வெள்ளம் அதிகம் பாதித்த இடங்களில் அரையாண்டு தேர்வு எழுத முடியாத நிலை இருந்தால் ஜனவரியில் தேர்வு - அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்ட
If it is not possible to take the half-yearly exam in flood-affected areas, the exam will be held in January - Minister Anbil Mahesh interview
"மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அரையாண்டு தேர்வு நடத்த திட்டம்" - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
வெள்ளம் அதிகம் பாதித்த மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் அரையாண்டு தேர்வு எழுத முடியாத நிலை இருந்தால் ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்பட்டும். மற்ற இடங்களில் அரையாண்டுத் தேர்வு திட்டமிட்டபடி வரும் 9-ம் தேதி முதல் நடைபெறும். 9-ம் தேதிக்குள் நிலைமை சீரடையாவிட்டால், தொடர்ந்து நீர் தேங்கியிருந்தால் ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்படும்.
அதிக வெள்ள பாதிப்பு உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், கல்வி அலுவலர்களிடம் ஆலோசித்து வருகிறோம். தலைமையாசிரியர் அலுவலகம், சான்றிதழ்கள் வைத்திருக்கும் அறைகள் தரை தளத்தில் இருந்தால் முதல் தளத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள், நோட்டுகள் விரைவில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.