பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-11-2021 - திங்கள் - (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.11.21

  திருக்குறள் :


பால்:பொருட்பால். 


இயல்: அரசியல். 


அதிகாரம்: தெரிந்து செயல் வகை.


குறள் எண் : 462 


குறள்

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்

கரும்பொருள் யாதொன்று மில்.


பொருள்:

தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன், சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் நம்மால் செய்ய முடியாத செயல் இன்று எதுவும் இல்லை.


பழமொழி :

where there is anger, there will be excellent qualities.



 கோபமுள்ள இடத்தில்தான் குணமிருக்கும்.



இரண்டொழுக்க பண்புகள் :


1. தனக்கு இல்லாத குணத்தையும் இயல்பையும் தகுதியையும் , இருப்பதாகக் காட்டிக் கொள்வதில்லை இயற்கை. 


2. நானும் அதை போலவே இல்லாதவற்றை இருப்பது போல் காட்டி பெருமை கொள்ள மாட்டேன்


பொன்மொழி :


நம் கனவுகளை பின்தொடரும் தைரியம் நமக்கிருந்தால், அதை நனவாக்க நம்மால் முடியும் : -----வால்ட் டிஸ்னி



பொது அறிவு :


1. உலகின் 17 பல்கலைக்கழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் யார்? 


டாக்டர். இராதாகிருஷ்ணன். 


2. தென்னிந்தியாவின் உயரமான சிகரம் எது? 


ஆனை முடி.








English words & meanings :



Debt - Money owed to another person, கடன், 


Bonus - getting extra money as a reward. வெகுமதி.

ஆரோக்ய வாழ்வு :


பொன்னாங்கண்ணி கீரை



இதில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து,இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், , சுண்ணாம்பு சத்துக்கள் வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.


உடல் பொன்போல பளபளப்பாகும் என்பதால் இப்பெயர். கீரைகளின் ராணி என்று சொல்லத்தக்க கீரை பொன்னாங்கண்ணி. பலப் பல‌ மருத்துவக் குணங்களை கொண்டது.



பலன்கள்

கண்பார்வைக்கு மிகவும் நல்லது.

சருமத்துக்கு மிகவும் நல்லது.

மூல நோய், மண்ணீரல் நோய்களை சரிப்படுத்தும் ஆற்றல் உடையது.

ரத்தத்தைச் சுத்தீகரிக்கும்

உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

வாய் துர்நாற்றத்தை நீக்கும்.

இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.

கணினி யுகம் :


Shift + L - Add a simple line, 


Shift + O - Add orthogonal line

நீதிக்கதை


மணல் எழுத்தும் கல்லெழுத்தும்!


ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் பாலை மணல் வெளியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஒரு விஷயம் குறித்து வாதம் ஆரம்பித்தது. அது வாய்ச்சண்டையாக மாறியது. நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான் மற்றொருவன். அறை வாங்கியவன் கோபிக்கவில்லை. அமைதியாக ஒதுங்கிப் போய் மணலில் அமர்ந்தான்.


விரல்களால் மணல் இன்று என் உயிர் நண்பன் என் கன்னத்தில் அறைந்துவிட்டான்! என்று எழுதினான். மற்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் நடையைத் தொடர்ந்தார்கள். வழியில் ஒரு பாலைவன ஊற்றைக் கண்டார்கள். நடந்ததை மறந்து, அந்த ஊற்றில் வெக்கை தீர குளிக்க ஆரம்பித்தார்கள். கன்னத்தில் அறை வாங்கியவன் காலை திடீரென்று யாரோ இழுப்பது போன்ற உணர்வு. அவன் புதைகுழியில் சிக்கிக் கொண்டான். 


நண்பன் நிலை கண்டதும், பெரும் பிரயத்தனப்பட்டு காப்பாற்றி கரை ஏற்றினான் அவனை அறைந்தவன். உயிர் பிழைத்த நண்பன் ஊற்றை விட்டு வெளியில் வந்ததும், அருகில் இருந்த ஒரு கல்லின் மீது அமர்ந்தான். அங்கு ஒரு கல்லை எடுத்து தட்டித் தட்டி, இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான் என்று எழுத ஆரம்பித்தான்.


இதையெல்லாம் பார்த்த மற்றவன் கேட்டான்... நான் உன்னை அறைந்தபோது, மணலில் எழுதினாய். இப்போது காப்பாற்றியிருக்கிறேன். கல்லில் எழுதுகிறார். ஏன் இப்படி? இதற்கு என்ன அர்த்தம் நண்பா? என்றான். அதற்கு நண்பன், யாராவது நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு எனும் காற்று அதை அழித்துவிட்டுப் போய்விடும். ஆனால் யாராவது நல்லது செய்தால் அதை கல்லில் எழுது… காலத்தைத் தாண்டி அது நிலைத்திருக்க வேண்டும்! என்று பதில் கூறினார்.


இன்றைய செய்திகள்


01.11.21


◆சிவில் சர்வீஸ் தேர்வுகளில் கிராமப்புற மாணவர்கள் எளிதில் வெற்றிபெற வாய்ப்புக்கள் அதிகம் என முதல் முயற்சியிலேயே இந்திய வனப்பணிகள் தேர்வில் வெற்றி பெற்றதுடன், தமிழகத்திலேயே முதலிடம் பெற்ற பழநி அருகேயுள்ள கலிக்கநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த திவ்யா தெரிவித்துள்ளார்.


◆சிலம்பப் பயிற்சியாளர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கம், மாணவர்களுக்கு வேலையில் 3% ஒதுக்கீடு என மாநில சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


◆நவம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் 100% முதல் தவணை தடுப்பூசி போட நடவடிக்கை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.


◆ஆதார் எண் போல ஒவ்வொரு முகவரிக்கும் தனித்தனியாக மின்னணு முகவரி குறியீடு வழங்க மத்திய அரசு திட்டம்: வர்த்தக நிறுவனங்கள் இணைய வழியில் முகவரியை சுலபமாக  உறுதிப்படுத்த முடியும்.


◆உலக நாடுகளுக்கு உதவுவதற்காக அடுத்த ஆண்டு இறுதிக்குள் 500 கோடி தடுப்பூசி டோஸ்களை தயாரிக்க இந்தியா தயாராக இருப்பதாக ‘ஜி-20’ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.


◆ரஷ்யாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொரோனா பாதிப்பு.


◆ஆப்கானிஸ்தான் ஆட்சியை உலக நாடுகள் அங்கீகரிக்காவிட்டால் விளைவுகள் ஏற்படும் என்று தலீபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


◆14 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் காஷ்மீர் மாணவி தங்க பதக்கம் வென்றுள்ளார்.


◆சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சத்யன்-ஹர்மீத் தேசாய் ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.



Today's Headlines


 * Divya from Kalikkanayakkanpatti village near Palani, who passed the Indian Forest Service exam in the first attempt and acquired first place in Tamil Nadu, said that "rural students have a better chance of success in the civil service exams" 


 .* 1 Rs 1 lakh cash for silambam coaches, 3% quota for students in government jobs, said the state environment-climate change department and youth welfare and sports development minister.


  * 100% first dose vaccination will be given to Tamil Nadu people by the end of November: Health Minister Ma Subramanian


  * Federal Government Scheme to provide separate electronic address code for each address like reference number: Businesses can easily verify the address online.


 * At the G-20 summit, Prime Minister Modi assured that India was ready to produce 500 crore vaccine doses by the end of next year to help the world.


 * There is an uncontrolled spread of corona in Russia.


* The Taliban have warned of consequences if the world does not recognize the Afghan regime.


 * Kashmir student wins gold at World Kickboxing Championships for Under-14s


*  India's Sathyan-Harmeet Desai pair clinch the title at the International Table Tennis Championships.


 Prepared by


Covai women ICT_போதிமரம்

7 இ.ஆ.ப. அலுவலர்களைப் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு - அரசாணை (G.O.Rt.No.:4261, Dated: 30-10-2021) வெளியீடு - இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் இ.ஆ.ப. அவர்கள் நியமனம்...

 


7 இ.ஆ.ப. அலுவலர்களைப் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு - அரசாணை வெளியீடு...


‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் நியமனம்.


தமிழக தொழில்துறை முன்னேற்ற கழக (சிப்காட்) நிர்வாக இயக்குநராக நிஷாந்த் கிருஷ்ணா ஐ.ஏ.எஸ் நியமனம்.


மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்திற்கு மோனிகா ரானா ஐ.ஏ.எஸ் நியமனம்.


தமிழக நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டு கழகத்திற்கு சிவகிருஷ்ணமூர்த்தி ஐ.ஏ.எஸ் நியமனம்.


வணிகவரித்துறை இணை ஆணையராக ஆனந்த் மோகன் ஐ.ஏ.எஸ் நியமனம்.


வணிகவரித்துறை (புலனாய்வு-1) இணை ஆணையராக மெர்ஜி ரம்யா ஐ.ஏ.எஸ் நியமனம்.


பள்ளி கல்விதுறையின் இல்லம் தேடி கல்வி துறை சிறப்பு ஆணையராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ் நியமனம்.


தமிழக இ-சேவை மையத்தின் இணை இயக்குநராக பாலசந்தர் ஐ.ஏ.எஸ் நியமனம்.


>>> Click here to Download G.O.Rt.No.:4261, Dated: 30-10-2021...



கனமழை காரணமாக (01.11.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டம்...



கடலூர்  மாவட்டம்


கனமழை காரணமாக நாளை (01.11.2021)  கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்  பாலசுப்பிரமணியம் உத்தரவு...


கடலூர் மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் நாளை பள்ளிகளுக்கு விடுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிலசுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில்," இன்று காலை முதலே மாவட்டம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. மேலும் நாளையும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் நாளை பள்ளிகளுக்கு மட்டும் ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


31-10-2021ன் படி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் - சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியீடு - இணைப்பு: அக்டோபர் மாதத்தில் பெய்த மழை விவரம் மாவட்ட வாரியாக பதிவு செய்யப்பட்டுள்ளது...



>>> 31-10-2021ன் படி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் - சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியீடு - இணைப்பு: அக்டோபர் மாதத்தில் பெய்த மழை விவரம் மாவட்ட வாரியாக பதிவு செய்யப்பட்டுள்ளது...

உடல் வெப்பநிலை செல்சியஸ் / ஃபாரன்ஹீட் அளவில் எவ்வளவு இருக்கலாம்? விளக்கம் (Normal body temperature in Celsius / Fahrenheit )...

 

உடல் வெப்பநிலை செல்சியஸ் / ஃபாரன்ஹீட் அளவில் எவ்வளவு இருக்கலாம்? விளக்கம் (Normal body temperature in Celsius / Fahrenheit )...



Normal

°C 35.5 - 37.2


°F 95.9 - 98.96




Low Fever

°C 37.3 - 39.0


°F 99.14 -102.2




Moderate Fever

°C 39.1 - 40.0


°F 102.38 - 104.0




HIGH FEVER

°C 40.1 - 42.0


°F 104.18 - 107.6




Emergency/  Hyperpyrexia

°C >42.10


°F >107.78

இன்றைய (31-10-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

அக்டோபர் 31, 2021



தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் கீர்த்தி அடைவீர்கள். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை உருவாக்கும். அவ்வப்போது ஏற்படும் பழைய சிந்தனைகளின் மூலம் மனதில் அமைதியின்மை ஏற்படும். சிந்தனைகள் அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  மேற்கு


அதிர்ஷ்ட  எண்  :  1


அதிர்ஷ்ட  நிறம்  :  ஆரஞ்சு நிறம்



அஸ்வினி :  முன்னேற்றமான நாள்.


பரணி :  கீர்த்தி உண்டாகும்.


கிருத்திகை :  நம்பிக்கை மேம்படும்.

---------------------------------------





ரிஷபம்

அக்டோபர் 31, 2021



கல்வி தொடர்பான பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். விவசாயம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஆலோசனைகள் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  தெற்கு


அதிர்ஷ்ட  எண்  :  2


அதிர்ஷ்ட  நிறம்  :  வெள்ளை நிறம்



கிருத்திகை :  நுணுக்கங்களை அறிவீர்கள்.


ரோகிணி :  உதவிகள் கிடைக்கும்.


மிருகசீரிஷம் :  புரிதல் அதிகரிக்கும்.

---------------------------------------






மிதுனம்

அக்டோபர் 31, 2021



சிறு தொழில் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக மனதில் இருந்த கவலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எந்தவொரு காரியத்தையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஒத்துழைப்பு கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  கிழக்கு


அதிர்ஷ்ட  எண்  :  9


அதிர்ஷ்ட  நிறம்  :  சிவப்பு நிறம்



மிருகசீரிஷம் :  லாபம் அதிகரிக்கும்.


திருவாதிரை :  வாய்ப்புகள் ஏற்படும்.


புனர்பூசம் :  திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------





கடகம்

அக்டோபர் 31, 2021



சுபகாரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும், அது சார்ந்த உதவிகளும் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் சாதகமாகும்.  கணிப்பொறி சார்ந்த பணிகளில் புதுவிதமான சிந்தனைகளின் மூலம் மாற்றம் உண்டாகும். நம்பிக்கை அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  வடக்கு


அதிர்ஷ்ட  எண்  :  8


அதிர்ஷ்ட  நிறம்  :  அடர் நீலம்



புனர்பூசம் :  உதவிகள் கிடைக்கும்.


பூசம் :  வாய்ப்புகள் உண்டாகும்.


ஆயில்யம் :  புதுமையான நாள்.

---------------------------------------





சிம்மம்

அக்டோபர் 31, 2021



பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். காப்பகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு நன்மை உண்டாகும். குழப்பமான நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  தெற்கு


அதிர்ஷ்ட  எண்  :  4


அதிர்ஷ்ட  நிறம்  :  சாம்பல் நிறம்



மகம் :  ஆர்வம் அதிகரிக்கும்.


பூரம் :  சிந்தனைகள் உண்டாகும்.


உத்திரம் :  நன்மையான நாள்.

---------------------------------------





கன்னி

அக்டோபர் 31, 2021



உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மாற்றம் உண்டாகும். பெற்றோர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நிர்வாகம் தொடர்பான மாற்றங்களில் உடனிருப்பவர்களின் ஆலோசனைகளை கேட்கவும். கவனம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  கிழக்கு


அதிர்ஷ்ட  எண்  :  7


அதிர்ஷ்ட  நிறம்  :  பழுப்பு நிறம்



உத்திரம் :  மாற்றம் உண்டாகும்.


அஸ்தம் :  ஆதரவு கிடைக்கும்.


சித்திரை :  ஆலோசனைகள் வேண்டும்.

---------------------------------------






துலாம்

அக்டோபர் 31, 2021



கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நண்பர்களுடன் கலந்துரையாடி மனம் மகிழ்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி விடுதலை பெறுவீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். முன்னேற்றமான நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  வடக்கு


அதிர்ஷ்ட  எண்  :  3


அதிர்ஷ்ட  நிறம்  :  இளம் மஞ்சள்



சித்திரை :  உதவிகள் கிடைக்கும்.


சுவாதி :  நம்பிக்கை மேம்படும்.


விசாகம் :  கவலைகள் நீங்கும்.

---------------------------------------






விருச்சிகம்

அக்டோபர் 31, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவேறும். தந்தைவழி தொழில் சார்ந்த முயற்சிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றங்களும், மகிழ்ச்சியான தருணங்களும் அமையும். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வெற்றி கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  மேற்கு


அதிர்ஷ்ட  எண்  :  6


அதிர்ஷ்ட  நிறம்  :  ஊதா நிறம்



விசாகம் :  பொறுப்புகள் அதிகரிக்கும்.


அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும்.


கேட்டை :  கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------






தனுசு

அக்டோபர் 31, 2021



வெளிவட்டாரங்களில் உள்ள நபர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சிந்தனைகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான சிந்தனைகள் மேம்படும். சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெருமைகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  வடக்கு


அதிர்ஷ்ட  எண்  :  1


அதிர்ஷ்ட  நிறம்  :  சிவப்பு நிறம்



மூலம் :  அனுபவம் மேம்படும்.


பூராடம் :  அறிமுகம் கிடைக்கும்.


உத்திராடம் : சாதுர்யம் வெளிப்படும்.

---------------------------------------






மகரம்

அக்டோபர் 31, 2021



கால்நடை சார்ந்த வியாபாரத்தில் பொறுமை வேண்டும். எந்தவொரு செயலிலும் முன்கோபமின்றி விவேகத்துடன் செயல்பட்டால் முன்னேற்றத்தையும், லாபத்தையும் அடைய முடியும். உடல் நிலையில் சோர்வும், ஒருவிதமான மந்தநிலையும் ஏற்படும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்கவும். பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  கிழக்கு


அதிர்ஷ்ட  எண்  :  5


அதிர்ஷ்ட  நிறம்  :  இளஞ்சிவப்பு



உத்திராடம் :  முன்கோபமின்றி செயல்படவும்.


திருவோணம் :  மந்தநிலை ஏற்படும். 


அவிட்டம் :   கவனம் வேண்டும்.

---------------------------------------





கும்பம்

அக்டோபர் 31, 2021



வெளிநாடு தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும். விவாதங்களின் மூலம் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். வாழ்க்கைத்துணைவருடன் செல்லும் சிறு தூரப் பயணங்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். லாபம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  தெற்கு


அதிர்ஷ்ட  எண்  :  6


அதிர்ஷ்ட  நிறம்  :  வெளிர் பச்சை



அவிட்டம் :  தெளிவு பிறக்கும்.


சதயம் :  மகிழ்ச்சியான நாள்.


பூரட்டாதி : எதிர்ப்புகள் குறையும்.

---------------------------------------






மீனம்

அக்டோபர் 31, 2021



மனதிற்குப் பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். குறுகிய தூரப் பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். சொத்துப் பிரிவினைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மனதில் வைராக்கிய சிந்தனைகள் மேம்படும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  மேற்கு


அதிர்ஷ்ட  எண்  :  4


அதிர்ஷ்ட  நிறம்  :  ஊதா நிறம்



பூரட்டாதி :  மாற்றம் ஏற்படும்.


உத்திரட்டாதி :  சாதகமான நாள்.


ரேவதி :  சிக்கல்கள் குறையும்.

---------------------------------------


01-11-2021 முதல் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு - கோவிட்19 மற்றும் டெங்கு பரவல் தடுப்பிற்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்ய ஏதுவாக பள்ளி வாரியாக ஆய்வு அலுவலர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் - கரூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செயல்முறைகள் ந.க.ட்டி1/5393/2021, நாள் : 30-10-2021...



 01-11-2021 முதல் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு - கோவிட்19 மற்றும் டெங்கு பரவல் தடுப்பிற்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்ய ஏதுவாக பள்ளி வாரியாக ஆய்வு அலுவலர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் - கரூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செயல்முறைகள் ந.க.ட்டி1/5393/2021, நாள் : 30-10-2021...


>>> கரூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செயல்முறைகள் ந.க.ட்டி1/5393/2021, நாள் : 30-10-2021...


>>> வட்ட அளவிலான பொறுப்பு அலுவலர்கள்...



"சூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்; அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் - 110 எல்லைப் போராட்ட தியாகிகளுக்கு தலா ரூ.1லட்சம் பொற்கிழி” - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 988, நாள்: 30-10-2021...



 "சூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்; அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் - 110 எல்லைப் போராட்ட தியாகிகளுக்கு தலா ரூ.1லட்சம் பொற்கிழி” - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 988, நாள்: 30-10-2021...





DEE - 01.11.2021 முதல் 1-8 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் - ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் & மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 015767/கே2/2021, நாள்: 30-10-2021...



DEE - 01.11.2021 முதல் 1-8 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் - ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் & மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 015767/கே2/2021, நாள்: 30-10-2021...


>>> தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 015767/கே2/2021, நாள்: 30-10-2021...


தமிழகத்தில் கோவிட் - 19 பெருந்தொற்றுக் காரணமாக மார்ச் 2020 முதல் பள்ளிகள் மூடப்பட்டன. 9.12 ஆம் வகுப்புகளுக்கு 01.09.2021 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்சமயம் 1-8 ஆம் வகுப்புகளுக்கு 01.11.2021 முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. நீண்ட காலம் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையிலும் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் தடை பெறாமல் நடைபெற மாணவர்களுக்கு உரிய நேரத்தில் புத்தகங்கள் வழங்குதல் , கல்வி தொலைக்காட்சியின் மூலம் அனைத்து வகுப்புகளுக்குக் காணொலிப் பாடங்களை வழங்குதல் , வானொலி நிலையங்கள் வானொலிப் பாடங்களை ஒலிபரப்புதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டன. இவை தவிர . தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தனிப்பட்ட முயற்சிகளாக புலனம் ( Whats App ) மற்றும் வலையொலி ( Pod cast ) மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. 
ஆசிரிய - மாணவ நேரடி வகுப்பறை கற்றல் கற்பித்தல் நிகழ்வு பள்ளிச்சூழலில் நிகழாத காரணத்தாலும் , இறுதி ஆண்டு தேர்வுகளின்றி மாணவர்கள் அடுத்த வகுப்பிற்குத் தேர்ச்சி வழங்கப்பட்டதாலும் மாணவர்களிடம் கற்றல் இழப்பு மற்றும் கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது.



 எடுத்துக்காட்டாக : 2020 - 2021 ஆம் கல்வி ஆண்டில் 1 ஆம் வகுப்பு சேர்க்கப்பட்ட மாணவர்கள் 2021 - 2022 ஆம் கல்வியாண்டில் 2 ஆம் வகுப்பு பாடங்களைக் கற்பதற்கான திறன்களை முழுமையாகப் பெறாமல் 2 ஆம் வகுப்பிற்கு வருகை தரவுள்ளனர்.

இதேபோல் 2020 2021 ஆம் கல்வி ஆண்டில் 2 ஆம் வகுப்பில் இருந்த மாணவர்கள் 3 ஆம் வகுப்பு பாடங்களைக் கற்பதற்கான திறன்களை முழுமையாகப் பெறாமல் 3 ஆம் வகுப்பிற்கு வருகை தரவுள்ளனர். 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் 1 ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் 5 மாதம் கழித்து முதல் முறையாகப் பள்ளிக்கு வருகை தரவுள்ளனர். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல் , புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் மற்றும் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் ஆகியவை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. 



மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல் ( இணைப்பு -1 )



 மாணவர்கள் 17 மாத இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்கு வருகை தருவதால் முதல் 10-15 நாள்களுக்கு கதை , பாடல் , விளையாட்டு , வரைதல் , வண்ணம் தீட்டுதல் , அனுபவப் பகிர்வு , கலந்துரையாடல் போன்ற மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதலைப் பின்பற்றி மனமகிழ்ச்சி புத்தாக்கப் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தலாம். அதற்கு பின்னரே பயிற்சிக்கான செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 



புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் ( இணைப்பு - II ) 



மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பு மற்றும் கற்றல் இடைவெளியைக் கருத்தில் கொண்டு 2-8ஆம் வகுப்புகள் வரை புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

எடுத்துக்காட்டாக : 

8 ஆம் வகுப்பிற்கான புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் ஆம் வகுப்பு வரையிலான அடிப்படைப் பாடக் கருத்துகள் மற்றும் 7 ஆம் வகுப்பிற்கான முக்கியப் பாடக்கருத்துக்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளது. 



புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் கீழ்க்காணும் முறைகளில் செயல்படுத்த வேண்டும்.

 1 ) 1 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் முறையாக பள்ளிக்கு வருகை தரவுள்ளதால் மனமகிழ்ச்சி வழிகாட்டுதலைப் பின்பற்றி குழந்தைகளின் மனவெழுச்சியை ஆற்றுப்படுத்தும் வகையில் செயல்பாடுகள் அமைய வேண்டும் . இதனை முடித்த பின்னர் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

2 ) 2-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்காள வழிகாட்டுதலைப் பின்பற்றி முதல் 10 - 15 நாள்களுக்குள் மனமகிழ்ச்சி செயல்பாடுகளை முடித்தபின் , பயிற்சிக் கட்டகங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் . புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் 45-50 நாள்களுக்கு நடைமுறைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும். மாணவர்களுடைய கற்றல் அடைவு நிலைக்கேற்றாற்போல் காலஅளவை நீட்டிப்பதையும் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை செயல்படுத்துவதையும் ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம்.



3 ) 6-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதலைப் பின்பற்றி முதல் 10 · 15 நாள்களுக்குள் மனமகிழ்ச்சி செயல்பாடுகளை முடித்தபின் , புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் , மாணவர்கள் வகுப்பிற்கேற்ற சுற்றல் அடைவு நிலையில் இருந்தால் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தை மீள்பார்வைக்காக பயன்படுத்தி கொள்ளலாம். மீள்பார்வைக்கான காலஅளவை பயன்படுத்திக் பள்ளி அளவிலேயே மாணவர்கள் நிலைக்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம். அதன்பின் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் மேற்காண் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றுமாறும் தெரிவிக்கப்பட்டுளது.



பள்ளி திறப்பதற்கு முன்பே இச்செய்திகள் அனைத்து ஆசிரியர்களை சென்றடைந்து அவர்களுக்கு நல்ல புரிதலை ஏற்படுத்துதல் வேண்டும். மேலும் , மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல் , புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் மற்றும் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் ஆகியவற்றின் மென் நகல்களை தொடக்கக்கல்வி இயக்கத்தின் ஆளுகைக்கு உட்பட்ட தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தை செயல்படுத்தும் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கும் பொருட்டு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

2021 - 2022ஆம் ஆண்டு - 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனறித் தேர்வு - NTSE (National Talent Search Examination) தேர்வுக்கான அறிவிப்பு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு...



 2021 - 2022ஆம் ஆண்டு - 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனறித் தேர்வு - NTSE (National Talent Search Examination) தேர்வுக்கான அறிவிப்பு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு...


>>> அரசுத் தேர்வுகள் இயக்கக செய்தி அறிவிக்கை...


இன்றைய (30-10-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

அக்டோபர் 30, 2021



எந்தவொரு செயலிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். கடன் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு மறையும். தாய்மாமன் உறவுகளிடம் சற்று பொறுமையுடன் நடந்து கொள்ளவும். விருப்பங்கள் நிறைவேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  மேற்கு 


அதிர்ஷ்ட எண் :  4


அதிர்ஷ்ட நிறம் :  மஞ்சள் நிறம் 



அஸ்வினி :   சிந்தித்து செயல்படவும்.


பரணி :  உதவிகள் கிடைக்கும்.


கிருத்திகை  :   பொறுமை வேண்டும்.

---------------------------------------





ரிஷபம்

அக்டோபர் 30, 2021



வாக்குவன்மையின் மூலமாக ஆதரவான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் :  9


அதிர்ஷ்ட நிறம் :  அடர் சிவப்பு 



கிருத்திகை :  அனுபவம் மேம்படும்.


ரோகிணி :  பொறுப்புகள் குறையும்.


மிருகசீரிஷம் :  ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------





மிதுனம்

அக்டோபர் 30, 2021



இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவரின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.வெற்றிகரமான நாள்.



அதிர்ஷ்ட திசை :  தெற்கு 


அதிர்ஷ்ட எண் :  3


அதிர்ஷ்ட நிறம் :  ஆரஞ்சு நிறம் 



மிருகசீரிஷம் :   உதவிகள் கிடைக்கும்.


திருவாதிரை :  மாற்றம் உண்டாகும்.


புனர்பூசம் :  ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

---------------------------------------





கடகம்

அக்டோபர் 30, 2021



செயல்பாடுகளில் திறமைகள் வெளிப்படும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.  பேச்சுக்களால் வரவு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  மேற்கு 


அதிர்ஷ்ட எண் :  7


அதிர்ஷ்ட நிறம் :  பச்சை நிறம் 



புனர்பூசம் :  திறமைகள் வெளிப்படும்.


பூசம் :  திருப்தியான நாள்.


ஆயில்யம் :  உணவுகளில் கவனம் வேண்டும்.

---------------------------------------





சிம்மம்

அக்டோபர் 30, 2021



மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பொருளாதாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவு பெறும். நபர்களின் தன்மைகளை அறிந்து உதவி செய்யவும். மாற்றங்கள் உண்டாகும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  வடக்கு


அதிர்ஷ்ட எண் :  2


அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை நிறம் 



மகம் :  குழப்பமான நாள்.


பூரம் :  சிந்தனைகள் அதிகரிக்கும்.


உத்திரம் :  காலதாமதம் ஏற்படும்.

---------------------------------------





கன்னி

அக்டோபர் 30, 2021



பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். அலுவலக பணிகளில் பொறுப்புகள் குறையும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். எதிர்பாராத திடீர் பயணங்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். இறைநம்பிக்கை மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  வடக்கு


அதிர்ஷ்ட எண் :  6


அதிர்ஷ்ட நிறம் :  இளம் பச்சை 



உத்திரம் :  ஏற்ற, இறக்கமான நாள்.


அஸ்தம் :  விட்டுக்கொடுத்து செல்லவும்.


சித்திரை :  மாற்றமான நாள். 

---------------------------------------





துலாம்

அக்டோபர் 30, 2021



வியாபார பணிகளில் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவு பெறும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபார ரீதியான பயணங்களின் மூலம் நன்மைகள் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.



அதிர்ஷ்ட திசை :  மேற்கு


அதிர்ஷ்ட எண் :  1


அதிர்ஷ்ட நிறம் :  மஞ்சள் நிறம் 



சித்திரை :   ஆதரவான நாள்.


சுவாதி :  ஈடுபாடு உண்டாகும்.


விசாகம் :  நன்மையான நாள்.

---------------------------------------




விருச்சிகம்

அக்டோபர் 30, 2021



உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளின் வழியில் சுபச்செய்திகள் உண்டாகும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். வழக்கு சம்பந்தமான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். பொறுப்புகள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  தெற்கு


அதிர்ஷ்ட எண் :  5


அதிர்ஷ்ட நிறம் :  சாம்பல் நிறம்



விசாகம் :   சுபச்செய்திகள் கிடைக்கும்.


அனுஷம் :   சாதகமான நாள்.


கேட்டை :  நிதானம் வேண்டும்.

---------------------------------------






தனுசு

அக்டோபர் 30, 2021



குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாழ்க்கைத்துணைவரின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும்.  செல்வாக்கு அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  வடக்கு


அதிர்ஷ்ட எண் :  9


அதிர்ஷ்ட நிறம் :  அடர் சிவப்பு 



மூலம் : கருத்து  வேறுபாடுகள் குறையும்.


பூராடம் :  மகிழ்ச்சியான நாள்.


உத்திராடம் :  ஆசைகள் பிறக்கும். 

---------------------------------------





மகரம்

அக்டோபர் 30, 2021



தந்தை வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். கல்வி தொடர்பான விஷயங்களில் ஆர்வமின்மையான சூழ்நிலைகள் காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். தடைகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை :  தெற்கு


அதிர்ஷ்ட எண் :  8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 



உத்திராடம் :  அனுசரித்து செல்லவும்.


திருவோணம் :  அலைச்சல்கள் உண்டாகும்.


அவிட்டம் :  விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------






கும்பம்

அக்டோபர் 30, 2021



திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உயர்வுகள் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  மேற்கு


அதிர்ஷ்ட எண் :  5


அதிர்ஷ்ட நிறம் :  வெளிர் சிவப்பு  



அவிட்டம் :   காரியசித்தி உண்டாகும். 


சதயம் :  எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


பூரட்டாதி :  லாபம் மேம்படும்.

---------------------------------------





மீனம்

அக்டோபர் 30, 2021



புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். தனவரவுகளை மேம்படுத்துவீர்கள். வாழ்க்கைத்துணைவரின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் சற்று பொறுமையுடன் நடந்து கொள்ளவும். சஞ்சலம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை :  கிழக்கு


அதிர்ஷ்ட எண் :  1


அதிர்ஷ்ட நிறம் :  சந்தன நிறம் 



பூரட்டாதி :  அறிமுகம் ஏற்படும்.


உத்திரட்டாதி :  பாராட்டுகள் கிடைக்கும்.


ரேவதி :  மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------


பள்ளிக் கல்வி - 2021-2022ஆம் ஆண்டிற்கான சிறப்புக் கட்டணம் இழப்பீட்டுத் தொகை தேவைப்பட்டியல் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி) செயல்முறைகள் (School Education - Proceedings of Joint Director of School Education (Secondary Education) - Seeking Special Fee Compensation Requirement List for the year 2021-2022) ந.க.எண்: 26245/ஜி2/இ3/2021, நாள்: 27-10-2021...

 


பள்ளிக் கல்வி - 2021-2022ஆம் ஆண்டிற்கான சிறப்புக் கட்டணம் இழப்பீட்டுத் தொகை தேவைப்பட்டியல் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி) செயல்முறைகள் (School Education - Proceedings of Joint Director of School Education (Secondary Education) - Seeking Special Fee Compensation Requirement List for the year 2021-2022) ந.க.எண்: 26245/ஜி2/இ3/2021, நாள்: 27-10-2021...


>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 26245/ஜி2/இ3/2021, நாள்: 27-10-2021...



50 மாணாக்கர்களுக்கு குறைவாக உள்ள 512 ஆதிதிராவிடர் நல பள்ளி / கல்லூரி விடுதிகள் - 2021 – 2022-ஆம் ஆண்டு ரூ.46.08 இலட்சம் மதிப்பீட்டில் மின் அரைப்பான் (மிக்ஸி) வழங்குதல் - அரசாணை (நிலை) எண்: 81, நாள்: 28-10-2021 வெளியீடு (512 AdhiDravidar Welfare School / College Hostels with less than 50 students - 2021 - Provision of Electric Grinder (Mixie) at an estimated cost of Rs. 46.08 lakhs for the year 2022 - G.O.(Ms)No: 81, Dated: 28-10-2021 - Issued)...

 


50 மாணாக்கர்களுக்கு குறைவாக உள்ள 512 ஆதிதிராவிடர் நல பள்ளி / கல்லூரி விடுதிகள் - 2021 – 2022-ஆம் ஆண்டு ரூ.46.08 இலட்சம் மதிப்பீட்டில் மின் அரைப்பான் (மிக்ஸி) வழங்குதல் - அரசாணை (நிலை) எண்: 81, நாள்: 28-10-2021 வெளியீடு (512 AdhiDravidar Welfare School / College Hostels with less than 50 students - 2021 - Provision of Electric Grinder (Mixer) at an estimated cost of Rs. 46.08 lakhs for the year 2022 - G.O.(Ms)No: 81, Dated: 28-10-2021 - Issued)...


>>> அரசாணை (நிலை) எண்: 81, நாள்: 28-10-2021...