Vaanavil Madram - Activities and guidelines for the academic year 2024 - 2025 - DSE Proceedings

 

 வானவில்‌ மன்றம்‌ - 2024 - 25ஆம்‌ கல்வியாண்டிற்கான செயல்பாடுகள்‌ மற்றும்‌ வழிகாட்டு நெறிமுறைகள்‌ - தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்‌ : 073040/எம்‌2/இ2/2022 நாள்‌. 18.09.2024


Vaanavil Madram - Activities and guidelines for the academic year 2024 - 2025 - Proceedings of Director of School Education  



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




தமிழ்நாடு - பள்ளிக்‌ கல்வித்‌ துறை

பள்ளிக்‌ கல்வி இயக்ககம்‌

அனுப்புநர்‌ 
முனைவர்‌.ச.கண்ணப்பன்‌, 
பள்ளிக்கல்வி இயக்குநர்‌, 
பள்ளிக்கல்வி இயக்ககம்‌,
பேராசிரியர்‌ அன்பழகன்‌ கல்வி வளாகம்‌,
சென்னை-6.


பெறுநர்‌

முதன்மைக்கல்வி அலுவலர்கள்‌,
அனைத்து மாவட்டங்கள்‌.


ந.க.எண்‌ : 073040/எம்‌2/இ2/2022 நாள்‌. .09.2024

பொருள்‌: பள்ளிக்‌ கல்வி - கணிதம்‌ மற்றும்‌ அறிவியல்‌ பாடங்களில்‌ கற்றலை மேம்படுத்துதல்‌ - வானவில்‌ மன்றம்‌ - 2024 - 25ஆம்‌ கல்வியாண்டிற்கான செயல்பாடுகள்‌ மற்றும்‌ வழிகாட்டு நெறிமுறைகள்‌ - தொடர்பாக.

பார்வை : அரசாணை (நிலை) எண்‌.154 பள்ளிக்கல்வித்‌ (SSA 1) துறை, நாள்‌.03.07.2024


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ கணிதம்‌ மற்றும்‌ அறிவியல்‌ பாடங்களை தானாக பரிசோதனை செய்து கற்றலை மேம்படுத்துவதற்காக திருச்சியில்‌ 2022 நவம்பர்‌ 28 அன்று வானவில்‌ மன்றம்‌ - நடமாடும்‌ அறிவியல்‌ ஆய்வகம்‌ தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில்‌ உள்ள 13,236 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ கல்வி பயிலும்‌ மாணாக்கர்கள்‌ பயன்‌ பெறும்‌ வகையில்‌ இத்திட்டம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2024-25ஆம்‌ கல்வி ஆண்டிற்கான வானவில்‌ மன்ற செயல்பாடுகள்‌ மற்றும்‌ வழிகாட்டு நெறிமுறைகள்‌ பின்வருமாறு திட்டமிடப்பட்டு உள்ளது. 



வானவில்‌ மன்றம்‌ - சிறப்பு நோக்கங்கள்‌

* 

மாணாக்கர்கள்‌ சிந்தனையில்‌ புதிய ஆய்வு மாதிரிகளை உருவாக்க ஆர்வமூட்டுதல்‌ மற்றும்‌ அவர்களால்‌ உருவாக்கப்படும்‌ மாதிரிகளுக்கு உரியகாப்புரிமையை பெற வழிகாட்டுதல்‌.


5 மாணாக்கர்கள்‌ பல்வேறு திறனறித்‌ தேர்வுகளில்‌ ஆர்வமுடன்‌ பங்கேற்க தேவையான அடிப்படை விவரங்களை வழங்கி ஊக்கமளித்தல்‌. ( International National Science and Math Olympiad, NSTSE, Geogenius, NBO, ASSET, NSEJS, HBBVS, NMMS, TRUST, Inspire Award, etc)

*. ஆய்வு மாதிரிகள்‌ தயாரித்தலில்‌ சிறந்த பங்களிப்பை வழங்கி பரிசு பெறும்‌ மாணாக்கர்களை ISRO, Kudankulam Atomic Power Station, IIT, Kavalur Observatory, CLRI போன்ற மாநில / தேசிய அறிவியல்‌ மையங்கள்‌ மற்றும்‌ ஆய்வுக்‌ கூடங்களுக்கு கல்வி சுற்றுலா / களப்பயணம்‌ அழைத்துச்‌ செல்லுதல்‌.

* புதிய செயல்திட்ட மாதிரிகளை உருவாக்கி பரிசு பெறும்‌ மாணாக்கர்களை அயல்நாடுகளில்‌ உள்ள உயர்கல்வி /அறிவியல்‌ மையங்களுக்கு பார்வையிட வாய்ப்பு அளித்தல்‌.


8 ஆம்‌ வகுப்பில்‌ உள்ள கணிதம்‌ மற்றும்‌ அறிவியலில்‌ மீத்திறன்‌ மிக்க மாணாக்கர்களை இனங்கண்டு மாதிரி பள்ளிகளில்‌ சேர்க்கை செய்து தொடர்ந்து கண்காணித்து IIT, NIT மற்றும்‌ IISC போன்ற உயர்‌ கல்வி நிறுவனங்களில்‌ சேர்க்கை செய்திட உதவுதல்‌.