>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
அனைவருக்கும் வணக்கம்.
EMIS-ல் Time Table பதிவேற்றுவதற்கான வழிமுறை. உங்கள் பள்ளிக்கான Time Tableஐ பதிவேற்றுங்கள்.
முதலில் Emisல் உங்கள் பள்ளி Idயை போட்டு உள் நுழையவும்
அடுத்து school ஐ தொடவும் அதில் TIME TABLE ஐ தொடவும்.
படி 1
Class teacher பதிவேற்ற வேண்டும்
ஒவ்வொரு வகுப்புக்கும் ஏற்கெனவே நம் பள்ளி ஆசிரியர்கள் பெயர் காட்டப்படும் அதை தொட்டு Submit கொடுக்க வேண்டும்.
அடுத்து school start time என இருக்கும் கட்டத்தில் 9.10 என கொடுத்து அடுத்து AMஎன்பதை தொடவும்
Submit கொடுத்து Next என்பதைத் தொடவும்.
படி 2:
Class subject-Teacher ஒவ்வொரு வகுப்பிற்கு ஒவ்வொரு பாடத்திற்கும் என நாம் டச் செய்தாலே அந்த ஆசிரியர் பெயர் காட்டும் அதை தொடவும் .
முடிந்ததும் அந்த வகுப்பு பச்சை நிறத்தில் மாறிவிடும்.
அடுத்து Submit ஐ தொடவும்.
Next தொடவும்.
3வது படி:
Do we have combine Class or section in our school எனக் காட்டும் அதனைத்தொடவும்.
பெரும்பாலான பள்ளிகள் combine Class ஆகத்தான் இருக்கும். எனவே Yes என்பதைத் தொடவும்.
இப்போது வகுப்புகள் காட்டும்
எந்தெந்த வகுப்புக்கள் Combine Class என்பதை டிக் செய்து Combine என்பதைத் தொடவும்
அடுத்து Next தொடவும்.
4வது படி:
Club Activities என காட்டும். தொடக்கப் பள்ளியை பொறுத்தவரை இந்த Club எதுவும் கிடையாது. மூன்று clubஐயும் தொட்டு NOT functioning என்ற ஆப்ஷன் தொடவும்.
அடுத்து Submit தொடவும். இப்போது proceed என ஒரு அறிவிப்பு காட்டும். அடுத்து Class, section இரண்டையும் கொடுத்து show என்ற பட்டனை தொட்டால் Time Table காட்டும்.
அதனை save கொடுக்க வேண்டும்.அவ்வளவுதான் படித்து புரிந்து கொண்டு செய்தால் மிக எளிது.