நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 - நடைபெறும் தேதிகள் அறிவிப்பு...



 பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 - தேதிகள் அறிவிப்பு...



>>> Click Here to Download Parliamentary Lok Sabha Election 2024 Schedule...



Parliamentary Lok Sabha Election 2024 - Dates Annouced...


ஏழு கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு.



மக்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு..


💥தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது...


💥ஜூன் 4 வாக்கு எண்ணிக்கை


டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ்.சாந்து கூட்டாக செய்தியாளர் சந்திப்பு


உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது...


மக்களவைத் தேர்தலில் 98.6 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 


நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.


1.5 கோடி அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர் - ராஜீவ் குமார், தலைமை தேர்தல் ஆணையர்


ஆண் வாக்காளர்கள் - 49.7 கோடி, 

பெண் வாக்காளர்கள் - 47.1 கோடி, 

மூன்றாம் பாலினம் - 48,044 பேர் உள்ளனர்.


கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை விட தற்போதைய தேர்தலில் வாக்காளர்கள் 6% அதிகம் - தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.


தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ல் நாடாளுமன்ற தேர்தல்:



வேட்பு மனுத்தாக்கல் துவக்கம்: மார்ச் 20


வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள்: மார்ச் 27


வேட்பு மனுபரிசீலனை: மார்ச் 28


திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 30


வாக்குப்பதிவு: ஏப்ரல் 19


வாக்கு எண்ணிக்கை: ஜூன் 4



*நாடாளுமன்றத் தேர்தல் தேதி விவரங்களை தலைமை தேர்தல் ஆணையர் திரு. ராஜீவ் குமார் வெளியிட்டார்.*

*இரண்டு தேர்தல் ஆணையர்களும் உடன் இருக்கின்றனர்.*

*தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பை தொடங்கிய உடனே தேர்தல் ஆணைய விதிகள் நடைமுறை வந்துவிட்டது.*

*மக்களவைத் தேர்தல் மற்றும் 4 மாநில சட்டமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது.*

*2024 மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும்.*

*தமிழ்நாட்டின் விளவங்கோடு உள்ளிட்ட   13 மாநிலங்களில் உள்ள 26 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.*

*முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டிற்கு தேர்தல்.*

*தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது.*

*வாக்கு எண்ணிக்கை ஜூன் 4  செவ்வாய்க்கிழமை*

*2100 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்.*

*2024 தேர்தலில் 96.88 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.*

*ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி.*
*பெண் வாக்காளர்கள் 47.1 கோடி.*

*1.82 புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.*

*புதிய வாக்காளர்களில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம்.*

*ஏப்ரல் 1ஆம் தேதி 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள்.*

*2.10 கோடி வாக்காளர்கள் 100 வயதை கடந்தவர்கள்.*

*85 வயதை கடந்தவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.*

*1.50 கோடி ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள உள்ளனர்.*

*10.50 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.*

*82 லட்சம் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உள்ளனர்.*

*55 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.*

*800 மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசிக்கப்பட்டு தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது.*

*தேர்தல் முறைகேடுகள் குறித்து சி.விஜில் செயல் மூலம் புகார் அளித்தால் 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.*

*KYC APP மூலம் வாக்காளர்கள் தங்கள் முழு விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.*

*1)பண பலம் .*
*2)ஆள்பலம்,*
*3)வதந்திகள்,*
*4)விதிமீறல்கள்*
.*இந்த நான்கும் தேர்தல் ஆணையம் முன் உள்ள நான்கு சவால்கள்.*

*எல்லைப் பகுதிகள் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும்.*
*போதிய பாதுகாப்பு படை போலீசார் பணியில் இருப்பர்.*

*வங்கிகள் சூரிய அஸ்தமனத்திற்கு பின் பணம் எடுத்துச் செல்லக்கூடாது.*

*டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ED& IT  கண்காணிக்கும்.*

*வாக்குக்கு பணம்,பொருள், மது வழங்குதல்  தீவிரமாக கண்காணிக்கப்படும்*
*சமூக விரோதிகளுக்கு. எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.*

*தேர்தல் பரப்புரையில் சிறார்கள் ஈடுபடுத்தக் கூடாது.*

*சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யலாம் போலீஸ் செய்திகளை பரப்ப கூடாது.*

*நட்சத்திர பேச்சாளர்கள் கண்ணியம் காக்க வேண்டும்.*

*சாதி ரீதியாகவோ, மத ரீதியாகவோ தனிப்பட்ட முறையில் விமர்சித்தோ பரப்புரையில் ஈடுபடக்கூடாது.*

*மதுபான ஆலைகளில் உற்பத்தி அளவு, விற்பனை அளவு,  கண்காணிக்கப்படும்.*

*17 ஆவது மக்களவைத் தேர்தல் ஆயுட்காலம்  வரும் ஜூன் 16ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.*