INCOME TAX 2024-2025 பிடித்தம் குறித்த தகவல்கள்
வருமான வரி பிடித்தம் பிரதி மாதம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை *IFHRMS மூலம் PAY SLIP DOWNLOAD* செய்து
வருமான வரி கணக்கீட்டு படிவத்தில் பூர்த்தி செய்து வருமான வரி தொகையை அறிந்து மீதமுள்ள மாதத்திற்கு எவ்வளவு பிடித்தம் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்திட வேண்டுகிறோம்
தேவைப்பட்டால்,
*டிசம்பர் மாத ஊதியப் பட்டியலில் மாற்றம் செய்து அதற்கான COVERING LETTER ம் வைத்து அலுவலகத்திற்கு அனுப்பிடலாம்*
வருமான வரித் தொகை பிடித்தம் போதுமானதாக இருந்தால் மாற்றம் தேவையில்லை....
ரூ.10,00,000 லட்சத்திற்குள் ஊதியம் பெறுபவர்களுக்கு *பழைய முறையும்*
10,00,000 லட்சத்திற்கு மேல் ஊதியம் பெறுபவர்களுக்கு *புதிய வருமான வரி முறையும் பயனுள்ளதாக இருக்கும்*
*புதிய வரி முறையில்*
*ரூ.75,000* ரூ நிரந்தரக் கழிவு
(சென்ற வருடம் ரூ.50,000 ஆக இருந்தது)
முதல் 3,00,000க்கு NIL
3,00,000 - 7,00,000 --- 5%
(*சென்ற ஆண்டில் 6 லட்சம் வரை இருந்தது தற்போது 1 லட்சம் கூடுதலாக்கப்பட்டுள்ளது*)
7,00,000 - 10,00,000 ----- 10%
10,00,000 - 12,00,000 ----15%
12,00,000 - 15,00,000 ----20%
15 லட்சத்திற்கு மேல் -30%
இனி வரும் மாதங்களில் வருமான வரி பிடித்தத்தை சரி செய்து கூடுதலாக பிடித்தம் செய்வதை தவிர்த்திடலாம்...
*டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி 3 மாதங்களில் எவ்வளவு பிடித்தம் செய்ய வேண்டும் என்பதை நாம் கணக்கீடு செய்தால் மட்டுமே உறுதி செய்யலாம்*
கவனத்திற்காக,
*IFHRMS ல் தானாகவே கணக்கீடு செய்வதால் நமது வருமான வரி தொகை முடிவடைந்தவுடன் பிடித்தத்தை நிறுத்திடவும் வாய்ப்பு உண்டு என தகவல் இருந்தாலும் நிறைய பேருக்கு ஏற்கனவே பிடித்தம் செய்த தொகையே அதிகமாக உள்ளது*
இருப்பினும்
நாம் முன் எச்சரிக்கையாக இருப்பது பின்னர் கூடுதலாக பிடித்தம் செய்த தொகையை *REFUND* வாங்கிட தேவை இருக்காது.