பல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்தும் முறைகள்...

 கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர் மிகவும் முக்கியம். இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து அரசு சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அவை,



10 நிமிடம் நிதானமாக அமர்ந்த பின் உங்கள் ஆக்சிஜன் அளவை சரி பார்க்கவும்.


பல்ஸ் சரிபார்க்கும் கருவியை தொடுவதற்கு முன்பு விரல்களை நன்கு சுத்தப்படுத்த வேண்டும்.


ஆள்காட்டி அல்லது நடுவிரலில் கருவியை பொறுத்த வேண்டும்.


கருவியில் நாடி துடிப்பு மற்றும் ஆக்ஜிசன் அளவு சீராக தெரியும் வரை காத்திருக்க வேண்டும்.


பிறகு கருவியில் தெரியும் அளவை குறித்து வைக்க வேண்டும்.


ஆக்சிஜன் அளவு 94% கீழ் இருந்தால் மற்ற விரல்களை வைத்து பார்க்கவும்.


மற்ற விரல்களிலும் அதே அளவு இருந்தால் மருத்துவரை நாடவும்.


விரலில் நகப்பூச்சு, மருதாணி போன்றவை இருந்தால் உடலின் ஆக்ஜிசன் அளவை கருவி தவறாக காட்டும்.