தொடுதல் இல்லா சேவை - பாரத் ஸ்டேட் வங்கியான, எஸ்.பி.ஐ., அறிமுகம்...

 


தொடுதல் இல்லா சேவை'யை, பாரத் ஸ்டேட் வங்கியான, எஸ்.பி.ஐ., அறிமுகப்படுத்தி உள்ளது.இது குறித்து, எஸ்.பி.ஐ., வங்கி அதிகாரிகள் கூறியதாவது:


வாடிக்கையாளர்கள், வீட்டில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்துகிறோம். அவர்களுக்கு தேவையான சேவையை வழங்க, எஸ்.பி.ஐ., தயாராக இருக்கிறது. அவசர வங்கி சேவைகளுக்கு, தொடுதல் இல்லாத சேவையை வழங்குகிறோம்.இதன்படி, வங்கியின் இலவச வாடிக்கையாளர் சேவை எண்களான, 1800 112 211 அல்லது 1800 425 3800 ஆகிய எண்களுக்கு அழைத்து, வங்கி சேமிப்பு கணக்கின் இருப்புத் தொகை மற்றும் இறுதியாக மேற்கொண்ட, ஐந்து பரிவர்த்தனை தகவல்களை, குரல் வழி தகவல் மற்றும் குறுந்தகவல் வாயிலாக பெற முடியும்.


ஏ.டி.எம்., அட்டையின் சேவையை நிறுத்துதல், மீண்டும் வழங்குதல் தொடர்பான சேவையையும் பெறலாம். மேலும், ஏ.டி.எம்., அட்டையின், 'பின்' எனும், தனிநபர் அடையாள எண்ணை உருவாக்கி கொள்ளவும் முடியும்.பழைய ஏ.டி.எம்., அட்டையின் சேவையை முற்றிலுமாக நிறுத்தி, புதிய ஏ.டி.எம். அட்டை வழங்கவும் இதன் வாயிலாக கோரிக்கை வைத்து, வங்கி சேவைகளை பெறலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.