பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.02.2024...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.02.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கேள்வி.


குறள் 418:


கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி.


விளக்கம்:

இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்.



பழமொழி : 


Familiaarity breeds contempt


பழகப்பழக பாலும் புளிக்கும்; கிட்ட இருந்தால் முட்டப்பகை.


பொன்மொழி:


Always do your best. What you plant now, you will harvest later.


உங்களால் எதை சிறப்பாக செய்யமுடியுமோ அதையே எப்போதும் செய்யுங்கள்.எதை விதைக்கிறீர்களோ! அதையே அறுவடை செய்வீர்கள்!



அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை - இடமாறுதோற்றப்பிழை

கன அளவின் அலகு - மீ3

திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு - லிட்டர்

காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் - இரைப்பை

அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் - பாலிடிப்சியா


ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Conduct - நடத்து

Confused noise - குழப்பம் 

Conquer - வென்றிடு 

Consider - நினை

Continue - தொடர் 

Convenience - வசதி


ஆரோக்கியம்


சமையலறைகளில் அதிகம் பயன்படுத்தும் இஞ்சி ஆரோக்கியத்திற்கான அருமருந்து என்றே சொல்லலாம். மசாலா வகை உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் இஞ்சியை ஊறுகாய் மற்றும் சட்னி செய்தும் சாப்பிடலாம். அதிக அளவு ஆண்டிஆக்சிடெண்ட் கொண்ட இஞ்சி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


இஞ்சியின் பயன்பாடு பலகாலமாக தொடர்கிறது. பல ஆயுர்வேத மருந்துகளிலும் சேர்க்கப்படும் இஞ்சி, தொண்டைக்கு ஏற்றது. உடல் வலியை குறைப்பதில் உதவும் இஞ்சி, செரிமான திறனையும் மேம்படுத்துகிறது.


இன்றைய சிறப்புகள்


பிப்ரவரி 05


1909 – உலகின் முதலாவது செயற்கை நெகிழி பேக்கலைட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக பெல்ஜிய வேதியியலாளர் லொயோ பேக்லண்டு அறிவித்தார்.


1922 – ரீடர்ஸ் டைஜஸ்ட் முதலாவது இதழ் வெளியிடப்பட்டது


1971 – அப்பல்லோ 14 விண்கலத்தில் சென்ற அலன் ஷெப்பர்ட், எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கினர்.



பிறந்த நாள் 

1992 – நெய்மார், பிரேசில் காற்பந்து வீரர்


நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்


காசுமீர் ஒருமைப்பாடு நாள் (பாக்கித்தான்)

விடுதலை நாள் (சான் மரீனோ)

ஒற்றுமை நாள் (புருண்டி)




நீதிக்கதை



அறிவுரை கூறுவதற்கு தகுதி வேண்டும் | 

 பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் பிரார்த்தனையின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்தியவர். சிறந்த ஆன்மீகவாதியாக திகழ்ந்தவர்.


உலகம் போற்றும் சுவாமி விவேகானந்தரின் குரு. இத்தகைய பெருமைகளுக்கு உரியவரான ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு நாள் அன்பர்களின் மத்தியில் பேசிக்கொண்டிருந்தார். அவர் கூறும் கருத்துக்களை அனைவரும் உற்று கேட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு பெண்மணி தன் ஐந்து வயது மகனை அழைத்துக் கொண்டு அவர் முன் வந்து நின்றாள்.


பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அந்த பெண்மணியை பார்த்து, “தாயே உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். உடனே அந்த அம்மையார் சுவாமி என் மகன் அதிகமான அளவு இனிப்பு சாப்பிடுகிறான். அதனால், அதிக அளவில் இனிப்புகளை சாப்பிடக்கூடாது என்று இவனுக்கு அறிவுரை கூறுங்கள் என்றாள். 


அவள் மேலும் நான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்கவில்லை. அடித்து பார்த்தேன், பயனில்லை என்றாள். பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் அந்தப் பெண்மணியை பார்த்து, “தாயே! நீங்கள் உங்கள் மகனை ஒரு வாரம் கழித்து என்னிடம் அழைத்து வாருங்கள்” என்றார்.



அந்த பெண்மணியும் பதில் ஏதும் பேசாமல் தன் ஐந்து வயது மகனை அழைத்துக் கொண்டு சுவாமியிடம் விடை பெற்று தன் வீட்டிற்கு சென்று விட்டாள். ஒரு வாரம் கடந்தது அந்தப் பெண்மணி மீண்டும் தன் ஐந்து வயது மகனை அழைத்துக் கொண்டு ஸ்ரீ ராமகிருஷ்ணரை பார்க்க சென்றாள். 


ஸ்ரீ ராமகிருஷ்ணர் அந்தப் பெண்மணியை அன்புடன் வரவேற்றார். பிறகு ஐந்து வயது மகனை பார்த்து தம்பி இனிப்புகளை அதிகம் சாப்பிடாதே. அவ்வாறு அதிகம் சாப்பிட்டால் அது உன் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். உன்  வயிற்றில் பூச்சிகள் உருவாகும், என அறிவுரை கூறினார்.


அந்தப் பெண்மணிக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. அதை சுவாமியிடம் கேட்டு விடலாம் என்று எண்ணிய அவள் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரை பார்த்து “சுவாமி, நான் முதல் நாள், என் மகனை உங்களிடம் அழைத்து வந்த போதே அதிகமாக இனிப்புகளை சாப்பிட்டால் உடல் நலம் பாதிக்கும் என்று என் மகனுக்கு அறிவுரை கூறியிருக்கலாமே? ஏன் ஒரு வாரம் பொறுத்து வர சொல்லி அறிவுரை கூறுகிறீர்கள்?” என்று கேட்டாள்.


அதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் புன்னகை புரிந்தபடியே, “தாயே! நீங்கள் உங்கள் மகனை முதல் முறையாக அழைத்து வந்த போது நானே அதிக அளவில் இனிப்பு சாப்பிடுபவனாக இருந்தேன். அன்னிலையில் நான் உங்கள் மகனுக்கு அறிவுரை கூறும் தகுதியை பெற்றிருக்கவில்லை. பிறகு ஒரு வாரம் கழித்து வர சொன்ன போது நான் இனிப்புகளை சாப்பிடுவதை நிறுத்தி இருந்தேன். அதனால்தான் உங்கள் மகனுக்கு அறிவுரை கூறினேன்” என்றார். 



அந்த தாய் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரை புகழ்ந்த படியே சென்றாள். அந்த சிறுவனும் அன்று முதல் அதிகமான அளவில் இனிப்புகளை சாப்பிடுவதை நிறுத்தி விட்டான். 


நீதி : எதற்குமே ஒரு தகுதி வேண்டும். பிறருக்கு அறிவுரை கூறுவதற்கு முன்பு நாம் நல்வழியில் நடக்க வேண்டும். நாம் தவறான வழியில் நடந்து கொண்டு மற்றவர்களை நல்வழியில் நடக்குமாறு அறிவுரை கூறக்கூடாது. அதில் பயனில்லை.




இன்றைய முக்கிய செய்திகள் 


05-02-2024 


எண்ணூரில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவு குறித்து தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு உத்தரவு...


சிலி நாட்டின் மத்திய பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இதுவரை 51 பேர் உயிரிழப்பு...


சென்னையில் விளையாட்டு உட்கட்டமைப்புகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்த ரூ.25 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...


மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்போம், அறிவியலைக் கொண்டாடுவோம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு...


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சிபிஐக்கு முழுமையாக விலக்கு அளிக்கவில்லை: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு...


தமிழ்நாடு முழுவதும் 130 மையங்களில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வை 97% பேர் எழுதினர்...



Today's Headlines:

05-02-The Tamil Nadu Government directed the Tamil Nadu Pollution Control Board to implement the recommendations of the technical committee regarding the ammonia gas leak at Coromandel International Limited in Ennore...


At least 51 people have died in the wildfires in central Chile. 


Chief Minister M. K. Stalin's order to allocate funds of Rs. 25 crores to raise sports infrastructure to international standards in Chennai...


Let's inculcate scientific spirit in students and celebrate science: Minister Anbil Mahesh's false speech... 


CBI not fully exempted from RTI Act: Delhi High Court Verdict...


 97% passed the Graduate Teacher Eligibility Test held at 130 centers across Tamil Nadu...