💥 பதவி உயர்வு / பணியிட மாறுதல் பெற்றவர்கள் கவனத்திற்கு...
தாங்கள் பணியேற்பிடைக் காலத்தினை அனுபவிக்கவில்லையெனில் (இரு பள்ளிகளுக்கிடையே குறைந்தது 8 கிலோமீட்டர் தொலைவு இருக்க வேண்டும்) வருகின்ற மார்ச் மாத குறைதீர்நாள் முகாமில் தாங்கள் அனுபவிக்காத பணியேற்பிடைக் காலத்தினை தங்களுடைய ஈட்டிய விடுப்புக் கணக்கில் சேர்த்திட விண்ணப்பம் கொடுத்திடுங்கள்...
💥 பதவி உயர்வு பெற்றவர்கள் கவனத்திற்கு...
தங்கள் பதவி உயர்விற்கான ஊதிய நிர்ணயம் செய்ய விண்ணப்பம் அளிக்கும் பொழுது ஜனவரி-22 ஆண்டு ஊதிய உயர்வு பெறுபவர்கள் மட்டும் 01.03.2022 அன்று ஊதிய நிர்ணயம் செய்து கொள்ளவும். ஏப்ரல், ஜூலை & அக்டோபர் ஆண்டு ஊதிய உயர்வு பெறுபவர்கள் வழக்கமான இவ்வாண்டிற்கான ஆண்டு ஊதிய உயர்வு பெற்றபின் பதவி உயர்விற்கான ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பக் கடிதத்தினையும், மார்ச் மாத குறைதீர் நாள் கூட்டத்தில் அளிக்கலாம். அது தங்களுக்கு நன்மையாக அமையும்...
>>> பதவி உயர்விற்கான ஊதிய நிர்ணயம் செய்ய விருப்பக் கடிதம் (மாதிரி)...
Information to be considered by those who got Promotion / Transfer...
Attention Promotion / Transfer Recipients...
If you do not enjoy Joining time (there should be a distance of at least 8 km between the two schools), apply to add your Unavailed Joining Time to your Earned Leave at upcoming March Grievance Day Camp...
Attention Promotion Recipients...
Those who received Annual Increment in January should apply on 01.03.2022 when applying for pay Fixation for their Promotion. April, July & October Increment Recipients may submit a letter of intent to Fixation the Pay for the promotion after receiving the regular annual Increment for this year, at the March Grievance Day. It will benefit them.