மின்னல் வந்தால் வெடித்து மலரும் தாழம்பூ - பயன்கள்(Lightning Strikes Flower Hyacinth - Uses)...

 


மின்னல் வந்தால் வெடித்து மலரும்  தாழம் பூ - பயன்கள்...


மின்னல் பட்ட உடனே மலரும் தாழை! விளக்கத்தை கேட்டு வியந்த எம்.ஜி.ஆர்!


தாழம் பூ என கூறப்படும் தாழை மலர்கள் மின்னல் படுவதால் தான் மலர்கிறது என்ற கூற்றை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? இதனை மறுக்க முடியாது. ஏனெனில் சங்ககால புலவர்கள் முதல் தற்போதைய பல கவிஞர்கள் வரை பலர் தாழம் பூ குறித்த இந்த மலர்ச்சியை தங்களது கவிதையில் குறிப்பிட்டுள்ளனர். உதாரணத்திற்கு நாடோடி மன்னன் படத்தில் ஒரு பாடலில், கவிஞர் சுரதா 'சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போல' என்ற உவமையை பயன்படுத்தியுள்ளார். இந்த வரிகளை கவனித்த எம்.ஜி.ஆர், அது எப்படி சாத்தியம்? மின்னல் கண்டு தாழம் பூ எப்படி மலரும் என வினாவியுள்ளார். 


இதற்கு கவிஞர் சுரதா, குறுந்தொகை பாடலில் உள்ள இந்த வரிகளை ஆதாரமாக காட்டியபோது  எம்.ஜி.ஆர் வியந்து மகிழ்ந்தாராம். இதற்கான அறிவியல் விளக்கம் என்னவென்றால், தாழை செடி கிளைகளின் இறுதியே தாழம் பூவாக உருமாற்றம் அடையும்.


 பொதுவாக தாவரங்கள் செழிப்பாக வளர நைட்ரஜன் இன்றியமையாதது. மழைபொழியும் காலங்களில் மின்னலானது காற்றில் உள்ள நைட்ரஜனை உடைத்து காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் கலந்து மண்ணை வந்தடைகிறது. இந்த சமயத்தில் தாவரங்கள் செழிப்பாக வளர்கின்றன. உற்று கவனித்தால் தெரியும், சாதாரண பாசன நீரை காட்டிலும் மழைப்பொழிவு ஏற்பட்ட நேரத்தில் பயிர்கள் செழிப்பாக வளர்ந்திருக்கும்.


 தாழை மலர் நைட்ரஜன் பற்றாக்குறையில் உள்ள போது, மின்னலுடன் மழைபெய்கையில் தனக்கான ஊட்டச்சத்தை எடுத்துக்கொண்டு உடனடியாக மலர்ந்து விடுகிறது. மற்ற நாட்களை காட்டிலும் மின்னலுடன் மழைபெய்த பின்னர் பார்த்தால் அதிக தாழை மலர்கள் மலர்ந்திருக்கும். மின்னலும் தாழை மலர்கள் மலர ஊக்குவிப்பானாக செயல்படுகிறது.


ஆனால் சங்க கால பாடலான குறுந்தொகையிலும் அறிவியல் விளக்கத்துடன் இடம்பெற்றது தான் வியப்பளிப்பதாக உள்ளது என மக்கள் திலகமும் வியந்துள்ளார். 


 செடியின் வேரை இடி‌த்து சாறு ‌பி‌ழி‌ந்து அதனுட‌ன் வெ‌ல்ல‌ம் கல‌ந்து உ‌ட்கொ‌ண்டு வர வெ‌ப்ப நோ‌ய்க‌ள் த‌ணியு‌ம். தாழ‌ம் இலையின் ‌விழுதை இடி‌த்து சாறு ‌பி‌ழி‌ந்து நெ‌ய்யுட‌ன் கல‌ந்து கா‌ய்‌ச்‌சி 5 ‌மி‌ல்ல‌ி அளவு உ‌ட்கொ‌ண்டு வர ‌நீ‌ர்‌க்கடு‌ப்பு, ‌நீ‌ர்‌ச்சுரு‌க்கு குணமாகு‌ம்.


தாழ‌ம்பூவை து‌ண்டு து‌ண்டாக வெ‌ட்டி ‌நீ‌ரி‌ல் இ‌ட்டு கா‌ய்‌ச்ச வே‌ண்டு‌ம். ‌நீ‌ர் ந‌ன்கு கொ‌தி‌த்து பூ‌வித‌ழ்க‌ள் வத‌ங்‌கிய ‌பி‌ன் வடிக‌ட்டி, தேவையான ச‌ர்‌க்கரை கூ‌ட்டி பாகுபதமா‌ய் கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி‌க் கொ‌ள்ளவு‌ம். இதுவே தாழ‌ம்பு மண‌ப்பாகு. இதனை ஒரு ‌தே‌க்கர‌ண்டி அளவு ‌நீ‌ரி‌ல் கல‌ந்து இருவேளை குடி‌த்து வர உட‌ல் உ‌ஷ‌்ண‌த்தை‌த் த‌ணி‌க்கு‌ம். இ‌ப்படி செ‌ய்தா‌ல் ‌பி‌த்த நோ‌ய்களு‌ம் ‌தீரு‌ம். அ‌திகள‌வி‌ல் ‌சிறு‌நீ‌ர் வெ‌ளியாவதை‌த் தடு‌க்கு‌ம். தாழ‌ம்பூ மண‌ப்பா‌கினை வெ‌யி‌ல் கால‌ங்க‌ளி‌ல் ‌தினச‌ரி உபயோ‌கி‌த்து வர அ‌ம்மை நோ‌ய் வராம‌ல் தடு‌க்கலா‌ம்.


தாழம்பூ தோல்நோய்களை குணமாக்கும். மண‌ப்பாகை தாழ‌ம்பூ வே‌ரினை‌ப் பய‌ன்படு‌த்‌தி செ‌ய்து வை‌த்து‌க் கொ‌ண்டு உ‌ட்கொ‌ண்டு வர சொ‌றி, ‌சிர‌ங்கு, ‌தினவு, தோ‌ல் நோ‌ய்க‌ள் குணமாகு‌ம்.