திருச்சியில் இன்று (04.01.2024) நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (டிட்டோஜாக்) மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்...

 

திருச்சியில் இன்று (04.01.2024) நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (டிட்டோஜாக்) மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



TETOJAC முடிவு


6.1.24 மாவட்ட டிட்டோஜாக் கூட்டம்

(மாவட்ட மற்றும் வட்டார டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் கூட்டம்)


11.1.24 வட்டாரங்களில் ஆர்ப்பாட்டம்


27.1.24 மாவட்டங்களில் உண்ணாவிரதம்.


*தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (டிட்டோஜாக்) மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று (04.01.2024) திருச்சியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளரும், டிட்டோஜாக்கின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினருமாகிய தோழர் ச.மயில் தலைமையில் நடைபெற்றது.*


*கூட்டத்தில் டிட்டோஜாக்கில் இணைந்துள்ள அனைத்துச் சங்கங்களின் மாநிலத் தலைவர்கள், மாநிலப் பொதுச்செயலாளர்கள்,மாநிலப் பொருளாளர்கள் பங்கேற்றனர்.*


 *இன்றைய கூட்டத்தில், தமிழ்நாட்டின் தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் 90 சதவீத ஆசிரியர்களின் (இடைநிலை ஆசிரியர்கள், ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்) பதவி  உயர்வு வாய்ப்பைப் பறிக்கும் அரசாணை எண்:243 பள்ளிக்கல்வித்துறை நாள்:21.12.2023ஐ உடனடியாக ரத்து செய்திட தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும்....*


*கடந்த 12.10.2023 அன்று சென்னையில் மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில், மதிப்புமிகு. பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் முன்னிலையில் டிட்டோஜாக் அமைப்புடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி ஆணைகள் வெளியிட வலியுறுத்தியும்....*


*இரண்டு கட்டப்  போராட்டங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டது.*


 *அதன்படி 06.01.2024 அன்று மாவட்ட டிட்டோஜாக் கூட்டங்களை நடத்துதல்.*


*11.01.2024 அன்று வட்டாரத் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துதல்.*


*27.01.2024 அன்று மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்துதல்.*


*கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக வலிமையான களப்போராட்டங்களை நடத்தவும் டிட்டோஜாக் தீர்மானித்துள்ளது.*