கர்ப்பிணிகளுக்கு அவரசகால வாட்ஸ்ஆப் உதவி எண் – தேசிய பெண்கள் ஆணையம் அறிமுகம்...

 நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணிகளுக்காண அவசர கால உதவி எண்ணை புதிதாக அறிமுகப்படுத்தியுளளது தேசிய பெண்கள் ஆணையம். இந்த எண் எல்லா நேரங்களிலும் செயல்பாட்டில் இருக்கும் என அறிவித்துள்ளது.


அவசர கால உதவி எண்:

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் பாதிப்பும் புதிய உச்சம் அடைகிறது. கொரோனா இரண்டாம் அலை 



தற்போது இந்தியாவில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த வருடத்தை விட இந்த கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை உருவாக்கியுள்ளது.


இதனால் மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. போதுமான படுக்கை வசதிகள் 



இல்லாததால் தரையில் படுக்கும் அவல நிலை ஏற்படுகிறது. கொரோனா வைரஸ் பரவியதில் இருந்தே மருத்துவமனைகளில் மற்ற நோய்களுக்கு சிகிக்சை அளிப்பதில்லை.


அதே போல் கர்பிணிகளையும் சில தனியார் மருத்துவமனைகள் அனுமதிப்பதில்லை. இதனால் கர்ப்பிணிகளுக்கு உரிய நேரத்தில் சிகிக்சை அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. தற்போது நாடு முழுவதும் இரவு நேர மற்றும் வார இறுதி ஊரடங்குகள் இருப்பதால் 



கர்ப்பிணிகளுக்கு அவசரமான நேரங்களில் போக்குவரத்து சேவைகள் கிடைப்பதில்லை. இதனை கருத்திற்கொண்டு இந்திய தேசிய பெண்கள் ஆணையம் கர்ப்பிணிகளுக்கு என அவசர உதவி வாட்ஸ் ஆப் எண்ணை 9354954224 மேலும் helpatnew@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எண் எல்லா நேரங்களிலும் செயல்பாட்டில் இருக்கும் எனவும் பெண்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.