பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.01.2024...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.01.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கேள்வி.


குறள் 414:


கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை.


விளக்கம்:


நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.



பழமொழி : 


Every bird must hatch its own eggs.


அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.



பொன்மொழி:


“Change your thoughts and you change your world. ” ~ Norman Vincent Peale  


உங்கள் எண்ணங்களை மாற்றிக்கொண்டால், நீங்கள் உலகை மாற்றலாம் - நோர்மன் வின்சென்ட் பீலே...


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 ஒளிச் சேர்க்கை என்பது - வேதியியல் மாற்றம்

இயற்பியல் மாற்றம் - பதங்கமாதல்

வேதியியல் மாற்றம் - இரும்பு துருப்பிடித்தல்

பொதுவாக மாசு கலந்த சேர்மத்தின் கொதிநிலை - தூய சேர்மத்தின் கொதிநிலையை விட அதிகம்

யூரியாவின் உருகு நிலை - 135o C

இரும்பு துருபிடித்தல் என்பது - ஆக்சிஜனேற்றம்



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Certainty - அவசியம்

 Chair - நாற்காலி 

Centipede - பூரான் 

Chastity - மானம்

Chest - நெஞ்சு 



ஆரோக்கியம்


இந்தியாவில் பூசணி வகைகள் அதிகமாக கிடைக்கிறது. நார்ச்சத்து மிகுந்த இவை உடலுக்கும், சீதோஷ்ண நிலைக்கும் ஏற்றவை. குடலுக்கு நன்மை பயக்கும், மலச்சிக்கலை தீர்க்கும் திறன் கொண்ட பூசணியை பலவிதமாக சமைத்து சாப்பிடலாம். 100 கிராம் முலாம்பழத்தில் 34 கிலோ கலோரி சத்து உள்ளது. இதன் ஊட்டச்சத்து மதிப்பெண் 50.




இன்றைய சிறப்புகள்


ஜனவரி 30


1933 – ஹிட்லர் செருமனியின் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.


1948 – மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே என்ற தீவிரவாதி சுட்டுக் கொன்றான்.


1964 – ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது.


1976 – தமிழ்நாட்டில் கலைஞர் மு.கருணாநிதியின் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.



பிறந்த நாள் 

1950 – மு. க. அழகிரி - முன்னாள் மத்திய அமைச்சர் 



நினைவு நாள் 


1874 – இராமலிங்க அடிகளார், ஆன்மிகவாதி (பி. 1823)


1948 – மகாத்மா காந்தி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், சட்டவறிஞர் (பி. 1869)


1948 – ஓட்வில் ரைட், அமெரிக்க விமானி, பொறியியலாளர் (பி. 1871)



சிறப்பு நாட்கள்

ஆசிரியர் நாள் (கிரேக்கம்)

தியாகிகள் நாள் (இந்தியா)




நீதிக்கதை


நல்லவர்களைப் போல் நடிப்பவர்களும் நாளடைவில் நல்லவராகவே மாறிவிடுவர்...


ஒருமுறை திருடன் ஒருவன் சிம்மபுரி நாட்டு  மன்னரின் அரண்மனைக்குள் திருடுவதற்காக சென்றான். அந்த சமயம் அரசர் தமது குலகுருவுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்ததை கண்டான். 


மறைவாக ஒளிந்திருந்து அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று அவன் கேட்டான். அரசன் குல குருவை பார்த்து “குருவே, நீண்ட நாட்களாக எனது மகளுக்கு திருமணம் ஆகாமல் இருப்பது எனக்கு மிகுந்த மன வேதனை தருகிறது” என்றான்.


உடனே குலகுரு அரசனை பார்த்து, “அரசே, கவலைப்படாதே பொழுது விடிந்ததும் நம் ஊரின் எல்லையில் உள்ள நதி கரைக்கு உன் காவலர்களை அனுப்பு அங்கு பல துறவிகள் தவம் செய்து வருகிறார்கள். 


அவர்கள் பாவம் ஏதும் செய்யாத மிகவும் நல்லவர்கள். அவர்களில் ஒருவர்தான் உன் மகளுக்கு ஏற்ற கணவர்” என்றார். மறைவில் இருந்து இதை கேட்டுக் கொண்டிருந்த திருடனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. 



“நாம் போய் நதிக்கரையில் துறவி போல் அமர்ந்து கொண்டால் காவலர்கள் நம்மை அரசனிடம் அழைத்து செல்வார்கள். அரசனும் தன் குலகுரு சொன்னபடியே அவருடைய மகளை எனக்கு திருமணம் செய்து கொடுத்து விடுவார்.


நான் அரசனின் மாப்பிள்ளை ஆகி விடுவேன். பிறகு இந்த திருட்டு தொழிலை விட்டு விடுவேன்” என்று நினைத்து துறவி போல் வேடம் அணிந்து கொண்டு உண்மையான துறவிகளுடன் சேர்ந்து தியானம் செய்வது போல் அமர்ந்திருந்தான். 


பொழுது விடிந்ததும் தன் குலகுரு சொன்னபடியே அரசன் சில காவலர்களை நதிகரைக்கு அனுப்பி அங்குள்ள துறவிளுள் ஒருவரை தம் மகளை திருமணம் செய்து கொள்ள வருமாறு கூறி அழைத்து வர சொன்னார். 


காவலர்களும் அரசனின் ஆணைப்படி நதிகரைக்கு சென்று அங்கிருந்த துறவிகளிடம் அரசர் தம் மகளை மணந்து கொள்ள அழைத்து வருமாறு கூறியதாக ஒவ்வொருவரிடம் கூறினார்கள். 


அனைத்து ஆசிகளையும் துறந்து, இறைவனடி சேர்வதற்காக தவம் புரியும் அந்த துறவிகள் காவலர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. காவலர்கள் இறுதியில் துறவி வேடம் அணிந்திருந்த  திருடனிடம் வந்து, “சுவாமி, நீங்கள் தான் அருள் புரிய வேண்டும். 


எங்கள் அரசர் தமது மகளை இங்கிருக்கும் துறவிகளுள் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவெடுத்துள்ளார். நாங்கள் இங்கிருக்கும் துறவிகள் அனைவரிடம் கேட்டுவிட்டோம். ஒருவரும் வருவதாக தெரியவில்லை, தாங்கள் ஆவது அருள் கூர்ந்து எங்களுடன் வந்து எங்கள் இளவரசியை திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்றனர். 


இதை கேட்ட துறவி வேடத்தில் இருந்து திருடன் சற்றும் நேரம் சிந்தித்தான். இங்குள்ள அனைத்து துறவிகளும் உண்மையான துறவிகள், நல்லவர்கள் அதனால்தான் இவர்களுடைய வேண்டுகோளை அவர்கள் ஏற்கவில்லை. 


நாம் உடனே ஒப்புக்கொண்டால் நம் மீது மன்னர் சந்தேகப்படுவார், என்று மனதில்  நினைத்தான். இச்சமயத்தில் நாமும் உண்மை துறவிகளைப் போல இருக்க வேண்டும் என்று 


பொய் சாட்சி சொல்ல கூடாது...


ஓர் ஊரில் நல்லரசன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் பெயருக்கு தகுந்தார் போல் நற்குணங்கள் பெற்றவனாக இருந்தான். ஏழை எளியவர்களிடம் அன்பு காட்டும் குணமும் மற்றவர்களுக்கு உதவும் உயர்ந்த மனப்பான்மை அவனிடம் இருந்தன. 


யாராவது தவறு செய்தால் அதனை தட்டிக் கேட்கும் துணிவும் அவனிடம் இருந்தது. அதனால், அதனால் அந்த ஊர் மக்கள் நல்லரசன் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்கள். அந்த ஊரில் வசதியாக வாழ்ந்து வந்த சிலர் நல்லரசனின் செல்வாக்கு கண்டு அவர் மீது பொறாமை கொண்டனர். 


அவர் புகழை கெடுப்பதற்கு தங்களால் முயன்ற முயற்சிகளை எல்லாம் செய்தார்கள். ஆனால், அவர்களுடைய முயற்சிகள் யாவும் தோல்வியிலே முடிந்தன. பணக்காரர்கள் ஆகிய தங்கவேலும், கருப்பு சாமியும் இதனால் மனம் புழுங்கினர்.


ஏதேனும் ஒரு செயல் செய்த நல்லரசனை அவமானப்படுத்த வேண்டும் என்று துடியாய் துடித்தனர். அந்த பணக்காரர்களுக்கு நல்லரசன் எந்த தீங்குமே செய்யவில்லை. ஆனால், கோயில் திருவிழாவாக இருந்தாலும், வேறு பொது செயல்களாக இருந்தாலும் அந்த நல்ல அரசனுக்கே அனைவரும் முதல் மரியாதை கொடுத்தார்கள். இதைத்தான் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 



எப்படியாவது அந்த நல்லரசனை பழிவாங்க வேண்டும் என்று கங்கணம் கட்டி அவர்கள் அந்த ஊரில் வசித்து வந்து முனியாண்டி என்பவனை அழைத்து பேசினார்கள். அந்த முனியாண்டிக்கு ஊர் மக்களிடம் நல்ல பெயர் இருந்தது. அவனை பகடைக்காயாய் பயன்படுத்தி அந்த வல்லரசனை வீழ்த்தி விடலாம் என்று அவர்கள் எண்ணினார்கள். 


தங்கவேலும், கருப்புசாமியும் ஒன்று சேர்ந்து சதித்திட்டம் ஒன்றை தீட்டினார்கள். முனியாண்டியை தங்கள் வீட்டில் அழைத்து பேசினார்கள். “முனியாண்டி, எங்களுக்காக நீ ஒரு செயல் செய்யணும்” என்று கூறி கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை அவன் கையில் திணித்தனர். 


ரூபாய் நோட்டுகளை பார்த்ததும் முனியாண்டிக்கு ஆசை அதிகமானது. அவன் அவர்களை நோக்கி, “உங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன்”  என்றான். உடனே அவர்கள் அவனைப் பார்த்து இந்த வல்லரசன் தன்னை உத்தமன் போல் காட்டிக்கொண்டு, எங்களுக்கு இந்த ஊரில் மரியாதை இல்லாமல் செய்கிறான். 


அவனுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும். அதற்கு தான் உன்னுடைய உதவி தேவை என்றனர். மேலும் அவர்கள் தங்களுடைய சதி திட்டத்தை அவனிடம் விளக்கி கூறினார்கள். “எங்களுடைய மூன்று லட்சம் ரூபாய் பணத்தை எப்படியாவது அந்த நல்லரசனின் வீட்டில் நீ வைக்க வேண்டும். 



நாங்கள் போலீசில் புகார் கொடுத்து அவனை கைது செய்கிறோம் அவன் மூன்று லட்சம் ரூபாயை திருடியதற்கு நீ பொய் சாட்சி சொன்னால் போதும். மற்ற விஷயங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று தங்கவேலும் கருப்புசாமியும் முனியாண்டியிடம் கூறினார்கள். 


முனியாண்டி அவர்களை பார்த்து நீங்கள் சொல்வது போலவே செய்கிறேன் என்று கூறிவிட்டான். தங்கவேலும் கருப்புசாமியும் இதை கேட்டு மகிழ்ந்தார்கள். இந்த சதி திட்டம் அவர்களின் எண்ணம் போலவே நடந்தது. தங்கள் பணம் மூன்று லட்சம் திருடு போய்விட்டதாக அந்த இருவரும் போலீசாரிம் புகார் கொடுத்தார்கள். 


உங்களுக்கு யார் மீது சந்தேகம் இருக்கிறதா என்று அவர்கள் கேட்டதற்கு உடனே முனியாண்டியை அழைத்து போய் காவல் நிலையத்தில் அந்த இருவரும் ஒப்படைத்தனர். அவன் காவல்துறை அதிகாரியிடம், “இந்த ஊரில் நல்லரசன் என்று ஒருவன் இருக்கிறான். 


நேற்று இரவு இவர்களுடைய வீட்டில் இருந்து பணத்தை திருடி கொண்டு வேகமாக போனது என் கண்களாலே பார்த்தேன். நீங்கள் அவனை விசாரித்தால் எல்லாம் உண்மைகளும் தெரிந்து விடும்” என்று அவன் கூசாமல் பொய் சாட்சி சொன்னான்.


காவலர்களும் நல்லரசன் வீட்டுக்கு சென்றனர். அவன் வீட்டை சோதனையிட்டனர் வல்லரசனுக்கு தெரியாமல் முனியாண்டி கொண்டு வந்த மூன்று லட்சம் ரூபாய் அந்த வீட்டு மூலையில் இருந்ததை காவல் அதிகாரிகள் கைப்பற்றினர். 


அவர்கள் நல்லரசனை பார்த்து, “இந்த பணம் உங்கள் வீட்டில் எப்படி வந்தது?” என்று கேட்டார்கள். நல்லரசன் நிதானத்தை இழக்காமல், “சார், இந்த பணம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது எப்படி இங்கே வந்தது என்பதும் எனக்கு தெரியாது. இதுல ஏதோ சதி திட்டம் இருக்கிறது. 


small tamil story 

அந்த முனியாண்டியை நீங்கள் கண்காணித்தால் உங்களுக்கு விஷயம் தெரிந்து விடும். உங்களோடு விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறேன்” என்றான். ஊர் மக்களின் நன்மதிப்புக்குரியவன் வல்லரசன் என்பதால் அவனுக்கு மதிப்பு கொடுத்து காவல் அதிகாரிகள் முனியாண்டின் வீட்டுக்கு சென்று சோதனை இட்டனர்.


அவன் வீட்டிலிருந்து சில ரூபாய் கட்டுகளை காவல்துறையினர் கைப்பற்றினார்கள். அந்த கட்டுகளை சோதித்ததில் அவை அனைத்துமே கள்ள நோட்டுகள் என்பது தெரிந்தது. முனியாண்டி சிறையில் அடைக்கப்பட்டான். 



கள்ள நோட்டு வழக்கில் அவன் பெயரை சேர்த்தார்கள். அதை அறிந்த முனியாண்டி, காவல் அதிகாரியை பார்த்து, “சார், எனக்கு அது போல் புத்தி எல்லாம் கிடையாது. பணத்துக்கு ஆசைப்பட்டு உத்தமரான நல்லரசனுக்கு எதிராக போய் சாட்சி கூறினேன். 


அதுக்கு கடவுள் எனக்கு சரியான தண்டனை கொடுத்துவிட்டார். தங்கவேலும், கருப்புசாமியும் இருவரும் என் தான் என்னை இவ்வாறு செய்ய சொன்னார்கள். மற்றபடி கள்ள நோட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது” என்று எல்லா உண்மையும் கூறிவிட்டான். 


உடனே காவல்துறை அதிகாரிகள் தங்கவேலு மற்றும் கருப்பசாமியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிகழ்ச்சியின் மூலம் நல்லரசின் மீது மக்களுக்கு இருந்தன் நன்மதிப்பு மேலும் கூடியது.


நீதி : யார் மீதும் எப்பொழுதும் பொய்சாட்சி சொல்ல கூடாது. அது ஒரு நாள் வெளிப்பட்டு பொய் சாட்சி கூறியவரே தண்டனைக்கு உட்படுத்தி விடும். எனவே, அனைவரும் மனசாட்சிக்கு உட்பட்டு நல்லவர்களாக வாழ வேண்டும்.



இன்றைய முக்கிய செய்திகள் 


30-01-2024 


தமிழ்நாடு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் உயிரியல் பூங்கா இடையே விலங்கு பரிமாற்றம்...


ஸ்பெயின் வந்தடைந்தேன்!.. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக ஐரோப்பியப் பயணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...


15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு...


நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதை ஒட்டி நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு...


நெருக்கடியை கையாளும் கலையை மாணவர்கள் அவசரமின்றி படிப்படியாக கற்க வேண்டும்: பிரதமர் மோடி...


பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை இழந்த எலான் மஸ்க் -  இனி பெர்னார்ட் அர்னால்ட் தான் நம்பர் 1 பணக்காரர்...


புதுச்சேரி தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த ராஜீவ் வர்மா சண்டிகருக்கு இடமாற்றம்...


Today's Headlines:

30-01-2024


Animal exchange between Tamil Nadu's Arignar Anna Zoo and Uttar Pradesh's Kanpur Zoo... 


Arrived in Spain!.. European tour for the first time after assuming power: Chief Minister M.K.Stalin...


 Notification of election date for 56 Rajya Sabha seats vacant in 15 states...


 Minister Prakalat Joshi has called for an all-party meeting tomorrow in connection with the commencement of the parliamentary session...


Students should learn art of crisis management step by step without rush: PM Modi... 


Elon Musk lost the top spot in the list of rich people - Bernard Arnold is now the No. 1 richest person... 


Rajeev Verma, who was serving as Puducherry Chief Secretary, has been transferred to Chandigarh...