பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01-04-2024...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01-04-2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:


இனியவைகூறல்

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: இனியவைகூறல்.


குறள் 96:


அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்.


விளக்கம்:


தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.




பழமொழி : 


As you sow, so you reap


 வினை விதைத்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான்...



பொன்மொழி:


ஒவ்வொருவரும் அசலாக பிறந்து, பிறருடைய நகலாக இறக்கிறோம்.



அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது?  


விடை: வேளாண்மை     


 மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?


விடை: ஆந்திரப்பிரதேசம்


ஈராக் நாட்டின் தலைநகரம்


விடை: பாக்தாத்


இந்திய அறிவியற் கழகம் அமைந்துள்ள நகரம்?


விடை: பெங்களூர்


 ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு?


விடை: 1919




ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Marriage - திருமணம் 

Match Box - தீப்பெட்டி 

Measure - அளந்து 

Meat - மாமிசம் 

Medicine - மருந்து 

Meet - சந்திப்பு



ஆரோக்கியம்


  மருத்துவப் பரிசோதனைகள்


உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு போன்றவை உங்கள் இதய, ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சினையை மருத்துவப் பரிசோதனை செய்யாமல் உங்களால் கண்டறிய முடியாது. அதனால், 40 வயதுக்கு மேலானவர்கள் ரத்த அழுத்தம், கொழுப்புச்சத்து அளவுகள், நீரிழிவு போன்ற மருத்துவச் சோதனைகளைக் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது செய்துகொள்வது அவசியம்.



இன்றைய சிறப்புகள்


ஏப்ரல் 1


1973 – புலிகள் பாதுகாப்புத் திட்டம் இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கப்பட்டது.


1976 – ஆப்பிள் நிறுவனம் ஸ்டீவ் ஜொப்ஸ், ஸ்டீவ் வாஸ்னியாக், ரொனால்டு வைன் ஆகியோரால் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.


1981 – சோவியத் ஒன்றியத்தில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.


1997 – ஏல்-பாப் வால்வெள்ளி பூமியின் சுற்றுப்பாதை வீச்சைக் கடந்தது


2004 – கூகிள் நிறுவனம் ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியது.


பிறந்த நாள் 

-



நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்

ஏப்ரல் முட்டாள்கள் நாள்

மர நாள் (தன்சானியா)

தேசிய நாள் (சைப்பிரசு)

ஒடிசா நாள் (ஒடிசா)



நீதிக்கதை 


எதிரியால் ஏற்பட்ட விளைவு 


ஒரு காட்டுக்கு நடுவில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றங்கரையில் ஒரு மரத்தில் ஒரு கொக்கு தன் மனைவியுடன் வசித்து வந்தது. ஒவ்வொரு முறையும் பெண் கொக்கு கூடுகட்டி முட்டைகளை இடும் போதெல்லாம் ஒரு பெரிய கருநாகம் அவற்றை உண்டு சென்றது. கொக்கும் அதன் மனைவியும் மிகவும் துயருற்று இருந்தன. கொக்குக்கு ஒரு நண்டு நண்பனாக இருந்தது. 


ஒரு நாள் கொக்கு நண்பனிடம் சென்று தன் பிரச்சினையைத் துயரத்துடன் கூறியது. 


“அந்தப் பொல்லாத திருடன் அடிக்கடி எங்கள் முட்டைகளைத் தின்று விடுகிறான். இதைத் தடுப்பதற்கு எனக்கு ஒரு வழியும் தெரியவில்லையே” என்று வருத்தத்துடன் நண்டிடம் முறையிட்டது. கவலைப்படாதே, என்று நண்டு அதைச் ஆறுதல்படுத்தி, பிறகு கூறியது: “என்னைப் போல் ஒரு நண்பன் இருக்கும்போது வருந்த வேண்டாம். யோசித்து நாம் ஒரு தீர்வைக் கண்டு பிடிப்போம்.” 


கொக்கின் அருகில் உட்கார்ந்து நண்டு யோசனை செய்தது. திடீரென்று துள்ளிக் குதித்து, “நண்பனே ! ஓர் அருமையான திட்டம் தோன்றி இருக்கிறது,” என்ற நண்டு கொக்கின் காதில் தன் திட்டத்தைக் கூறியது.



அதைக் கேட்டு மகிழ்ந்த கொக்கு உடனே தன் கூட்டிற்குப் பறந்து சென்றது. தன் மனைவியிடம் நண்டின் திட்டத்தை விவரித்தது. 


அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் அது மிகவும் துடிப்பாக இருந்தது. “நீ கூறுவதைப் போல் இதை நிறைவேற்ற முடியுமா?” என்று அதன் மனைவி கேட்டது. 


“நாம் செய்வதில் ஏதாவது தவறாக நிகழ்ந்து விடுமோ ? மீண்டும் நன்றாக யோசித்துப் பிறகு திட்டத்தைச் செயல்படுத்து,” என்று எச்சரித்த மனைவியின் சொற்களை அலட்சியப்படுத்தியது அந்தக் கொக்கு. திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதில் அது ஆவலாக இருந்தது. 


கொக்கு ஆற்றங்கரைக்குச் சென்றது. மீன் பிடிக்கத் தொடங்கியது. நிறைய சிறிய மீன்களைப் பிடித்தது. ஒரு கீரி வசித்து வந்த ஒரு பொந்துக்கருகில் சென்று ஒரு மீனைப் போட்டது. சிறிது தொலைவு சென்று மற்றொரு மீனைக் கீழே போட்டது. இவ்வாறு வரிசையாக மீன்களைப் போட்டவாறு தான் கூடு கட்டியிருக்கும் மரத்தருகில் வந்து முடித்தது. 



மீன் வாசனையை முகர்ந்தவாறு பொந்திலிருந்து வெளியே வந்தது கீரி. “ஆ, இதோ ஒரு மீன் !” என்று கத்தியவாறே மகிழ்ச்சியுடன் உடனே அந்த மீனை எடுத்துத் தின்றது. 


அடுத்தது, அடுத்தது என்று வரிசையாகக் கீழே கிடந்த மீன்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தின்றவாறே கொக்குகளும் பாம்பும் இருந்த மரத்தினடியில் வந்து நின்றது. 


அதற்குப் பிறகு அங்கு மீன் இல்லாததால் அங்கே நின்று சுற்று முற்றும் பார்த்தது கீரி. மரத்தினடியில் இருந்த கருநாகம் திடீரென்று அதன் கண்களில் தென்பட்டது. கீரியைப் பார்த்த நாகமும் சண்டைக்குத் தயாரானது. இரண்டிற்கு மிடையே பயங்கர சண்டை நீண்ட நேரம் நடைபெற்றது. 


இறுதியில் கீரி பாம்பைக் கொன்றது. இந்தச் சண்டையைக் கூட்டிலிருந்து பார்த்த கொக்குகள் பாம்பு இறந்தவுடன் நிம்மதியாகப் பெருமூச்சுவிட்டன.


 மறுநாள் அந்தக் கீரி அதே போல் உண்ணுவதற்கு மீன்கள் கிடைக்கும் என்ற எண்ணத்தோடு அதே வழியாக வந்தது. உணவு ஏதும் கிடைக்காமல் மரத்தடியை அடைந்தது. மரத்தின் மீது ஏறி ஏதாவது தின்பதற்குக் கிடைக்குமா என்று பார்த்தது. ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றிருந்த இரு கொக்குகளும் அந்த நேரம் திரும்பி வந்து கொண்டிருந்தன. மரத்திலிருந்து கீழே இறங்கும் கீரியைப் பார்த்தன. 


பறந்து சென்று கூட்டை அடைந்தன. இந்த முறை கீரி கொக்கின் முட்டைகளைத் தின்றிருந்தது ! 


“ஐயோ ! ஓர் எதிரியைப் பெறுவதற்காகத் தான் முதல் எதிரியை ஒழித்தோமா ? பாம்பை ஒழித்தோம். இப்போது கீரி நம் முட்டைகளை அழிக்கிறதே ! ” என்று கொக்கு வருத்தத்துடன் தன் மனைவியிடம் கூறியது. 


நீதி : எண்ணித் துணிக கருமம்




இன்றைய முக்கிய செய்திகள் 


01-04-2024 


 வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உள்ளிட்ட நால்வருக்கு பாரத் ரத்னா விருது: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்...


 அத்வானிக்கு பாரத ரத்னா விருதை அவரது இல்லத்திற்கே சென்று வழங்கினார் குடியரசுத் தலைவர்...


தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் தேர்வு தேதிகள் மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...


‘ஏஐ’ தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை: பில்கேட்ஸ் – மோடி சந்திப்பு...


கொடைக்கானலில் டால்பின் நோஸ் மீது நடந்து சென்றபோது 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர் மீட்பு...




Today's Headlines:

01-04-2024


 Bharat Ratna award to four including Agricultural Scientist M.S.Swaminathan: President Draupati Murmu presented... 


President awarded Bharat Ratna to Advani at his residence... 


Change in examination dates of school students in Tamil Nadu: School Education Department orders... 


Consultation on 'AI' technology: Bill Gates - Modi meeting... 


Rescued a youth who fell into a 100 feet ditch while walking on Dolphin Nose in Kodaikanal...