The teacher who wrote the caste name in the student's book was suspended



 மாணவரின் புத்தகத்தில் சாதி பெயரை எழுதிய ஆசிரியர் பணியிடை நீக்கம் - வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு


The teacher who wrote the caste name in the student's book was sacked - Registration of case under Prevention of Atrocities Act


திருப்பத்தூர்: குனிச்சி மோட்டூர் அரசுப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு மாணவரின் புத்தகத்தில் சாதிப் பெயரை எழுதிய ஆசிரியர் விஜயகுமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு.


விஜயகுமார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.


'தீண்டாமை என்பது ஒரு பாவச்செயல், அது ஒரு பெருங்குற்றம், மனித தன்மையற்ற செயலும் கூட' என்பதை குழந்தைகள் பள்ளிகளிலிருந்து தான் கற்கின்றனர். இந்த போதனைகள் மாணவர்களுக்கானது மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கானதும்தான். ஆனால், சாதிய பாகுபாடுகளற்ற சமூகத்தை வளர்த்தெடுக்க வேண்டிய ஆசிரியர்களே, சில நேரங்களில் சாதியத்தை உயர்த்தி பிடிப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தாங்கி பிடிப்பது சாதியத்தை மட்டுமல்ல, எதிர்கால சீரழிவையும்தான். வேலூரை அடுத்த திருப்பத்தூர் மாவட்டத்திலும் இப்படியான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.





திருப்பத்தூர் மாவட்டத்தில் மாணவரின் புத்தகத்தில் சாதி பெயரை எழுதிய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


திருப்பத்தூர் அருகே மாணவனின் புத்தகத்தில் சாதி பெயரை எழுதிய ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.



திருப்பத்தூர் மாவட்டம், குனிச்சிமோட்டூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.


அந்தவகையில், அந்தப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சிறுவன் ஒருவர், 7ம் வகுப்பு படித்துவருகிறார். இதே பள்ளியில், விஜயகுமார் என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.


இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி ஆங்கில வகுப்பு எடுக்க ஆசிரியர் விஜயகுமார் வந்துள்ளார். அப்போது, பாடத்தில் இருக்கும் இசைக் கருவிகள் தொடர்பான பாடத்தை அவர் எடுத்துள்ளார். அந்த நேரத்தில், இசைக் கருவியை வாசிப்பவர்கள் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லி பாடம் எடுத்ததாகத் தெரிகிறது. இது மட்டுமின்றி, வகுப்பு அறையில் இருந்த அந்த 7ஆம் வகுப்பு மாணவரின் பாடப்புத்தகத்தில், அந்த மாணவரின் சமூகப் பெயரையும் எழுதியுள்ளார்.


இது குறித்து மாணவன், தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கடந்த 19ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற பெற்றோர்கள், ஆசிரியரின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். ஊர் பொதுமக்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியரிடம் இதுதொடர்பாக கேட்டபோது, அவர் முறையான பதில் அளிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. பள்ளி தரப்பில் சரியான விளக்கம் அளிக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த அந்தச் சிறுவனின் பெற்றோர் மற்றும் விசிகவினர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.


குனிச்சி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவரின் சாதி பெயரை புத்தகத்தில் எழுதிய ஆசிரியரை பணி நீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.


இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, திருப்பத்தூர் தாசில்தார் நவநீதம், கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரியர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.


முற்றுகைப் போராட்டம் குறித்து அறிந்த மாவட்டக் கல்வி அலுவலர் உள்ளிட்டோர் பள்ளிக்கு நேரடியாகச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதன்பிறகு ஆசிரியர் விஜயகுமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.


 

இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஆசிரியர் விஜயகுமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுலவர் உத்தரவிட்டுள்ளார். 


மேலும், ஆசிரியர் விஜயகுமார் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...