம் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும்.

எல்பிஜி சிலிண்டர்களுக்கு மானியம் வழங்குவதற்கு பதிலாக, மின்சார சமையல் சாதனங்களுக்கு மானியம் வழங்க வேண்டும் - அமைச்சர் நிதின் கட்கரி

🌈🌈இந்தியா சீனாவின் முக்கியமான அண்டை நாடு.

ஆரோக்கியமான, நிலையான உறவை மீட்டெடுப்பதே இரு நாடுகளின் அவா ஆகும்.

- சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை.

🌈🌈காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்கு வரும் 21ஆம் தேதி தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.

🌈🌈கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை எனக்கூறினார்கள்; ஆனால், மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது

- திமுக தலைவர் ஸ்டாலின்

🌈🌈அதிமுக அமைச்சர்கள் மீது மூன்றாம் பார்ட் ஊழல் புகார் கொடுக்க அவசியம் வராது, அதுவரை அவர்கள் ஆட்சியில் இருக்க மாட்டார்கள்

-துரைமுருகன் பேட்டி.

🌈🌈வீட்டில் டிவி, ஃப்ரிட்ஜ், பைக் அல்லது 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் தங்களிடம் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கான (பிபிஎல் - Below Poverty Line) ரேஷன் காட்டு இருந்தால் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என கர்நாடகா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

🌈🌈பெண்களுக்காக அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது; தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.

🌈🌈சொந்த நாட்டு மக்கள் மீதே பொருளாதார தாக்குதல்; பிரதமர் மோடி மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.

🌈🌈18 கோடி தொண்டர்களை கொண்ட பாஜகவை மற்ற கட்சிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது; பாஜக தேசியத்தலைவர் ஜே.பி. நட்டா கருத்து.

🌈🌈கடன் வாங்கிய விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பெயரை பயன்படுத்திய விவகாரம்; இயக்குநர் கஸ்தூரிராஜாவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை.

🌈🌈ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போனை வரும் மார்ச் 4ம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.

🌈🌈அமேசான் நிறுவனத்தின் ஆன்லைன்" வர்த்தகத்துக்கு உடனடியாக தடை விதிக்க அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கோரிக்கை.

🌈🌈செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரென்ஸ் விண்கலம்.

🌈🌈அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸின் பெயரை, வா்த்தக ஆதாயத்துக்காகப் பயன்படுத்தக் கூடாது வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது.

🌈🌈எச்1பி விசாவுக்கான விண்ணப்பங்கள் தேவைக்கும் அதிகமாகவே குவிந்துள்ளதாக அமெரிக்க குடியுரிமை சேவை மையம் தெரிவித்துள்ளது. 

🌈🌈 ஆஸ்திரேலியாவில் தங்களது பயன்பாட்டாளா்கள் செய்திகளைப் பகிா்வதற்கு முகநூல் நிறுவனம் தடை விதித்துள்ளது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926