புதிய பாரத எழுத்தறிவு திட்டம் NILP 2024-25 முதல் தவணை தொகை விடுவித்தல் இயக்குநர் செயல்முறைகள்...

 

 புதிய பாரத எழுத்தறிவு திட்டம் NILP 2024-25 முதல் தவணை தொகை விடுவித்தல் இயக்குநர் செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனரின் செயல்முறைகள், ந.க. எண்: 065/ ஆ2/ 2024, நாள்: 18.07.2024


NILP- புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தினை செயல்படுத்திட தேவையான  முதல் கட்ட நிதியை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு ஒதுக்கீடு.


பொருள்‌ பள்ளிசாரா மற்றும்‌ வயதுவந்தோர்‌ கல்வி இயக்ககம்‌, சென்னை-06- "புதிய பாரத எழுத்தறிவுத்‌ திட்டம்‌ 2024-25 நிதியாண்டில்‌ செயல்படுத்துதல்‌ - திட்ட உட்கூறு வாரியாக செலவினத்‌ தலைப்புகளின்‌ கீழ்‌ அனைத்து மாவட்டங்களுக்கு முதல்‌ தவணையாக செலவின வரையறை நிர்ணயம்‌ செய்து ஆணையிடுதல்‌.


பார்வை: 1 அரசாணை (நிலை) எண்‌45 பள்ளிக்‌ கல்வித்‌ (எம்‌எஸ்‌) துறை நாள்‌.24.02.2021


2 PAB Meeting Gol Minutes of Meeting F.No.20-22/2022-AE4, MoE/ Diseal, நாள்‌.09.04.2024


3 இவ்வியக்கக இதே எண்ணிட்ட செயல்முறைகள்‌ கடிதம்‌ நாள்‌.09.07.2024


4 ஒன்றிய அரசுக்‌ கடித எண்‌. F.No.20-22/2022-AE1, நாள்‌.19.06.2024


5 அரசாணை (நிலை) எண்‌.159 பள்ளிக்‌ கல்வி (148) துறை, நாள்‌. 09.07.2024.


தமிழ்நாட்டில்‌ 2011 மக்கள்‌ தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும்‌ எழுதப்படிக்கத்‌ தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு எண்ணறிவு கல்வியை வழங்கிடும்‌ நோக்கில்‌ வயது புதிய பாரத எழுத்தறிவுத்‌ திட்டம்‌ 2022-27 அனைத்து மாவட்டங்களிலும்‌ செயல்படுத்தப்பட்டு வருகின்றது.


பார்வை -3-இல்‌ காண்‌ இவ்வியக்ககச்‌ செயல்முறைகளின்படி, 2024-25-ஆம்‌ ஆண்டில்‌ புதிய பாரத எழுத்தறிவுத்‌ * திட்டத்தை செயல்படுத்துவதற்கு 15 வயதிற்கு மேற்பட்ட எழுதப்படிக்கத்‌ தெரியாத 5,33,100 கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவுக்‌ கல்வியை வழங்கிடும்‌ வகையில்‌, இரண்டு கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டு, முதல்‌ கட்டமாக 15.07.2024 அன்று முதல்‌ கற்போர்‌ எழுத்தறிவு மையங்கள்‌ தொடங்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது.


பார்வை 4-ல்‌ மற்றும்‌ 5-ன்படி 2024-25-ஆம்‌ நிதியாண்டிற்குரிய, இத்திட்டம்‌ சார்ந்து 50% முதல்‌ தவணை நிதி மாநில அரசால்‌ இவ்வியக்ககத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இந்நிதியில்‌, பின்வரும்‌ தலைப்புகளில்‌ செலவினம்‌ மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்டங்களுக்கும்‌ இணைப்பில்‌ கண்டுள்ளவாறு 2024 - 25 ஆம்‌ ஆண்டு முதல்‌ தவணையாக செலவின வரையறை நிர்ணயம்‌ செய்து இதன்‌ மூலம்‌ ஆணையிடப்படுகிறது. 'இச்செலவின வரையறையின்படி அந்தந்த தலைப்புகளுக்கெதிரே குறிப்பிட்டுள்ள நிதி ஒதுக்கீடு மற்றும்‌ செயல்பாடுகளின்‌ அடிப்படையில்‌ திட்ட விதிகளைப்‌ பின்பற்றி செலவினங்களை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களும்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.