Panchayat Union Elementary School whose name was changed in response to people's demand - Minister Anbil Mahesh's action



 மக்களின் கோரிக்கையை ஏற்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் நடவடிக்கை


Panchayat Union Primary School whose name was changed in response to people's demand - Minister Anbil Mahesh's action


நாமக்கல்: மக்கள் கோரிக்கையை ஏற்று ‘அரிசன் காலனி’ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி என்ற பெயரை ‘மல்லசமுத்திரம் கிழக்கு’ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி என பெயர் மாற்றம் செய்து வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ். 


‘கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்’ என்ற மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வரிகளையும் குறிப்பிட்டு பெயர் மாற்றம் செய்து வைத்த அமைச்சர்  


பள்ளியின் பெயரில் இருந்த ‘அரிசன் காலனி’ -  நடவடிக்கை எடுத்த அமைச்சர் மகேஷ்


நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் பெயரில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஷ்.


நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் எனும் பகுதியில், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.


இந்நிலையில், அந்தப் பள்ளியின் பெயர், ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அரிசன் காலனி’ என்று இருந்தது. இதில், ‘அரிசன் காலனி’ என்பதை நீக்க வேண்டும் என்று அந்த ஊர் மக்களும், அந்த ஊரைச் சேர்ந்த கணேசன் என்பவரும் தொடர்ந்து போராடி வந்தனர். இவர்களின் போராட்டத்தை வழக்கறிஞர் அன்பழகன் என்பவர், அரசுக்கும் பள்ளிக்கல்வித் துறைக்கும் எடுத்துச் சென்றார்.


இதனையடுத்து முதலமைச்சரின் உத்தரவின்படி அந்தப் பள்ளியின் பெயரை ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு’ என மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது.


பெயர் மாற்றத்திற்காக போராடிய ஊர்ப் பெரியவர் கணேசனுக்கு பொன்னாடை அணிவித்த அமைச்சர், இதற்கான அரசாணையை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.


பெரியவர் கணேசன் மற்றும் வழக்கறிஞர் அன்பழகன் ஆகியோரை பாராட்டியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...