பள்ளி மேலாண்மைக் குழு - மறுகட்டமைப்பு கூட்டம் - முக்கியமான தகவல்கள் (SMC - Reconstitution - Important Information)...



>>> பள்ளி மேலாண்மைக் குழு - மறுகட்டமைப்பு கூட்டம் - முக்கியமான தகவல்கள் (SMC - Reconstitution - Important Information)...


23.4.22 SMC மறுகட்டமைப்பு.... சில குறிப்புகள்

1. காலை 9.00 மணி முதல் மாலை 5.00மணி வரையிலான காலத்தில் எந்த நேரத்தில் பெற்றோர் வருகை  அதிகமாக உள்ளதோ அந்த நேரத்தில் கூட்டத்தை நடத்தலாம்

2.பள்ளியிலிருந்து தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் கையொப்பமிட்டு கொடுத்தனுப்பிய அழைப்பிதழை கூட்டத்திற்கு வரும் பெற்றோர் எடுத்து வரவேண்டும்.

3. தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவர் மட்டுமே உறுப்பினர்களை தெரிவு செய்யும் நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும்.

4. தேர்தல் முடிந்த பிறகு SMCஉறுப்பினர்கள் உறுதிமொழி மேற்கொள்ள வேண்டும்

5. தலைமை ஆசிரியர் வரவேற்புரையில் SMC மறுகட்டமைப்பு விதிமுறைகளை விளக்கவேண்டும்.

6. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்குதல்,குழு புகைப்படம் எடுத்தல் ,கூட்டப்பதிவேட்டில் கையொப்பமிடுதல்ஆகிய பணிகளை பூர்த்தி செய்ய வேண்டும்

7. உங்கள் பள்ளிக்கான உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,பார்வையாளர்கள் யாரென்று முன்னதாகவே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

8. படிவம் 1 பெற்றோர் விவரம்

படிவம் 2 உறுப்பினர்களுக்கான தெரிவு விவரம்

படிவம் 3 தலைவரை தெரிவு செய்யும் விவரம்

படிவம் 4  துணை தலைவர் தெரிவு செய்யும் விவரம்

படிவம் 5 தேர்ந்தெடுக்கப்பட்ட SMC உறுப்பினர்கள் விவரம்/கூட்டப்பதிவேடு

இவற்றுடன்

உறுதிமொழி படிவம் 

ஆகியவற்றை அச்சடித்து முன்னேற்பாடாக வைத்துக் கொள்ளவும்

 BEOs இத்தகவல்களை அனைத்து பள்ளிகளுக்கும் பகிர்ந்து , தயார்நிலையை உறுதிசெய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.